Advertisement

Breaking News

Breaking News - பொது இடங்களில் எச்சில் துப்பினால், புகை பிடித்தால் 2 ஆண்டு சிறை


பொது இடங்களில் எச்சில் துப்பினால், புகை பிடித்தால் 2 ஆண்டு சிறை




மும்பை: பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகை பிடிப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர மஹா., மாநில அரசு முடிவு செய்துள்ளது.மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பரவலை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் எச்சில் துப்புவோர், மற்றும் புகை பிடிப்போருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மீண்டும் அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தங்களை தொற்று நோய்ச் சட்டத்தில் சேர்க்க உள்ளது.




இது குறித்து மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் முதன் முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் முறை 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு





புதுடில்லி: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாக ஜூன் இறுதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.




இதில் கல்வி நிறுவனங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்து கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசிக்கலாம். இதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், கல்வி நிறுவங்களை திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து அதற்கான நடைமுறைகளை தயாரிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும்: சீனா


பீஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கக்கூடும் என்று சீன அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் (SASAC) அந்நாட்டு சமூக ஊடகமான வீசாட்டில் தெரிவித்துள்ளது.






சீனாவின் வுஹான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் வெளிப்பட்டது. இந்த வைரஸை மூடி மறைக்க சீனா முயற்சித்ததே உலகம் தற்போது சந்தித்திருக்கும் பேரழிவுக்கு காரணம் என ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்தாலும், பெருமளவு உயிரிழப்புகளையும் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
சீனாவில் தற்போது ஐந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனித சோதனைகளில் உள்ளன. இவற்றில் வுஹான் உயிரியல் தயாரிப்புகள் மற்றும் பீஜிங் உயிரியல் தயாரிப்புகள் ஆகிய இரு நிறுவனங்கள் தடுப்பூசி உருவாக்கத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனைகளில் நுழைந்துள்ளன. இவ்விரு குழுக்களும் அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைக்கப்பட்டுள்ளன, அதன் நிர்வாகத்தை எஸ்.ஏ.எஸ்.ஏ.சி., மேற்பார்வையிடுகிறது.






இவ்விரு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பெய்ஜிங் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 100 மில்லியன் முதல் 120 மில்லியன் அளவுகள் இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2021 தொடக்கத்தில் தடுப்பூசி தயாராகிவிடும் என சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்


ஒரே நாளில் இந்தியாவில் 7,964 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது





புதுடில்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 30) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799 ல் இருந்து 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,706 ல் இருந்து 4,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106 ல் இருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. 265 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






மஹாவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.




மஹாராஷ்டிராவில் கொரோனா பரவத் துவங்கியது முதல் போலீசார் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்துள்ள போலீசாரின் எண்ணக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் புதிதாக 114 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் கொரோனா பாதித்த போலீசாரின் மொத்த எண்ணிக்கை 2,325 ஆக உள்ளது




வரும் 1 ம் தேதி முதல் ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை


சென்னை:வரும் ஒன்றாம் தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. என ஐகோர்ட் தலைமை பதிவாளர் அறிவித்து உள்ளார்.





கொரோனா அச்சுறுத்தல் காரணமாாக நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் 3 -ம் கட்ட ஊரடங்கின் போது தமிழக அரசு 50 சதவீத ஊழியர்களுடன் பணி புரிய அனுமதிவழங்கியது. முன்னதாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தங்களின் வீடுகளில் இருந்து வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.





மேலும் உரிய பாதுகாப்புடன் நேரடி வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என பார் கவுன்சில் மற்றும் வக்கீல் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து வரும் 1 -ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும், நீதிபதிகள் லேப்டாப் உள்ளிட்டவற்றை கோர்ட்டுக்கு எடுத்து வரவேண்டும் என தலைமை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


சென்னை ஐகோர்ட்டில் 33 அமர்வுகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது


சர்ச்சை 'காட்மேன்' வெப்சீரிஸ் வருமா - ஜீ5யிடம் சுப்ரமணிய சாமி பேச்சு, சந்திரலேகா டுவீட்



சென்னை : சர்ச்சையை கிளப்பிய காட்மேன் வெப்சீரிஸ் வெளியாகாது என பா.ஜ., எம்.பி. சுப்ரமணிய சுவாமியிடம் ஜீ5 நிர்வாகம் தெரிவித்ததாக ஜனதா கட்சி தலைவர் வி.எஸ்.சந்திரலேகா கூறியுள்ளார்.

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே யூ-டியூப்பிலிருந்து டீசர் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடரையே தடை செய்ய வேண்டும் என்று இந்து மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இணையதளங்களில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இந்த தொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில் ஜனதா கட்சியின் தலைவர் வி.எஸ்.சந்திரலேகா டுவிட்டரில், இந்து மதத்திற்கு எதிரான காட்மேன் வெப்சீரிஸ் குறித்து ஜீ5யின் சுபாஸ் சந்திராவிடம் பா.ஜ., எம்.பி. சுப்பிரமணிய சுவாமி பேசினார். காட்மேன் வெப்சீரிஸ் வெளியாகாது என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்து தர்மாவின் காவலர் சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் காட்மேன் வெப்சீரிஸ் விலக்கி கொள்ளப்பட்டதாகவும், இது வெளியாகாது என்று தெரிகிறது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கில் இந்த 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்




புதுடில்லி: நாளையுடன் (மே 31) 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவிக்க உள்ளது. ஆனால் குறிப்பிட்ட 13 பெருநகரங்களில் கடும் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புகள் தொடரும் என்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி மார்ச் 24-ம் தேதி மூன்று வார காலத்திற்கான முதல் ஊரடங்கை அறிவித்தார். பின்னர் ஏப்ரல், மே 3 மற்றும் கடைசியாக மே 17-ம் தேதி இவை நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஊரடங்குகளில் அத்யாவசிய வணிகங்கள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பிற கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் நாளையுடன் 4-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது.





5-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கெளபா தலைமையில் ஒரு கூட்டமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மற்றொரு கூட்டமும் 28ம் தேதி நடைபெற்றது. இதில் மாநிலங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் அளிக்கவும், அதே சமயம் மத்திய அரசின் குறிப்புகளை பின்பற்ற வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளனர். நகர்ப்புற குடியிருப்புகளில் கொரோனாவை நிர்வகிக்க வீட்டுக்கு வீடு கண்காணிப்பு போன்ற வழிகாட்டுதல்களை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.




இந்நிலையில், இந்தியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 13 பெருநகரங்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இங்கு தான் இந்தியாவின் 70% கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் தமிழ்நாடு மூன்று நகரங்களை கொண்டுள்ளது. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்களில் இந்த 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் தொடரும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு இதில் உள்ளன. இது தவிர்த்து மும்பை, டில்லி, ஆமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கோல்கட்டா மற்றும் அதை ஒட்டிய ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை அந்த 13 நகரங்கள் ஆகும்.


சீன மாணவர்களுக்கு அமெரிக்கா தடை




வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், படிப்பதற்காக அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் நலனுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை திருடிவதாக அவர்கள் மீது வெள்ளை மாளிகை குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் நடவடிக்கையால், அமெரிக்க நலனுக்கு அச்சறுத்தல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதனால், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இது ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் பதிலடிகளில் ஒன்றாக இருக்கும் என அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3.60 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் மூலம் பல்லை மற்றும் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும், 14 பில்லியன் டாலர் கட்டணமாக கிடைக்கிறது.





வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஹாங்காங் தொடர்பாக சீனா கொண்டு வந்துள்ள சட்டம், அந்த நகரத்தின் நீண்ட கால பெருமை மற்றும் தனித்துவத்தை அழிப்பது போல் உள்ளது. இது ஹாங்காங் மக்களுக்கும், சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் துயரமான நாள். ஹாங்காங்கிற்கு அமெரிக்கா வழங்கி வந்த சிறப்பு சலுகைகளை வழங்கும் கொள்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். எனக்கூறினார்.



கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன்: அமைச்சர் ராஜூ





மதுரை: கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டை மட்டும் காட்டி, ரூ.50 ஆயிரம் வரை யார் வேண்டுமாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ கூறியதாவது: முதல்வர் இபிஎஸ் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை மட்டும் காட்டி, ரூ.50 ஆயிரம் வரை யார் வேண்டுமாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரை உதவி தொகை வழங்கி உள்ளது. அனைத்து ரேஷன் கார்டு தார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது





திமுக தலைவர் ஸ்டாலினின், ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்ந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்றோ எந்த மனுவும் இல்லை. பத்து, இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலினின் குணம் கோணலாக உள்ளது. தமிழக மக்களிடையே முதல்வர் நல்ல பேர் வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் குறை கூறுகிறார்.
இக்கட்டான நேரத்தில் முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், குறை கூறும் ஸ்டாலினைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு தோல்வி எனக் கூறிய ராகுல், தமிழகத்தின் ஊரடங்கு பற்றி கூறியிருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


வாட்ஸ் அப் தகவல்கள் குழப்பம் தருவதாக பயமுறுத்துவதாக உள்ளது: கமல்




வாட்ஸ் அப் தகவல்கள் பெரும்பாலான நேரங்களில் குழப்பம் தருவதாக பயமுறுத்துவதாக உள்ளது என்று கமல் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவ்வப்போது தமிழக அரசை மிக கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.இதனிடையே, நாளை (மே 31) காலை 11 மணியளவில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, ரமணன் லட்சுமி நாராயண் மற்றும் மனநல மருத்துவர் ஷாலினி ஆகியோருடன் நேரலையில் கலந்துரையாடவுள்ளார் கமல். இந்த நேரலைக்கு 'கரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 



பேட்டியில் கமல் கூறியிருப்பதாவது:

"இதை நான் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவர்கள் அதற்கான தகுதி பெற்றவர்கள். நம்மைச் சுற்றி நிறைய புரளிகள்தான் பரவிக் கிடக்கின்றன. வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவைப் பெறுங்கள் என்று அதைத்தான் சொல்கிறார்கள். வாட்ஸ் அப்பில் பலதரப்பட்டத் தகவல் பரப்பும் அதன் பயனர்களைத்தான் சொல்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அது குழப்பம் தருவதாக, பயமுறுத்துவதாக உள்ளது. (இந்த உரையாடல் மூலம்) கோவிட்-19க்குப் பிறகு புதிய சகஜ நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி நிபுணர்களிடம் பேசித் தெரிந்துகொள்ள முயல்கிறோம். அவர்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றில் பல்வேறு கட்டங்கள் இருக்கும். மொத்தத்தையும் இயற்கையின் கைகளுக்கே விட்டுவிடாமல் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற வேண்டும்". இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சரிடம் கலந்துரையாட இருப்பது குறித்து கமல், "என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசும் ஒரு சில அமைச்சர்களில் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் ஒருவர். ஒரு அறிவியல் ஆசிரியராக இருந்துகொண்டு, பிரச்சினைகளை விஞ்ஞானப்பூர்வமாகவும், தர்க்க ரீதியிலும் அணுகியுள்ளார். இந்த நோய்த்தொற்று சமயத்தில் கேரள அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார் கமல்
ராஜஸ்தானில் 8,617 பேருக்கு கொரோனா: இதுவரை 193 பேர் பலி



ஜெய்பூரில்: ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,617 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 193 ஆக உள்ளது








மாநிலத்தில் சனிக்கிழமை புதிதாக 252 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,617 ஆனது. ஜல்ராபதான், அக்லேரா மற்றும் ஜலவார் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவர் பலியான நிலையில் மொத்த கொரோனா பலி 193 ஆக உள்ளது.




இந்நிலையில் மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட், 'மாநிலத்தில் நடக்க வேண்டிய 10 மற்றும 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும். இவற்றிற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மே. 31க்கு பிறகும் ஊரடங்கு தொடரும். மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அனைத்து கடைகளுக்கும் திறக்க அனுமதி இல்லை' இ்வ்வாறு தெரிவித்தார்.



மேலும் செய்திகளை உடனுக்குடன்

https://nmsfriendsassociation.blogspot.com



No comments

Thanks