Advertisement

Breaking News

வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 13 - Kamarajar- Part 13


ஒரே போனில் பிரச்சினை தீர்ந்தது



தமிழ்நாட்டின் உயர் அதிகாரிகளுக்கும் கேரளத்தின் உயர் அதிகாரிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. தண்ணீரை எப்படி விட்டுக் கொடுப்பது? எந்த அளவு விட்டுக் கொடுப்பது? எந்த அடிப்படையில் விட்டுக் கொடுப்பது? என்று பிரச்சினை நீண்டு கொண்டிருந்தது.
இப்படியெல்லாம் காரியம் நடக்காது. நீங்கள் நேரடியாகக் கேரள முதல்-அமைச்சரிடம் பேசுங்கள் என்று  கூறினார்.
காமராசர் உடனே தொலைபேசியை எடுத்து, முதல்- அமைச்சர் நம்பூதிரிபாடுடன் பேசினார்.
ஏம்பா நாம் இந்தியாவில் தானே இருக்கிறோம். என் தண்ணீர் உன் தண்ணீர் என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? உன் ஆட்களுக்கு விபரம் போதாது. வா, நான் கையெழுத்து போட வேண்டும் என்றார். அவ்வளவுதான் முடிந்தது பேச்சுவார்த்தை!
எப்பேர்ப்பட்ட தலைமை என்று பாருங்கள். ``உன்னிடம் தண்ணீர் உள்ளது. கடலில் போய் வீணாகக் கலக்கிறது. எங்களிடம் நிலம் உள்ளது. தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டுள்ளது. என்ன பிரச்சினை திருப்பிவிடுவதில்'' காமராசர் வெகு எளிதாகச் சொன்னார். கையெழுத்துப் போட்டாகிவிட்டது.
தேச நன்மைக்குத் திட்டமிடும்போது, வாக்குகள் கிடைப்பது குறைந்துவிடும் என்று நினைக்காமல் தேசமல்லவா முக்கியம் என எண்ணினார்.

இரண்டு பஸ் கம்பெனி முதலாளிகள், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, காமராஜரைப் பார்க்க வந்திருந்தனர். ‘ஐயா! தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளன. கம்பெனியை நடத்துவதில் லாபமும் அதிகம் இல்லை. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்துங்கள்” என்றனர்.
”சரி… உங்க கம்பெனியோட பேர் என்ன? ” – என்று கேட்டார் காமராஜர். உடனே ஒருவர் ‘…டிரான்ஸ்போர்ட் சர்வீஸஸ்’ என்றார்; மற்றொருவர், ”… பஸ் சர்வீஸஸ்” என்றார்.
இதைக் கேட்டதும், ”சர்வீஸ்னு பேரு வைச்சுருக்கீங்களே… இதுக்கு என்ன அர்த்தம்.? தமிழ்-ல சேவைன்னு சொல்லுவோம்; சேவைன்னா எந்த லாப நோக்கமும் இல்லாம, மத்தவங்களுக்கு உதவறதுதானே.? உங்ககிட்ட பஸ் தயாரிக்க வசதி இருக்கு. அந்த வசதிய பொதுமக்களோட வசதிக்கு பயன்படுத்துங்க. அதுதான் உண்மையான சேவை! அதைவிட்டுட்டு, லாபம் குறையுதேன்னு புலம்பாதீங்க!” என்று அவர்களை வழியனுப்பி வைத்தாராம் காமராஜர்.



No comments

Thanks