Advertisement

Breaking News

Breaking News - பூமியில் விழுந்த ரஷ்ய நாட்டின் ராக்கெட் பாகங்கள்



பூமியில் விழுந்த ரஷ்ய நாட்டின் ராக்கெட் பாகங்கள்





மாஸ்கோ: விண்ணில் செயற்கைக் கோளை நிலைநிறுத்திய பின் ரஷ்ய நாட்டின் ராக்கெட் பாகங்கள் ஒளிர்ந்த படி பூமியில் விழுந்த காட்சி ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது.



கடந்த 22ம் தேதி பிளெஸ்எட்ஸ்க் ஹில்லிலிருந்து சோயஸ் 2 ராக்கெட்டை ரஷ்யா விண்ணில் ஏவியது. ஏவுகணைகளை கண்காணிக்கும் EKS OIBU செயற்கைக் கோளை ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவிற்கு அருகே பூமியின் சுற்றுவட்டாரப் பாதையில் நிலை நிறுத்தியது.
இதையடுத்து ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் விழுந்ததாகவும் அந்தக் காட்சி ஆஸ்திரேலியாவில் படம் பிடிக்கப்பட்டதாகவும் ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் மைய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜோனதான் கிறிஸ்டோபர் மெக்டோவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஓ.பி.எஸ்.,




சென்னை: எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆனார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எம்.ஜி.எம்., என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறித்த முதல்வர் இ.பி.எஸ்., மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்







இதனை தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 24 மாலை, முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று( மே 25) காலை மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மாலை துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.






இதனிடையே, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தொலைபேசி மூலம் ஓ.பி.எஸ்., ஐ தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். அப்போது, ஓ.பி.எஸ்., பூரண நலமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.



முதல்நாளில் 2.4 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனை

ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாத விற்பனை துவங்கிய முதல்நாளான இன்று, 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.





கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்களின் கோரிக்கையை அடுத்து ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25க்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஆந்திரா முழுவதும் குண்டூர் தவிரத்து 12 மாவட்ட தலைநகரங்களில் இன்று லட்டு பிரசாத விற்பனையை துவங்கியது. குண்டூருக்கான பங்கு லட்டு விற்பனை விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது.





கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் முன்னிலையில், ஆந்திர மாநிலம் முழுதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் லட்டு பிரசாத விற்பனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கி சென்றனர். விற்பனை துவங்கிய சில மணி நேரங்களிலே அனைத்து லட்டு பிரசாதங்களும் விற்று தீர்ந்தன.மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை அனுப்புவதற்காக, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்





கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.




விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.



இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.



திருநெல்வேலி கொரோனா வார்டுக்கு மருந்து விநியோகிக்க 2 ரோபோக்கள்


திருநெல்வேலி:கொரோனா வார்டில் மருந்துகள் வழங்க இரண்டு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 192 நோயாளிகள் உள்ளனர்.




மருந்துகள், உணவுபொருட்கள் வழங்க சபிகோ எனும் இரண்டு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையும், திருச்சி ப்ரோபெல்லர் டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.ஒவ்வொன்றும் மதிப்பும் ரூ ஒரு லட்சமாகும்.



திருநெல்வேலியில் இதனை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, நாங்குநேரி எம்.எல்.ஏ.,நாராயணன், டீன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒவ்வொரு ரோபாவிலும் 3 அடுக்குகள் உள்ளன. இவற்றின் மூலம் வார்டு முழுவதும் மருந்துகள், உணவுபொருட்கள் விநியோகிக்கலாம். அதில் தெர்மல் சென்சார் கருவி, கேமரா பொருத்துவதன் மூலம் நோயாளியை கண்காணிக்க முடியும்.


எல்லையில் ஆளில்லா ஹெலிகாப்டர்களை பயன்படுத்த சீனா திட்டம்


புதுடில்லி: இந்திய-சீன எல்லையில் ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




திபெத் பீட பூமிப் பகுதியில் இந்திய சீன எல்லையில் இரு நாடுகளும் படையினரை குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசின் விமானத் தயாரிப்பு நிறுவனம் 'ஏஆர்-500சி' என்கிற ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.




இவ்வகை ஹெலிகாப்டர்கள் உளவுக் கண்காணிப்பு, மின்னணு கருவிகளை செயலிழக்கச் செய்வது, குண்டு வீசி தாக்குதல் நடத்துவது ஆகிய திறன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகை ஹெலிகாப்டர்களை கடந்த வாரத்தில் சீனா சோதித்து பார்த்துள்ளது. இதையடுத்து இந்திய சீன எல்லைப் பகுதியில் இவ்வகை ஹெலிகாப்டர்களை சீனா பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டின் நாளேடுகளில் செய்தி வெளியாகி உள்ளது.


இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைத்து கொள்ள முடிவு




பெய்ஜிங்: இந்தியாவில் தங்கியுள்ள சீனாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா வந்தவர்களை திரும்ப அழைத்து கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல், இரு நாட்டு எல்லையில் பதற்றம் உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக டில்லியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீன இந்தியாவில் சிக்கலில் உள்ளவர்கள், உடனடியாக தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள். சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு உதவ வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இந்தியாவில் உள்ள தூதரகம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.யோகா கற்கவும், புத்த மத வழிபாட்டு தலங்களை பார்வையிட வந்தவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். சீனா திரும்ப விரும்புபவர்கள் மே 27 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




விமான கட்டண செலவுகளை பயணிகளே ஏற்று கொள்ள வேண்டும். சொந்த ஊர் திரும்பியதும் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் அல்லது அதன் அறிகுறி இருப்பவர்கள், 14 நாட்கள் காய்ச்சல் மற்றும் சளி இருப்பவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் 37.3 டிகிரி வெப்பநிலைக்கு மேல் உள்ளவர்களுக்கும் அனுமதி கிடையாது. மருத்துவ வரலாற்றை மறைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு விமானங்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்தும், இந்தியாவில் எத்தனை சீனர்கள் உள்ளனர் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

இன்று இயக்கப்பட்ட 532 உள்நாட்டு விமானங்களில் 39,231 பயணிகள் பயணித்தனர்: விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்

டெல்லி: இன்று இயக்கப்பட்ட 532 உள்நாட்டு விமானங்களில் 39,231 பயணிகள் பயணித்தனர் என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நாளை முதலும், மேற்கு வங்கத்தில் மே 28-ம் தேதியில் இருந்தும் விமானங்கள் இயங்கினால் எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் கூறினார்.

ஜூன் 12-ல் மேட்டூர் அணைத் திறப்பு; முறைகேடுகளுக்கு இடம் தராமல் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை






சென்னை: ஜூன் 12ல் மேட்டூர் அணைத் திறப்பு என அறிவித்துவிட்டு இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அரசு அலட்சியம் செய்கிறது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்னமும் 18 நாட்களில் தூர்வாரிவிட முடியுமா? கடைமடைக்கும் நீர் சேருமா? கண்காணிப்பு குழுக்களில் விவசாயப் பிரிதிநிதிகளையும் சேர்த்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவது; இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குகின்ற ஒரே ஒரு ஆட்சி, அதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாகத் தமிழ்நாட்டில்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு - விவசாயிகளுக்கு உதவும் கரங்களாக விளங்கியது. ஆனால் இன்றைக்கு தும்பை விட்டு வாலைப்பிடிப்பது போல், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு - இப்போது தூர் வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது இந்த அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் அது பற்றி பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. மாறாக நெடுஞ்சாலைத் துறையில், எப்படி கொரோனா காலத்திலும் டெண்டர் விடுவது அந்த டெண்டரில் எப்படி ‘ரேட்டை' உயர்த்திப் போட்டு ஊழலுக்கான ஊற்றுக்கண்ணை மேலும் பெருக்கிக் கொள்வது என்பன போன்றவற்றில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்தி வந்தது, தற்போது உயர்நீதிமன்ற விசாரணைக்கே போய் விட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர் வாரும் பணிகளை அறிவித்து அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்து விட்டது போன்ற கற்பனை தோற்றத்தை உருவாக்கி கணக்கு காட்ட முயற்சிக்காமல் மேற்கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்து; கால்வாய் தூர் வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தனது அறிக்கையில் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது


திருச்சி: மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை தந்த போது சத்தம் கேட்டதால் சிறுமியை கல்லால் தாக்கி மாணவர் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

                https://nmsfriendsassociation.blogspot.com/




No comments

Thanks