மனிதனின் தேடுதல்
தேடுதல்
தேடுவது
என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
வறியவன்
உணவை தேடுகிறான்.
பணக்காரன் நிம்மதியை தேடுகிறான்.
பக்தன்
அருளை தேடுகிறான்.
ஞானி
தன்னையே தேடிக் கொண்டிருக்கிறான்.
பாலுக்கு சீனி தேடுவோரும் கூழுக்கு உப்புத் தேடுவோரும் ஒரே தரம் ஆனவர்கள் இல்லை.
வாழும் வாழ்க்கைக்கு ஏற்ப வந்திருக்கும் வசதிகளுக்கு ஏற்பத் தேடும் பொருளின் தரமும் வேறுபட தான் செய்கின்றது.
தேடும் விதமும் மாறுபட்டு தான் இருக்கின்றது.
தேடுகின்ற எல்லாவற்றையும் நம்மால் பெற்று விட முடிகின்றதா?
இது முக்கியமான கேள்வி!
தேடுகின்ற எல்லாவற்றையும் நாம் பெற்று விட்டால் கூட
நாம் தேடுகிற முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறோமா? இதுவும் முக்கியமான கேள்விதான்.
தேடுவது
கிடைக்கக் கிடைக்கத் தேடுகிற வேட்கையும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறதே ஒழியக் குறைந்த பாடில்லை.
நாம் தேடிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கையில்
அன்றாடம் எதையாவது தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
போதும்
என்கிற மனது மட்டும் நமக்கு எப்போதும்g வாய்ப்பதே இல்லை.
நன்றி,
www.nmsfriendsassociation.blogspot.com

No comments
Thanks