Advertisement

Breaking News

Breaking News - 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!


20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!

07.06.2020

    கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 20 லட்சம் அளவில் அமெரிக்கா ஏற்கனவே தயாரித்துள்ளது, பாதுகாப்பு பரிசோதனைகளை முடிந்த பின் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.




அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 18.7 லட்சம் ஆகும். 7.3 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் “தடுப்பூசிகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தினோம். தடுப்பூசி தயாரிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வியக்கத்தக்க வகையில் நாம் சிறப்பாக செயல்படுகிறோம். சொல்லப்போனால் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த உடன் 20 லட்சம் அளவிற்கான மருந்துகளை விநியோகம் செய்ய தயாராக உள்ளோம். நான்கு நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் உள்ளன. அதிகாரிகள் இப்போது நோயை புரிந்துகொண்டனர்” என்றார்.





ஆனால் எந்த நிறுவனம் மருந்து தயாரிப்பை தொடங்கியுள்ளது என்பதை அவர் குறிப்பிட வில்லை. மாடர்னா இன்க்., அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி, ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், மெர்க் & கோ ஆகிய நிறுவனங்கள் மருந்து தயாரிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு சாத்தியமான தடுப்பூசி கண்டறிவதில் தேசிய சுகாதார நிறுவனங்கள் மாடர்னா மருந்து நிறுவனத்துடன் விரைவான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

8-ம் தேதி முதல் ஹோட்டல்கள் திறப்பு : அரசு வழிகாட்டுமுறை வெளியீடு

   வரும் 8 ம் தேதி முதல் ஹோட்டல்களை திறக்க உத்தரவிட்டுள்ள அரசு, வழிகாட்டு நெறி முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.






தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய நிபந்தனைகளோடு இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்து வருகிறது அதன்படி வரும் 8 ம் தேதி முதல் ஹோட்டல்களை திறக்க உத்தரவிட்டுள்ள அரசு வழிகாட்டு நெறி முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.
வழிகாட்டு நெறி முறைகளில் கூறி இருப்பதாவது:

*உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

*உணவகங்களுக்கு வரும் வாடிக்கயைாளர்களுக்கு கை கழுவ சோப்பு சானிடைசர் வழங்க வேண்டும்.

*உணவை தயார் செய்யும் ஊழியர்கள் ஆபரணங்கள் கை கடிகாரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

*ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி விட வேண்டும்.







*மொத்தம் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட வேண்டும்.

*உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசியினால் சுத்தப்படுத்த வேண்டும்

*வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் சரிஇல்லாதவர்களை ,பணியில் அமர்த்த கூடாது

*பண பரிவர்த்தனையை தவிர்த்து கூடுமான வரையில் செயலி வழி பரிவர்த்தனையை மேற்கொள்ள வேணடும்.

*உணவகங்களில் ஏசி பயன்படுத்தகூடாது சன்னல்கள் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு உள்ளது



தமிழக வீரர் மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி


   சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச்சேர்ந்த மதியழகன், ராணுவ வீரர், இவர் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கடந்த வியாழன் அன்று வீர மரணம் அடைந்தார்.





இதனைதொடர்ந்து இன்று ( 6 ம் தேதி) இரவு மதியழகன் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு வந்தது. மதியழகன் உடலுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ராமன், தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியை மதியழகன் குடும்பத்திற்கு வழங்கினார். தொடர்ந்து மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி நடந்தது.







இந்தியாவில் ஜூலை மாதம் மற்றொரு வெட்டுக்கிளி படையெடுப்பு: ஐ.நா., எச்சரிக்கை


   ஜூலை மாதம் இந்தியாவில் மற்றும் ஒரு வெட்டுக்கிளி படையெடுப்பு இருக்கும் என்று ஐ.நா., எச்சரித்துள்ளது.





கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்கிப் பெருகிய வெட்டுக்கிளிக் கூட்டம் அங்கிருந்து அரேபிய பாலைவனத்துக்கு வந்து பாக்கிஸ்தான் வழியாக மே மாதத்தில் இந்தியாவுக்குள் நுழைந்தது.

ராஜஸ்தான், ம.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெட்டுகிளி படையெடுப்பால் சேதமடைந்தன
.





இந்நிலையில் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளிலும், ஈரானிலும் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறை வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜூன், ஜூலை மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்திற்கு படையெடுக்கும் என ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

புதுச்சேரியில் 8-ம் தேதி வழிபாட்டு தலங்களை திறக்க உத்தரவு







   மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதுச்சேரி 2020-21-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியது, மூன்று மாத செலவினங்களுக்கான கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது தெடார்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.





வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை






     கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் கெஜ்ரிவால் டில்லி மக்களிடம் உரையாடியது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர்கள் உள்ளன. படுக்கைகளும் உள்ளன. இங்கு சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவ்வாறு மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






யானைகளின் ஆன்மா சாந்தியடைய நாளை மாலை வீட்டில் விளக்கேற்றுவோம்


    குரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் இறந்துஉள்ள சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இறந்த யானை மற்றும் இதுவரை இறந்த யானைகளின், ஆன்மா சாந்தி அடைய, நாளை (ஜூன் 7)மாலை 6:01 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்.





கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதி காட்டு யானைகள் நிறைந்த இடம். இங்கிருந்து உணவு தேடி வெளியே வந்த பதினைந்து வயது மதிக்கத்தக்க கர்ப்பம் தரித்த யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. பொதுவாக காட்டு யானைகள் ஊருக்குள்
வருவதில்லை. ஆனால் இந்த யானை கர்ப்பமாக இருந்ததால் பசி அதிகமாகி வெளியே வந்து
இருக்கிறது.

வெடிபொருள் நிரப்பிய அன்னாசி பழத்தை ஒரு கொடூர மனித மிருகம் அந்த யானைக்குக் கொடுத்துள்ளது.ஏதும் அறியாத அந்த அப்பாவி யானை கொடுத்தவரை நன்றியுடன் பார்த்தவாறு, வெகு வேகமாக பழத்தை துதிக்கையில் ஏந்தி வாயில் போட்டது தான் தாமதம், யானையின் வாய், தாடை, நாக்கு எல்லாம் சிதறியது.

ரத்தம் சொட்டச் சொட்ட செய்வதறியாது தவித்த யானை அங்குமிங்கும் ஓடியது. 'இது போன்ற நேரத்தில் யானைக்கு கோபம் வரும். ஆனால் இந்த யானை யாரையும் தாக்கவில்லை; எந்தப் பொருளையும் சேதப்படுத்தவில்லை. தெய்வீகமானதாகத் தெரிந்தது' என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.






வயிற்றில் இருந்த குட்டிக்காக வேறு உணவுப் பொருட்களைச் சாப்பிட முயன்று வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக அதனால் எதையுமே சாப்பிட முடியவில்லை. வலியைக் குறைக்கவும் வேதனையை மறக்கவும் ஊருக்கு வெளியே ஓடிய வெள்ளியாற்றில் இறங்கி வாய்ப் புண்ணால் ஏற்பட்ட எரிச்சலைத் தணிக்க முயற்சித்திருக்கிறது. ஒன்று... இரண்டு... மூன்று நாட்கள்... தண்ணீரில் துதிக்கையை பாதி அளவில் மூழ்க விட்டு கண்ணில் கண்ணீர் பெருகப் பெருக உயிரை விட்டது.

தன் வயிற்றில் வளர்ந்த குட்டியைப் பார்க்க முடியாத சோகத்தை எல்லாம் கண்ணீராக்கி ஆற்று தண்ணீரில் கலந்து விட்டது. ஒரு யானை ஆற்றுக்குள் ஒரே இடத்தில் மூன்று நாட்கள் நின்று கொண்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்து, ஆற்றுக்குள் இறங்கி கும்கி யானைகளுடன் மீட்க முயற்சித்த போதுதான் வனத் துறையினருக்கு யானை ஜல சமாதியானது தெரிய வந்தது.
மீட்க வந்த யானைகள் தம் தும்பிக்கையால் எழுப்ப முயன்று அது முடியாது எனத் தெரிந்ததும் கரையில் நின்று இருந்தவர்களுடன் சேர்ந்து கண்ணீர் விட்டன.

யானைக்கான பிரேதப் பரிசோதனை நேற்று நடந்து முடிந்தது. யானையின் வயிற்றுக்குள் இருந்து இறந்த நிலையில் குட்டி யானையை எடுத்தபோது பரிசோதனை நடத்திய டாக்டர்களும், வனத்துறையினரும், அதிகாரிகளும் கூட வாய்விட்டுக் கதறினர். மனித நேயம் மிக்கவர்களுக்கு இச்செய்தியைக் கேட்டதும் சோறு இறங்கவில்லை; துாக்கம் பிடிக்கவில்லை.

பசுவையும் யானையையும் தெய்வமாக வழிபடுகிறோம் நாம். சாதாரணமாகவே சாலையில்
பசுவைப் பார்த்தால் அதைத் தொட்டுக் கும்பிடுகிறோம். கோவில்களில் யானையிடம் ஆசி வாங்கினால் விநாயகப் பெருமானே ஆசி வழங்கியதாக நினைத்து ஆனந்தப்படுவோம். விநாயகரின் அம்சமாக கருதப்படும் யானையை அதுவும் கர்ப்பிணியைக் கொன்றவர்களை
என்னவென்று சொல்வது...


இந்தச் சம்பவத்தை நினைத்து துக்கப்படுவோர் பலர்; துாக்கம் தொலைத்தோர் பலர்; வேதனையில் மனம் வெதும்புவோர் பலர். ஏற்கனவே ஏராளமான உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்து வரும் நம் மனித குலம், மேலும் துன்பங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும் இறந்த தாய் மற்றும் குட்டி யானையின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், இதுவரை இறந்த யானைகளின் ஆன்மா சாந்தி அடையவும், (ஜூன் 7 ) ஞாயிறு மாலை 6:01 - 6:15 மணிக்குள்வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன் ஒரு விளக்கை ஏற்றுவோம். இறந்த யானைகளின் ஆன்மா சாந்தியடைய மனமுருகி வேண்டுவோம்.
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்

கணுமுற்றி நின்றகரும்புள்ளே காட்டி...

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி...

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து தத்துவ

நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!


- விநாயகர் அகவல்


       மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

                   https://nmsfriendsassociation.blogspot.com/

1 comment:

Thanks