Breaking News - மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை : அரசு அதிரடி
மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை:
உத்தரகண்ட் அரசு அதிரடி
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம்
சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. மாஸ்க், சமூக விலகலை கடைபிடிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
உத்தரகண்டில் இன்று(ஜூன் 14) 31 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 1,816 ஆக உயர்ந்தது. 24 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 1,078 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், 705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகண்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தணிக்கை செய்து, அதன் காரணங்களை ஆய்வு செய்யும் படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது; இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானது.
குஜராத் மாநிலத்தில் இன்று(ஜூன் 14) இரவு 8.13 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக, நில நடுக்கத்திற்கான தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ராஜ்கோட்டின் வடமேற்கு பகுதியில் 122 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
அசாம் எரிவாயுக்கிணற்றில் பற்றிய தீ:
கட்டுப்படுத்த அமெரிக்க வல்லுநர்களுடன்
ஆலோசனை
அசாம் மாநிலம் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் பற்றி எரியும் தீயினை கட்டுப்படுத்த அமெரிக்க எரிசக்தி வல்லுநர்களிடம் இந்திய அதிகாரிகள் காணொளியில் ஆலோசித்தனர்.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் எரிவாயுக்கிணற்றில் கடந்த 27 ம் தேதி வாயுக் கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி கிணற்றில் தீ ஏற்பட்டது. தீயணைப்பு முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
No comments
Thanks