Breaking News - லடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா
லடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா

லடாக் : இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து தனது வீரர்களை குவித்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நீண்டு வருகிறது. நாட்டில் சிக்கிம் மற்றும் லடாக் போன்ற எல்லை பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் நிலைகளில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அதிகப்படியான பாதிப்புகள் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சீன அரசின் அலட்சியமே காரணம் என பல தரப்புகளும் குற்றம் சாட்டி வருகிறது. இதை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல்களை நடத்துவது, எல்லை பகுதிக்குள் வீரர்கள் நுழைவது, ட்ரோன்கள் மூலம் நமது பகுதிகளை கண்காணிப்பது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் சீனா
ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் சீனா 100 க்கும் மேற்பட்ட அத்துமீறல்களை செய்துள்ளது.
படைகள் குவிப்பு
இந்நிலையில் லடாக் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன வீரர்களை அந்நாட்டு அரசு குவித்து வருகிறது. சீனாவின் இந்த செயல்களால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது. பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீனா வீரர்கள் தங்கும் டெண்ட்களை அமைத்துள்ளது.
100 டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்து வைத்திருப்பது தெரிகிறது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்நாட்டு அரசு போரை தொடுக்க விரும்புவதாக தெரிகிறது. இதனால் இரு நாடுகளுக்கும்
இடையே தொடர்ந்து பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளையும் 100 க்கும் மேற்பட்ட அளவில் அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் இந்தியா - சீன எல்லைகளில் குறிப்பாக 4 இடங்களை அந்நாட்டு அரசு குறி வைக்கிறது. இதற்கு முன்பு அந்த பகுதிகளில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. லடாக் எல்லையில் சீனா குறி வைத்துள்ளதால் அந்த பகுதியில் ராணுவ தளபதி நரவானே அங்கு சோதனை நடத்தினார். லடாக்கின் லே எல்லையில் சோதனை நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. லடாக் பகுதியில்இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமாலும் பிரச்சனை வெடிக்கலாம் எனதெரிகிறது.

ஏற்கனவே சிக்கிம் எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே கடந்த வாரம் பிரச்னையால் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் நகு லா பகுதியில் சண்டை வந்தது. கடந்த வாரம் இந்திய எல்லைக்குள் சீன அரசு போர் விமானங்களை அனுப்பியதும் அத்துமீறியதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின்கட்டணம் உயர்வு

அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு
மேல் ஒரு யூனிட்டுக்கு 5 காசுகள் உயர்த்தப்படுகிறது. வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் 10 காசுகள் உயர்த்தப்படுகிறது. மின்கட்டண உயர்வு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 5 காசுகள் முதல் 30 காசுகள் வரை இருக்கும் என யூனியன்
பிரதேசத்திற்கான மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவியுள்ள நிலையில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ள
ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணஉயர்வை எதிர்க்கட்சிகள் திரும்ப பெற வலியுறுத்தி உள்ளன. மின்கட்டண உயர்வுக்குபொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாக்.,கில் கொரோனா பாதிப்பு 50
ஆயிரத்தை தாண்டியது
இஸ்லாமாபாத் : கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் பலியாகினர் எனவும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை54,601 ஆக உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து 50 ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 32 பேர் நோய் தொற்றால் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்தது. இதனால்பாக்.,கில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,601 ஆகஅதிகரித்தது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிந்துவில் 21,645 பேர் , பஞ்சாப்பில் 19,557 பேர் , கைபர் பக்துவாவில் 7,685 பேர் மற்றும் பலுசிஸ்தானில் 3,306 பேர் , இஸ்லாமாபாத்தில்1,592 பேர் , கில்கித்-பல்திஸ்தானில் 619 பேர் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 197பேர் பாதிக்கப் பட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் 17,198 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மேலும் 473,607 பேர் பரிசோதிக்கப்பட்டனர். மேலும் சமூகஇடைவெளியுடன், முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்

மே.25 முதல்(நாளை) உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசுவழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா?என்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும்
. இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள், தமிழக அரசின்இ-பாஸ் பெற வேண்டியது அவசியம். இ-பாஸில் 8 விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கும்.விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும். 14நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சொந்த வீடு இல்லாதவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையத்தில் சேரவேண்டும்.
திருச்சியில் இருந்து நாளை விமானங்கள் இயக்கப்படும். சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை
விமான நிலைய வாசல்களில் மாவட்ட ஆட்சியர்கள் சோதனை மையம் அமைக்கவேண்டும்.பயணிகள் செல்லும் காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். தேவையான பயணிகளுக்கு சக்கரநாற்காலி வழங்கப்படும்.
தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை
தாக்கி பாகன் உயிரிழப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை திடீரென மதம் பிடித்ததில்பாகனை மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் தெய்வானை என்ற யானையை பாகன் காளிதாசன்,ராஜேஷ் என இருவர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கோயில் யானை யை குளிக்க வைக்க அழைத்துச் சென்ற போது திடீரென மதம் பிடித்ததில், காளிதாஸை தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். மற்றொருவரான ராஜேஸ்
யானையை கட்டுப்படுத்தி கட்டி வைத்தார். யானை தாக்கி பாகன் உயிரிழந்ததுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

கேரளாவில் இன்று 53 பேருக்கு
கொரோனா உறுதி
திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா
உறுதி செய்யப்பட்டதால், அங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை
322 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, மாநிலத்தில்பதிவான இரண்டாவது அதிகபட்ச தொற்று ஆகும்.
ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் தலா 4 பேருக்கும்,மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், திருவனந்தபுரம்,
கண்ணூரில் தலா 12 பேருக்கும், கோழிக்கோட்டில் ஒருவருக்கும், கொல்லத்தில்3 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 2 பேருக்கும் இன்று கொரோனா உறுதியானது. அதில் 18 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். ஒமனில் இருந்து 3 பேரும், ஐக்கிய அரபு
எமீரேட்சில் இருந்து 11 பேருக்கும், சவுதியில் 3 பேருக்கும், குவைத்தில் இருந்து
ஒருவரும் வந்துள்ளார்.29 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தனர். 19 பேர் மஹாராஷ்டிராவில்இருந்தும் ,5 பேர் குஜராத்தில் இருந்தும், 3 பேர் தமிழகத்தில் இருந்தும், ம.பி., மற்று டில்லியில் இருந்து வந்த தலா ஒருவரும் வந்துள்ளனர். மற்ற 5 பேர் தொடர்பு மூலம் பரவியது.இதனையடுத்து மாநிலத்தில் கொரோனாவினால் சிகிச்சைபெறுபவர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும்5 பேர் குணமடைந்து வீடு
திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக
அதிகரித்துள்ளது.தற்போது வரை பல மாவட்டங்களில் 95,394 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.94,662 வீட்டு கண்காணிப்பிலும் 732 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில்உள்ளனர். இதுவரை
53,875 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 52,355 பேருக்கு தொற்று
இல்லை என்பது உறுதியானது.

மும்பையில் இருந்து திருச்சூருக்கு வந்த 73 வயதான பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று உயிரிழந்ததை தொடர்ந்துஅங்கு உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் ஒரே நாளில் மேலும்
119 பேர் பலி
ரோம் : கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில்119 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்திவருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடி கொரோனா ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களை கொன்று குவித்தது. இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடந்த24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 119 பேர்பலியாகினர். இத்தாலியில் முன்பை விடதினசரி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,735 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,29,327 ஆக
அதிகரித்தது.

இத்தாலியில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,840ஆக உள்ளது. இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், 2,120 பேராக மேலும் அதிகரித்தனர். நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,752 ஆக உள்ளது. நாட்டில் 572 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 23 பேர் குறைந்ததாக கூறப்படுகிறது. நாட்டில் 8,695 பேர்பரிசோதிக்கப்பட்டு தொற்று நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் இந்திய ஆசிரியர்
கொரோனாவுக்கு பலி

அபுதாபி: அபுதாபியில் உள்ள பள்ளியில் மூத்த ஹிந்தி ஆசிரியராக இருந்தவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
இந்தியாவை சேர்ந்த 50 வயதான ஹிந்தி ஆசிரியர், அபுதாபியில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைமேற்கொண்டு வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் அவரது மனைவி, இவர்களது குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிலையில் நோய்த் தொற்றால்
பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு வந்தார். அவரது வகுப்புகளில் கலந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். மாணவர்களுக்கு சிறந்ததை ஊக்குவிக்கும் அவரை இழந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர்களுக்கு இரங்கலைதெரிவிப்பதாகவும் கூறினர்.
பிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50
ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்
புதுடில்லி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது மாத சம்பளத்தில் இருந்து, அடுத்த ஒராண்டிற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளார். இதற்காக பாதுகாப்புஅமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்படி ஒரு மாதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட 'பிஎம் கேர்ஸ்' நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பலரும் நிதி அளித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரணமாக அளித்தனர்.இதனை தொடர்ந்து, பிபின் ராவத், அடுத்த ஒராண்டிற்கு, தனது மாத சம்பளத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் பிடித்து கொள்ளும்படி , கடந்த மார்ச் மாதம்,பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்று கொண்டு, ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்து, அது 'பிஎம்கேஸ்' நிதியில் சேர்க்கப்பட்டதாக பதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள், ஒராண்டிற்கு, மாத சம்பளத்தில், ஒரு நாள் சம்பளத்தை, 'பிஎம்கேர்ஸ்' நிதிக்கு தாமாக முன்வந்து வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், மற்ற உயர் அதிகாரிகளையும் ஊக்குவிக்கவே , ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை 'பிஎம்கேர்ஸ்'க்கு வழங்கியுள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரும், கடலோர காவல்படையின் முன்னாள் உறுப்பினருமான ராஜேந்திரசிங்கும், தனது சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை நீஎம் கேர்ஸ் நிதிக்குவழங்கியுள்ளார். ராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் ஏராளமான உயரதிகாரிகளும் நிதி வழங்கி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், ஆயுதப்படைகள் சார்பில் முன்னின்று செயல்படும் பிபின் ராவத், சுகாதார அமைச்சகம் சார்பில் நடக்கும்கூட்டத்தில் பிபின் ராவத் கலந்து கொள்கிறார். கொரோனாவுக்கு எதிரானபோராட்டத்தில் , முப்படையினரை தயார் படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் 16,277 பேருக்கு கொரோனா:
111 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 24) மேலும் 765 பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு16,277 ஆகவும், பலி எண்ணிக்கை 111 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
உறுதியானது. இதில் மஹா.,வில் - 39 பேர், மேற்குவங்கத்தில் - 2 பேர், டில்லி, கேரளா, கர்நாடகா, பிலிப்பைன்ஸ், துபாய், லண்டனில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும்என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 பரிசோதனை
மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,275 மாதிரிசோதனையிடபட்டுள்ளன.
மொத்த கொரோனா தொற்றுபாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,003 பேரும், 13 முதல் 60 வயதுக்குள்உள்ளவர்கள் 13,916 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,358 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அதிகரித்து
வரும் 'கொரோனா'
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 9 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்தது.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.31லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,867 பேர்
உயிரிழந்துள்ளனர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய
அரசு மே 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஊரடங்கையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.பி., இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய கம்பெனிகள் படைப்பிரிவினர், எஸ்.எஸ்.பி. எனப்படும் சாஸ்த்ர சீமா படை உள்பட பாராமிலிட்ரி படைவீரர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(மே 24) ஒரே நாளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பிற்குள்ளான சி.ஆர்.பி.எப். வீரர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 220 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 2 பேர் பலியாகி உள்ளனர்.
பிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகமாக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில்உள்ளது. சில நாட்களுக்கு முன் அடுத்ததாக அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2 வது இடத்திலும், பிரேசில் அடுத்த இடத்திலும் இருந்தது.

ஆனால் தற்போது பிரேசிலில் உச்சகட்டமாக கொரோனா கோர தாண்டவம்ஆடி ஆயிரக்கணக்கானவர்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் (கடந்த 24 மணிநேரத்தில்) ஒரே நாளில் பிரேசிலில் 3,047 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,937 ஆக அதிகரித்தது. இதனால் அதிக பாதிப்புகளுடன் பிரேசில், ரஷ்யாவை முந்தி சென்றது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மளிகைப் பொருட்கள்
விற்பனை: ரிலையன்ஸ் துவக்கம்

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிற்குதேவையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஜியோமார்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் தன் விற்பனையை துவங்கி உள்ளது. இதற்குமுன்னோட்டமாக மும்பையின் சில பகுதிகளில் கடந்த மாதம் முதலே பொருட்கள்வழங்கும் சேவையை துவங்கியது. முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட நகரங்களில்இந்த சேவை துவங்கப்பட உள்ளது

ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா , ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வூகான் ஆய்வகத்தில் இருப்பது வெளவால்
வைரஸ்கள் - கொரோனா இல்லை!
வூகான்: சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலில் கிளம்பிய வூகான் நகரில்உள்ள வைரஸ் ஆய்வகத்தில் வவ்வால் கொரோனா வைரஸ்களின் 3 வகைகள் இருப்பதாகவும், ஆனால் அவை எதுவும் கொரோனா வைரசுடன் ஒத்துப்போகவில்லைஎன வைரலாஜி நிறுவனத்தில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொடிய உயிர்கொல்லி வைரஸான இது முதலில் வெளவால்களில் உருவாகி பின்னர் மற்றொரு பாலூட்டிகள் மூல மனிதர்களுக்கு பரவி இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகம் தான் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட பல தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் வூகான் வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாங் யானி, கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசின் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதாக டிரம்ப் மற்றும் சிலர்கூறுவது முற்றிலும் கட்டுக்கதை. சார்ஸ் வைரஸ் பரவிய 2004-ம் ஆண்டு முதல், அதன் மூலத்தை கண்டறிய வெளவால்களின் கொரோனா வைரஸை ஆராய்ந்து வருகிறோம்.தற்போது எங்களிடம் மூன்று வகை வெளவால் வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை புதிய கொரோனா வைரஸின் மரபணு உடன் அதிகபட்சமாக 79.8% மட்டுமே ஒத்துப்போகிறது. டிசம்பர் 30 தேதி அறியப்படாத மாதிரிகளை பெற்றோம். ஜனவரி 2-ம் தேதி வைரஸின் மரபணு வரிசையை நிர்ணயித்தோம். ஜனவரி 11-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்துக்கு நோய்க்கிருமி பற்றிய தகவல்களை சமர்ப்பித்தோம்.
அதற்கு முன்பு இந்த வைரஸை சந்தித்ததில்லை, ஆராய்ச்சி செய்ததில்லை அல்லது வைத்திருக்கவில்லை. எங்களிடம் இல்லாதபோது அது எப்படி எங்கள் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கும்? உண்மையில், எல்லோரையும் போலவே, எங்களுக்கும் கூட வைரஸ் இருப்பது தெரியாது. இவ்வாறு கூறியுள்ளார்.
தெலுங்கானா அரசு நடவடிக்கை
ஐதராபாத் : கொரோனா ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்தஊருக்கு செல்ல தெலுங்கானா அரசு சிறப்பு ரயில்கள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவிலும் நோய் பரவுதலை கட்டுப்படுத்தவும், கொரோனா தாக்கம் காரணமாக சிக்கி தவிக்கும் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு பலகட்ட நடவடிக்கையை முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு மேற்கொள்கிறது. இந்நிலையில் ஊரடங்கால் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த (வெளி மாநில) தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 41 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மற்ற மாநிலங்களில் இருந்தும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. சிறப்பு ரயில்கள் மூலம் தெலுங்கானாவில் நேற்று 46 ரயில்களை இயக்குவதன் மூலம் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வரை தங்களது வீடுகளை அடைய உதவுவதற்கு சிறப்பான நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. மாநிலத்தில் நாம்பள்ளி, கட்கேசர், லிங்கம்பள்ளி, செகந்திராபாத், கச்சேகுடா மற்றும் காசிப்பேட்டை உள்ளிட்ட
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு வெளி மாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, நாம்பள்ளி ரயில்நிலையத்தில் இருந்து ஆறு சில சிறப்பு ரயில்களை தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், மேலும் 40 ரயில்கள் மாநிலத்தின் பிற ரயில் நிலையங்களிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு புறப்படுகின்றன. "நள்ளிரவுக்குள் அனைத்து ரயில்களும் புறப்பட்டு, சுமார் 50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்,". இன்றுவரை, மாநிலத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில்
இருந்து இயக்கப்படும் 88 ரயில்கள் மூலம் 1.22 லட்சத்திற்கும் மேற்பட்ட
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை அடைந்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக மாநில அரசாங்கத்தில் பதிவுசெய்தவர்கள். பாதிப்புகள் குறைந்ததும் மீண்டும் நகரத்திற்கு திரும்ப விரும்புகின்றனர். ஒவ்வொரு புலம் பெயர்ந்த தொழிலாளருக்கும் ரயில்களில் ஏறுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப் படுகிறது. அவர்களுக்கு இரண்டு உணவு பாக்கெட்டுகள் மற்றும் மூன்று லிட்டர் குடிநீர் மற்றும் பழங்களை மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது
என்றார். பயணத்தின் போது உணவு ஏற்பாடுகளை ரயில்வே கவனித்து வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே போலியான பதிவு
எண் கொண்டு சிமெண்ட் ஏற்றி வந்த
2 லாரிகள் பறிமுதல் :
வாணியம்பாடி அருகே போலியான பதிவு எண் கொண்டு சிமெண்ட் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் ஓட்டுநர்கள் இருவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புலவர் பள்ளி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக போலி
பதிவெண்கள் கொண்டு சிமெண்ட் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல்செய்தனர்லாரி ஓட்டுனர்கள் இருவர் கைதுஆலங்காயம் போலீசார் விசாரணை
நிவராண உதவி
திருப்பத்தூர் மாவட்ட 700 விளையாட்டு வீரர் மற்றும் வீரங்கனைகளுக்கு கொரோன நிவராண உதவி பொருட்களை பத்திரபதிவு துறை அமைச்சர் திரு K.C வீரமணிஅவர்கள் வழங்கினார்,உடன் திருப்பத்தூர் மாவட்ட வலிபால் சங்க தலைவர் S.P. சீனிவாசன் அவர்களும்,K.S.சிவபிரகாசம்,தடகள சங்க செயலாளர் அவர்களும் பார்த்தீபன்,கலைவாணன்,அழகரசு,உதயகுமார்,சங்கர்,சந்திரன்,சரவணன்,
பாண்டியன்,கிருஷ்ணமூர்த்தி,அருள்,அண்ணாமலை
தாவீத்,ஜெயசந்திரன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்,
இந்த விழாவிற்கான ஏற்பாட்டை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கபடி கழக.இணை செயலாளரும்,PK Sports Club நிறுவனருமான திரு.மதன்குமார் அவர்கள் செய்திருந்தார்.
காவல் துறையின் எச்சரிக்கைச் செய்தி:
குற்றம் செய்யும் எண்ணத்தில் சிலர் வீடு வீடாக வந்து , மயக்க மருந்தில்
நனைக்கப்பட்ட முகக் கவசத்தை எடுத்து வந்து, அதை வீட்டிலுள்ளவர்களிடம் கொடுத்து , வீட்டிலுள்ளவர்களை அணிந்துகொண்டு சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்படி வற்புறுத்துவதாகவும், அவ்வாறு அணியும் போது அணிந்தவர்கள் மயங்கி விழுந்து விடுவதாகவும்,
அதன் பின்னர் மாஸ்க் தந்த குற்றவாளிகள், மயங்கி விழுந்தவரின், மற்றும் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடிச் செல்வதாக காவல்துறைக்கு வந்த புகாரின் மூலம் தெரிய வருகிறது.எனவே பொது மக்கள் இந்த விபரத்தை அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்கும் படி வேண்டப்படுகிறார்கள்.
தமிழகத்தின் கடைசி ராஜா காலமானார்...
தமிழகத்தின் மன்னராட்சி காலத்தில் முடி சூடிய ராஜக்களில் ஒருவரும்
நெல்லை மாவட்டம் சிங்கப்பட்டி ஜமீனின் 31 வது ராஜாவுமான முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் காலமானார்.இவருக்கு வயது 89.1200 வருட பழமைவாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் முடி சூடிய ராஜாவாக
திகழ்ந்தவர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
https://nmsfriendsassociation.blogspot.com/2020/05/blog-post_24.html
No comments
Thanks