Advertisement

Breaking News

Breaking News - இந்தியாவில் ஒரே நாளில் 9,971 பேருக்கு தொற்று:இதுவரை 2.4 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு


இந்தியாவில் ஒரே நாளில் 9,971 பேருக்கு தொற்று:இதுவரை 2.4 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு

08.06.2020





புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.46 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 293 பேர் சிகிச்சைக்கு பின் வீடு

திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







5வது இடத்தில் இந்தியா


இந்நிலையில், அமெரிக்காவின் ஜான் ஹோப்கின்ஸ் பல்கலையின் தரவுகளின்படி, உலகளவில் கொரோனா பாதிப்பில், அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில், இந்தியா, 5வது இடத்திற்கு முன்னேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 2.46 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பல்கலை தரவுகளின்படி ஸ்பெயின் நாட்டில் 2.41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில்உள்ளது. இதற்கு அடுத்து பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் நாடுகள் உள்ளன.


13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி
 ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு






நொய்டா: பிரசவம் பார்க்க மறுத்து 13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணியும் வயிற்றில் இருந்தா குழந்தையும், ஆம்புலன்சிலேயே பலியான சோகம் உ.பி.,யில் நடந்தது.

உ.பி., மாநிலம் நொய்டா - காசியாபாத் எல்லையில் உள்ள கோடா காலனி பகுதியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங்(30). 8 மாத கர்ப்பிணியான இவரது மனைவி நீலம்(30) பிரசவ வலியில் துடிக்க, கர்ப்ப காலத்தில் பார்த்து வந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தனர்.






இவ்வாறு 8 மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி, 13 நேர அலைக்கழிப்புக்கு பின், ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த கர்ப்பிணிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், டில்லி, உ.பி.,யில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கவுதம புத்தா நகர் மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்


ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா


மாஸ்கோ; ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.




இதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,67,673 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5,859 பேர் பலியாகி உள்ளனர்.





உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை பாதிப்பை பொருத்தமட்டில் குறைவாக உள்ளது. இது வரை அந்நாட்டில் மொத்தம் 2,26,731 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.



சிகிச்சை கட்டணம் செலுத்தாததற்காக முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனை


ஷாஜாபூர்: மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் செலுத்தத் தவறியதற்காக 80 வயது முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் படுக்கையில் கட்டிப்போட்டுள்ளது . இப்புகைப்படம் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.






மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கும் போது அவரது மகள் ரூ.5 ஆயிரத்தை முன் பணமாக செலுத்தியுள்ளார். சிகிச்சை சில நாட்கள் நீடித்ததால் அவரது சிகிச்சை கட்டணம் ரூ.11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தந்தையின் சிகிச்சை கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை என அவர் மகள் கூறியுள்ளார். பணம் செலுத்தாமல் முதியவரை அழைத்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை படுக்கையோடு சேர்த்து அவரை கட்டி வைத்துள்ளனர். இதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடவே இவ்விஷயம் சர்ச்சையானது.






இது குறித்து மருத்துவமனை தரப்பில், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக அவருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதால், தன்னை தானே காயப்படுத்திக்கொள்ளாமல் இருக்க கட்டப்பட்டிந்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.


சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்கள் நாளை முதல் திறக்கலாம்





புதுடில்லி: மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை நாளை(ஜூன் 8) முதல் திறக்க மத்திய கலாசாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு, உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, உள்ளிட்ட மேலும் சில தளர்வுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.







இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களை திறந்து கொள்ளலாம் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவை கட்டாயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்


மஹா.,வில் விதிமீறிய மருத்துவமனைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம்

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்பாக விதிமுறைகளை தொடர்ந்து மீறிய இரண்டு மருத்துவமனைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 37,390 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 2,969 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில மருத்துவமனைகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், தானே நகராட்சி துணை கமிஷனர் விஸ்வநாத் கேல்கர் கூறுகையில், 'இரண்டு மருத்துவமனைகளுக்கு பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு பின்னரே மஹாராஷ்டிரா கொரோனா விதிகள் மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி உள்ளவர்களை அல்ல. பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.






இதனால் ஒரு நோயாளிகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் ஒரு மருத்துவமனைக்கு ரூ.13 லட்சமும்,மற்றொரு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


சென்னையில் 22ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று (7 ம் தேதி) புதிய உச்சமாக 1,156 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது.





சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் (ஜூன் 7) 1,156 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22, 149 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று (7 ம் தேதி) 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் இது வரை 212 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 312 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் செங்கல்பட்டில் 135 பேருக்கும். திருவள்ளூரில் 55 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம்:











மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் விபரம்:










காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை






ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.





காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ரேபன் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அங்கு மோதல் நடந்து வருகிறது.


மாஸ்க் அணியாத வாடிக்கையாளருக்கு அனுமதி இல்லை:வணிக நிறுவனங்களுக்கு உத்தரவு





சென்னை: மாஸ்க் அணியாமல் வாடிக்கையாளர்களை, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 30 வரை, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது
*கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும்

* கடை உரிமையாளர்கள், ஊழியர்கள்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உணவகங்கள்


இதனிடையே, உணவகங்களில் நாளை முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது.





அதன்படி,
* உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

* உணவகங்களில் நுழைவதற்கு முன் கைகளை கழுவ சோப்பு, சானிடைசர் வைக்க வேண்டும்

*ஏசி பயன்படுத்த கூடாது, ஜன்னல்கள் திறந்து காற்றோட்டமாக இருக்க வேண்டும்
*சாப்பிடும் டேபிளுக்கு இடையில் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

       
             மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

                         https://nmsfriendsassociation.blogspot.com


No comments

Thanks