Kathal Kavithai - Pesa Vantha Varthai !!!!! பேச வந்த வார்த்தை !!!!
பேச வந்த வார்த்தை
வெண்மேக மலைச்சரிவில் ஓர் அறிமுகமில்லா ஓவியம் காண்கிறேன்
இமைகள்
இமைக்க மறந்து நீள்கிறது காணொளியோடு💕
வாரம் ஒரு வெள்ளிக்கிழமை
உன் பெயரை அர்ச்சதை போடும் ஐயருக்கு தட்சணை கொடுக்கிறாய்
ஓயாமல் உன் பெயரையே உச்சரிக்கும்
அடியேனை விட்டு விட்டாயே....!
தட்சணை
ஏதேதோ
சொல்லிச் செல்கிறது ஆழ் மனது மௌனமாய்
கருவிழி
அழகே இருவிழிகளை மட்டும் ரசித்திட அனுமதிப்பாயா💕
ஒற்றை
புள்ளியில் உதட்டை
முத்தமிடும் மச்சத்திடம் மண்டியிடுகிறேன் இன்றுமுதல் உன் ரசிகனாக எழுத💕
தொலைந்த காதல் மீண்டும் கிடைத்த போது வரும் வலியின் சுகம்....❤️
தாமரை மீது தண்ணீர் ஒட்டாதென்றே நம்பியிருந்தேன் , நீ மழையில் நனைவதை பார்க்கும் வரை❤️
கரும்புள்ளி சூடியும் அழகு கூட்டினாள்..பொட்டு எனும் பொருளினால்.. கை வருடும் பொழுதில் வசந்தம் கொள்ளும் பூக்கள்.. மழலையும் மடியும் இவளின் குறும்தனத்தில்.
சொக்கிப் போனது
விழிகள் மட்டுமல்ல மனதும் தான்
ஓயாது
முணுமுணுக்க செய்து வார்தை தேடுகிறது கவி புனைய
அவஸ்தையான
அவசரங்கள் தான் பெண்மையே
மௌனமாய்
விழிபேசிடும்
வார்த்தைக்குள் ஒளிந்துகொள்ள 💕
புருவ மத்தியில் துருவ நட்சத்திரமாய் சிறு பொட்டும்
இதழ்மேல் பூத்திருக்கும் மச்சமும்
சிறு கருவிழியும💕
பேச வந்த வார்த்தையெல்லாம் ஒசையின்றி போனது உன் விழிகளில் மயங்கி...!
www.nmsfriendsassociation.blogspot.com

No comments
Thanks