Advertisement

Breaking News

A brotherly affection - சகோதர பாசம்


‘சகோதர பாசம்’



‘சகோதர பாசம்’ என்ற உடன் அந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் ‘சகோதரன்’ ‘பாசம்’ என்ற இரண்டு சொற்கள் உள்ளன. சக என்றால் கூட என்று கொள்ளலாம். ‘சக மாணவி’, ‘சக ஊழியர்’ என்னும் வார்த்தைகளில் வந்திடுவது போல. உதரம் என்றால் வயிறு. பாசம் என்பது அன்பும் பரிவும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆக சகோதர பாசம் என்றால் உடன் பிறப்புகளுக்குள், அதாவது ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இவர்களுக்கு உள்ளேயான பரஸ்பர அன்பு என்று பொருள் படுகிறது

ஒன்றாய் பிறந்த உறவுகள் நாங்கள்
இரண்டாய் பிறந்தும் ஒரே எண்ணங்கள்
பாசம் பகிரும் பிறப்புகள் நாங்கள்
நேசம் மறக்கா அண்ணன் தம்பிகள் மற்றும் அக்கா தங்கை  ..........

ஒன்றாய் குடித்த தாயின் பாலும்
சுகமாய் பகிர்ந்த தாயின் மடியும்
அன்போடு கிடைத்த நேச வளர்ப்பும்
சமமாய் கிடைத்த தாயின் அன்பும் ..........

ஒன்றாய் இருந்த ஓட்டு வீடும்
படுத்து உறங்கிய கிழிந்த பாயும்
ஒன்றாய் பகிர்ந்த ஒற்றை தலைகாணியும்
பாசமாய் கிடைத்த கஞ்சியும் கூழும் .......

சேர்ந்து விளையாடிய சிறுவயது விளையாட்டும்
ஒன்றாய் குளித்த வெந்நீர் குளியலும்
மாற்றி உடுத்திய கிழிந்த உடைகளும்
மாறி மாறி சண்டைகள் இட்டதும் ...........

ஒன்றாய் சேர்ந்து பள்ளிக்கு சென்றதும்
ஒன்றாய் கடையில் வாங்கி தின்றதும்
ஒருவருக்கு பரிந்து எதிரியை அடித்ததும்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்ததும் ...........

எனதென்றும் அவனது என்றும் அவளது என்றும் ஏதுமில்லை
ஒன்றாய் பயணிக்கும் வாழ்க்கை இதிலே
போட்டிகள் பொறாமைகள் என்றும் இல்லை
பொய்யாய் போற்றும் அன்பும் இல்லை .........

ஒருவரை ஒருவர் மறுப்பதுமில்லை
ஒருவரை ஒருவர் மறந்ததுமில்லை
துரோகங்கள் இல்லா எங்கள் வாழ்க்கை
துயரம் இல்லா இன்ப வாழ்க்கை ........

காலம் மாறும் கடமைகள் மாறும்
வேகமாய் போகும் உலகம் இதிலே
இனிந்தே பயணிக்கும் அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள்
நாம் என்றுமிருப்போம் ஒற்றுமை உணர்வில்..

நாம்  பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!
பாசமலர்களுக்கு ஏற்படும்
அனுபவங்கள்.,....

அடித்துக்கொண்டாலும்...
அதில் ஒரு இன்பம்...
அதை பிரிதொரு நாள்
நினைக்கும்பொழுது....
வாயில் புன்னகை.....

தாயின் வயிற்றின் மேட்டில்
எதிர்பார்ப்போடு முத்தமிடும் தருணம்..,
பாசத்தின் பாகப்பிரிவை மறக்கடிக்கும் பந்தத்தின் தோற்றம்...
இந்தப் பந்தம் ஏற்படாதுபோனால்..,
சகோதர பாசம் விரோதமாய்த்தான் போகும்...
சகோதரம் பிரிவினையல்ல,
பிரியாத இணை என்று
புரியவைத்தல் பெற்றோரின் கடமை...
இந்தப் புரிதலைத் தவிர்த்தால்
சகோதர மனங்களில் விரோதமை
தடம் பதித்(ந்)துவிடும்...

ஒரே உதரத்தில், அதான் வயிற்றில், தோன்றியவர் களுக்குள் மட்டுமே காட்டிட வேண்டும் சகோதர பாசத்தினை என்று நினைக்க வேண்டாம். எல்லா உயிர்களிடத்துமே நாம் காட்டிட வேண்டும் அன்பும் பரிவும்.


சகோதர பாசத்துடன்.................



1 comment:

Thanks