Advertisement

Breaking News

Breaking News - மன்னிப்பு கேட்க சென்ற பாக்., தளபதியை சந்திக்க மறுத்த சவுதி இளவரசர்



மன்னிப்பு கேட்க சென்ற பாக்., தளபதியை சந்திக்க மறுத்த சவுதி இளவரசர்


20.08.2020




ரியாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் துடுக்கான கருத்துக்காக, சவுதி அரேபிய பட்டத்து இளவரசரிடம் மன்னிப்பு கேட்க சென்ற, பாக்., ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்திக்க, இளவரசர் மறுத்துவிட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, ஓ.ஐ.சி., எனப்படும், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடத்த, நீண்ட நாட்களாக பாக்., வலியுறுத்தி வருகிறது. ஓ.ஐ.சி., அமைப்புக்கு தலைமை வகிக்கும் சவுதி அரேபியா, இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மாநாட்டை நீங்கள் கூட்டாவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் இஸ்லாமிய நாடுகளை திரட்டி, மாநாடு நடத்த, பிரதமர் இம்ரான் கானிடம், நான் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை உருவாகும்' என, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, கடந்த வாரம் கருத்து கூறினார்.





இதனால், பாக்., - சவுதி இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து, பாக்., பிரதமர் இம்ரான் கான் சார்பில் மன்னிப்பு கேட்க, பாக்., ராணுவ தலைமை தளபதி, கமர் ஜாவேத் பஜ்வா, நேற்று முன் தினம் சவுதி சென்றார்.ஆனால், அவரை சந்திக்க, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மறுத்துவிட்டார். இதையடுத்து, பட்டத்து இளவரசரின் சகோதரரும், துணை ராணுவ அமைச்சருமான, ஷேக் காலித் பின் சல்மானை, நேற்று சந்தித்து, பாக்., ராணுவ தளபதி பஜ்வா மன்னிப்பு கோரினார்.

                              https://nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks