அண்ணன் தங்கை உறவு - Brother and Sister Relationship
அண்ணன் தங்கை உறவு
ஒரு பொண்ணு தன்னோட
குறைகளை தன்
பெற்றோர்கிட்ட
சொல்லுவா
ஆனால் தன்னோட
ஆசைகளையும்
கனவுகளையும்
அண்ணன் கிட்ட
மட்டும் தான்
சொல்லுவா
தங்கை தாய்க்கு இணை
எம் தனிமைக்கு துணை
என்னுடன் எப்போதும் இருப்பாள்
எனக்காக யாரையும் எதிர்ப்பால்
தங்கை உறவு அல்ல உயிருக்கு நிகரானது
அண்ணான்னு ஒரு பொண்ணு
மனசார கூப்பிட்டால்
அண்ணனுக்கு உண்டான
பாசம், அக்கறை, அன்பு, பாதுகாப்பு,
எல்லாம் அந்த அண்ணனோட கடமையாகிவிடும்
அன்பின் முதல் வடிவம் பாசம்
என்றால்
அதன் உயிர் வடிவம் தங்கையே
என்ன தான் எருமை மாடு மாதிரி வளர்ந்திருந்தாலும்
அண்ணனுக்கு தங்கச்சியும், தங்கச்சிக்கு அண்ணனும் என்னைக்குமே குழந்தைங்கதான்
அண்ணன் குழந்தையாகும் போது தங்கை தாயாகிறாள்
தங்கை குழந்தையாகும்போது அண்ணன் தந்தையாகிறான்
ஆயிரம் தான்
தங்கையிடம் சண்டையிட்டாலும் பேசாமல் இருப்பதில்லை இருக்கவும் முடியாது
ஆயிரம் சண்டைகள் ஆயிரம் கோபங்கள்
எத்தனை எத்தனை அசட்டு சாபங்கள் இருந்தும்
அவள் திருமணமாகி அடுத்தவன் வீட்டிற்கு செல்லும் போது
இவன் கண்கள் துளிர்க்கும் கண்ணீர்கள் சொல்கின்றன
அந்த சண்டைகளில் தான் சந்தோசம் உள்ளது என்று
சுண்டு விறல் பிடித்து
சூதனமாய் நடை பழகி
உச்சி முகர்ந்தெடுத்து
நெற்றியில் முத்தமிட்டு
உண்ட உணவு கூட
தொண்டை குழி
அடையும் முன்பு பங்கிட்டு
தந்திடுவான்
பந்தக்கால் நாட்டிடுவான்
பங்கு கொடுத்து அனுப்பிவிடுவான்
பாசக்கார அண்ணன் அவன்
தங்கை கொடுப்பது எல்லம்
அன்பு கலந்த கண்ணீரை ..
அண்ணன் தங்கை என்பது வார்த்தை மட்டும் அல்ல
அது ஒரு பாச உணர்வு
முகத்தில் மட்டும் அன்பை காட்டி
மனதில் வெறுப்போர் ஆயிரம் பேர் உலகில் இருக்க
முகத்தில் மட்டும் வெறுப்பது போல் காட்டி
உள்ளத்தால் உண்மையாக நேசிக்கும்
ஒரே உறவு தங்கை மட்டுமே..
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks