Advertisement

Breaking News

Breaking News - "கெத்து காட்டிய இந்தியா" வியந்து போன உலக நாடுகள்!!!? .!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் வங்கி கணக்கு, 'லீக்'

Advertisement


Donald Trump,bank details, Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், மெக்கென்சி, தவறுதலாக வெளியிட்டு உள்ளார்.

latest tamil news



'கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அதிபர், தன் வருவாயில், 
25 சதவீதத்தை செலுத்துகிறார்' என, பத்திரிகையாளர் சந்திப்பில், மெக்கென்சி 
தெரிவித்தார். அப்போது, அவர் காட்டிய செக்கில், டிரம்பின் தனிப்பட்ட வங்கிக்
 கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. அதையும் சேர்த்து காட்டி தவறுதலாக
 அவர் வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் தனது சம்பளமான 4 லட்சம் அமெரிக்க டாலர்களில், 
25 சதவீதமான
 1 லட்சம் அமெரிக்க டாலர்களை, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு
 அளித்துள்ளார்.


"கெத்து காட்டிய இந்தியா" வியந்து போன 
உலக நாடுகள்!!!? .!!


வெறும் 3 பேர் தானா ? "கெத்து காட்டிய இந்தியா" வியந்து போன
 உலக நாடுகள்!!!? .!!கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை
 கண்டு உலக நாடுகள் வியந்து பார்க்கின்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடுந் தொற்றான கொரோனா 210 க்கும் மேற்பட்ட
 நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பத்தில் எங்களை மிஞ்சுவது யாருமில்லை என்று 
சொல்லக்கூடிய வல்லரசு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய 
சீனா மீது தீராத கோபத்தோடு இருக்கின்றன. கொரோனாவின் கோரப் பிடியில் 
சிக்கியுள்ள அமெரிக்கா செய்வதறியாது திகைத்து வருகின்றது.

உலக அளவில் 53 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கிக்
 கொண்டிருக்கின்றது. அதிகபட்சமாக அமெரிக்கா கொரோனாவால் உருக்குலைந்து
 போய் உள்ளது. அங்கு மட்டும் 16 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு,
 உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோல வல்லரசு 
நாடுகளான ஆதிக்கம் செலுத்தும் பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, 
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தீவிரம் 
தலைவிரித்தாடுகிறது.

இதுவரைக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் உலக நாடுகள் அனைத்தும் சமூக விலைகளை வலியுறுத்தி ஊரடங்கு பிறப்பித்தது கொரோனாவை கட்டுப்படுத்தி வருகின்றது. இதே நிலை தான் இந்தியாவிலும் ஆனால் மற்ற 
நாடுகளுடன் இந்தியா ஒப்பிட்டால் இந்தியா மிகவும் சிறப்பாகவே கொரோனவை 
கையாண்டு வருகின்றது. குறிப்பாக வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் உயிரிழப்பு உலகநாடுகளை வியப்படையச் செய்துள்ளது.

இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட இந்தியா
 கொரோனாவை மிகவும் நுட்பமாக கையாண்டு வருவது புள்ளிவிவரத்தில் 
தெரிகின்றது. அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி,
 ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இந்தியாவின் உயிரிழப்பு விகிதத்தை அவர்களால் கற்பனை கூட பண்ண முடியாது. அதே போல சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதும் இந்தியாவே சிறப்பானதாக இருந்துள்ளது.
புள்ளி விவரம் படி பார்த்தல் :
அமெரிக்கா:
பாதிப்பு - 1,645,094,
இறப்பு - 97,647,
1மில்லியனுக்கு இறப்பு - 295
பிரேசில்:
பாதிப்பு - 332,382,
இறப்பு - 21,116,
1மில்லியனுக்கு இறப்பு - 99
ரஷ்யா:
பாதிப்பு - 326,448,
இறப்பு - 3,249,
1மில்லியனுக்கு இறப்பு - 22
ஸ்பெயின்:
பாதிப்பு - 281,904,
இறப்பு - 28,628,
1மில்லியனுக்கு இறப்பு - 612
பிரிட்டன்:
பாதிப்பு - 254,195,
இறப்பு - 36,393,
1மில்லியனுக்கு இறப்பு - 536
இத்தாலி:
பாதிப்பு - 228,658,
இறப்பு - 32,616,
1மில்லியனுக்கு இறப்பு - 539
பிரான்ஸ்:
பாதிப்பு - 182,219,
இறப்பு - 28,289,
1மில்லியனுக்கு இறப்பு - 433
ஜெர்மனி:
பாதிப்பு - 179,713,
இறப்பு - 8,352,
1மில்லியனுக்கு இறப்பு - 100
இந்தியா:
பாதிப்பு - 125,149,
இறப்பு - 3,728,
1மில்லியனுக்கு இறப்பு - 3
சீனா:
பாதிப்பு - 82,971,
இறப்பு - 4,634,
1மில்லியனுக்கு இறப்பு - 3
கொரோனா உயிரிழப்புகளை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் 10 லட்சம் 
மக்களுக்கு எத்தனை பேர் உயிரிழக்கின்றார்கள் என்ற தகவலை மேற்காணும்
 புள்ளி விவர்ம காட்டுகின்றது. இதில் சீனாவும் 10 லட்சம் பேருக்கும் 3 என்ற
 எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்தியாவை விட சீனாவில் 
கொரோனா பாதிப்பு குறைவு, உயிரிழப்பு அதிகம் என்பதால் இந்தியாவே சீனாவை 
விட நல்ல சிகிச்சை கொடுத்து வருகின்றது.

பாக்., விமான விபத்தில் பலி 97 ஆனது

கராச்சி : பாகிஸ்தானின் கராச்சியில், சர்வதேச விமான நிலையம் அருகே, வீடுகள்
 மீது விமானம் விழுந்து நொறுங்கியதில், பலியானோர் எண்ணிக்கை 97 ஆக
 உயர்ந்துள்ளது. இருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர். அண்டை நாடான பாகிஸ்தானில், லாகூரில் இருந்து, 91 பயணியர் மற்றும் எட்டு பணியாளர்களுடன்,
 'ஏர்பஸ் ஏ 320' விமானம், நேற்று முன்தினம் கராச்சி புறப்பட்டது. அங்குள்ள, ஜின்னா 
சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் முன், செயலிழந்த விமானம், 
குடியிருப்புகள் மீது விழுந்தது. நேற்று முன் தினம் துவங்கிய மீட்புப் பணியில்,
 97பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: விபத்தில், விமானத்தில் இருந்த, 91 பயணியர் உள்ளிட்ட, 97 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் வங்கியின் தலைவர், ஜாபர் மசூத் உள்ளிட்ட இருவர், அதிர்ஷ்டவசமாக 
காயங்களுடன் தப்பியுள்ளனர். விபத்தில் பலியான, 19 பேர் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்; மற்றவர்களை கண்டறியும் பணி தொடர்கிறது. அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்து போன உடல்களில், டி.என்.ஏ., எடுக்கப்பட்டு, அடையாளம் காணும் முயற்சியும் நடந்து வருகிறது. விமானம் கீழே விழும் முன், அதன் இறக்கைகள் வீடுகளை சேதப்படுத்தியது.

விமானமும் விழுந்தததால், அப்பகுதியில், 25 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. 
இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.விபத்து நடந்த நேரத்தில், பெண்கள்
 பலரும், வீடுகளில் ரம்ஜான் தொழுகையில் இருந்துள்ளனர். இவ்விபத்தில், 
30க்கு மேற்பட்ட 
பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை;
 இதற்காக நால்வர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சிக்கிம் தனிநாடு : டில்லி விளம்பரத்தில் அறிவிப்பு

புதுடில்லி: நேபாளம் ,பூடான் போன்று சிக்கிம் தனி நாடு என்று டில்லி அரசு சா்ரபில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



டில்லியில் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒன்றை செய்தி தாள்களில் வெளியிட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்று தனி நாடை போன்று இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும்
 தனி நாடு என அறிவிப்பு வெளி்யிடப்பட்டிருந்தது.

இதனை கண்ட சிக்கிம் மாநில தலைமை செயலாளர் சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு
 மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்றில் இருந்து நமது 
பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் மக்களுக்கு இந்த 
விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் 
எனவும் சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு 
விளம்பரத்தை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தனது டுவிட்டர் பக்கத்தில் சிக்கிம் இந்தியாவின் ஒருபகுதி. இந்த பிழை கண்டிக்கத்தக்கது. கடந்த வாரத்தில் தான் மாநில தினம் கொண்டாடப்பட்டது. இதனை டில்லி அரசு சரி செய்ய வேண்டும் பதிவிட்டு உள்ளார்.


This advertisement published by the Delhi Government in various print media mentions Sikkim along with countries like Bhutan and Nepal. Sikkim has been a part of India since 1975 and celebrated the State Day just a week ago.


Sikkim is a part of India and should not be sethis is condemnable and I would request the Delhi Government to rectify this issue.@CMODelhi @AamAadmiParty

இதனிடையே டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் இது போன்ற பிழைகள் பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்ப பெற பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்..

latest tamil news



டில்லி மாநில துணை நிலை கவர்னர் அனில்பைஜால் சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என டுவிட்டரில்பதிவிட்டு உள்ளார்.



கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் 'டுவின்ஸ்'


woman, birth, twins, covid-19, coronavirus, coronavirus patients, Newborn twins, Indore hospital, MP, Madhya Pradesh, Maharaja Tukojirao Holkar Hospital, MTH, corona, indore, corona patient, corona spread


இந்தூர்: ம.பி.,யில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில்
 இரட்டை குழந்தைகள் பிறந்தது.

ம.பி.,யில் இதுவரை 6,170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 272 பேர்
 பலியாகி உள்ளனர். இந்நிலையில், ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

latest tamil news



இந்நிலையில், இன்று அவருக்கு சுகப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். தாயும், சேயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு; பலி 100ஐ தாண்டியது

Advertisement


Tamilnadu, Corona Cases, Death Toll, Discharge, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, new corona cases, positive cases, corona patients, corona death, corona in TN, Tamil Nadu, TN districts, TN news, health, disease,corona news, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, பலி, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 23) ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா வைரஸ் 
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு
 15,512 ஆகவும், பலி எண்ணிக்கை 103 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 759 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மஹாராஷ்டிரா - 24 பேர், ராஜஸ்தான் - 6 பேர், மேற்குவங்கம் -3 பேர், டில்லி, தெலுங்கானா, உ.பி., ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர், பிலிப்பைன்சில் இருந்து வந்தவர்கள் 5 பேர், லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

latest tamil news


ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக 12,155 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 948 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 13,286 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,278 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








மஹா.,வில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Advertisement


Maharashtra, Mumbai, covid-19, coronavirus, corona, corona outbreak, corona updates, new corona cases, positive case, corona patient, corona spread, corona test, BMC, corona death, corona in Maharashtra, india, மும்பை, மஹாராஷ்டிரா, கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(மே 23) மட்டும் 2,608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 47,190 ஆக அதிகரித்தது. 60 பேர் இன்று உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 1,577 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 821 பேர் மீண்டனர்.

latest tamil news

மும்பையில் மட்டும் 28,817 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை அங்கு 949 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் ; தலைமை காஜி



தமிழகம், திங்கள் கிழமை, மே.25, ரமலான், தலைமை காஜி, Eid-ul-Fitr, muslims, religion, Tamil Nadu, TN, Ramadan

சென்னை: தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசு தலைமை காஜி வெளியிட்டது, வரும் 24, 25ம் தேதிகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ரமலான் பிறை இன்று தென்படாததால் வரும் திங்கள்கிழமை (மே.25) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இவ்வாறு தலைமை காஜி தெரிவித்தார்.

latest tamil news

திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக 
குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.

இதனிடையே பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான இணைய தள முகவரியையும் மாற்றி உள்ளது. இதன்படி http:/ ttdsevaonline.com என்ற முகவரி தற்போது
http:/ tirupatibalaji.ap.gov.in என்று மாற்றப்பட்டு உள்ளது.


latest tamil news


இது குறித்து எதிர்கட்சியான ஜனசேனா, அரசு திருப்பதி கோவிலை தனது கட்டடுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி உள்ளது.

தனிமை முகாம்களுக்கு செல்லாவிட்டால் சிறை ; மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை


இம்பால் : கொரோனா பாதிப்பு காரணமாக மணிப்பூருக்கு திரும்பும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த தனிமை முகாம்களுக்கு செல்லாமல் விதி மீறலில் ஈடுபட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.


latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சிக்கி
 தவித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பணிக்காகவும், கல்விக்காகவும்,
 மருத்துவ சிகிச்சைக்காகவும் வர்த்தகத்துக்காகவும் சென்ற மணிப்பூர் மக்கள் அங்கியே சிக்கிவிட்டனர். இவர்கள் சொந்த மாநிலம் திரும்புவதில் பெரும் சிரமம் இருந்தது.

வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஷ்ராமிக் ரயில்கள் 
மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் 
பல்வேறு நகரங்களுக்கும் மக்கள் திரும்புகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து 
சொந்த ஊர்களுக்கு வரும் அம்மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் இதற்காக பிரத்யேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, மணிப்பூரிலும், 14 நாட்கள் தனிமைப்படுத்த, தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்.,19 வரை நோய் தொற்று இல்லாத மாநிலமாக மணிப்பூர் இருந்து. பின் நோய் தொற்று பல விதங்களில் பரவ துவங்கியது. மேலும் மாநிலத்துக்குள் வர விரும்பும்மக்களுக்காக மணிப்பூர் அரசு 
தனியாக இணைதளம் உருவாக்கி அதில் பதிவு செய்ய உத்தரவி்ட்டது.


latest tamil news
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து மணிப்பூருக்கு வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம். தனிமை முகாமுக்கு 
செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்.பாதிப்பு அதிகமாக இருந்தால் தொடரந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில் வீட்டினுள் 
தனிமைப்படுத்தப்பட வேண்டும். மணிப்பூரில் கொரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம். பரிசோதனை மையங்கள் மூலம் நாள் தோறும் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 800 மாதிரிகள் வரை எடுக்கப்பட்டு பரிசோதிக்கப் படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.





உணவுப்பொருளை பதுக்காதீர்


உணவு பொருட்களை பதுக்குபவர்கள் சமுதாயத்துக்கு கொடிய பாவத்தைச் செய்கிறார்கள். இவர்களுக்கு வறுமையும், தொழு நோயும் வரும் என எச்சரிக்கிறார் நாயகம்.
அரிசி, பருப்பு முதலிய அத்தியாவசியப் பொருட்களை பதுக்காமல் மக்களின் தேவைக்கு விற்கும் வியாபாரி இறைவனின் பேரருளைப் பெறுவர். தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உணவுப் பொருட்களை பதுக்கியவருக்கு அம்மை போன்ற கொடிய நோய் ஏற்படும். அவர்களின் நாற்பது நாள் தொழுகையை இறைவன் ஏற்பதில்லை. 


மது போதையில் போலீஸை தாக்கிய வாலிபர்

 கைது

மது போதையில் போலீஸை தாக்கிய வாலிபர் கைது!!!!கோவை காளாம்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால், பிடிக்க சென்ற போலீஸை தாக்கிய வாலிபரை பேரூர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை காளாம்பாளையம் அருகே உள்ள செட்டியார் தோட்டம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் அடிப்படையில், பேரூர் போலீஸ் ராகவேந்திரன் அங்கு விசாரணை சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீப்(38) என்ற வாலிபர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதை கண்ட ராகவேந்திரா திலீப்பை பிடிக்க முயன்றார். அப்போது அவரை ஒறுமையில் பேசி தாக்கி உள்ளார். இதையடுத்து ராகவேந்திர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின் அங்கு வந்த சக போலீஸார் திலீப்பை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தமிழகத்திற்கு சென்னை தவிர்த்து 4 நான்கு  ரயில்

🔴 தமிழகத்திற்கு சென்னை தவிர்த்து 4 நான்கு  ரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்
கோவை - மயிலாடுதுறை
மதுரை - விழுப்புரம்
திருச்சி - நாகர்கோவில்
காட்பாடி - கோவை 
அறிவிப்பு விரைவில் வரும் என தகவல்
இன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள:

www.nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks