Breaking News - கொரோனா தொற்று போராட்டம் : மோடிக்கு 62 சதவீதத்தினர் ஆதரவு
கொரோனா தொற்று போராட்டம் : மோடிக்கு 62 சதவீதத்தினர் ஆதரவு
புதுடில்லி: கொரேனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி திறமையாக கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பா.ஜ.,அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று வரும் 30 ம் தேதி ஓராண்டை பூர்த்தி செய்ய உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ., ஜன்கல்யாண் பர்வ் என்று ஐந்து நாள் விழாவை கொண்டாடியது. மேலும் நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் பல்வேறு சாதனைகைளை குறித்தும் மக்களிடையே விளக்க முடிவு செய்துள்ளது.இதனிடையே நாடு முழுவதும் மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மோடி தலைமையிலான பா.ஜ.,அரசு கொரோனா தொற்றை திறம்பட கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேரும் ஓரளவு திறம்பட கையாண்டதாக 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 28) காலை 9:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767 ல் இருந்து 1,58,333 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,337 ல் இருந்து 4,531 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,426 ல் இருந்து 67,692 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 86,110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 7வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
கஜானாவை திறந்து உதவுங்கள்: சோனியா
வலியுறுத்தல்
புதுடில்லி: மத்திய அரசு கஜானாவை திறந்து தேவையுள்ள ஏழை குடும்பங்களுக்கு மாதத்துக்கு ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும் என காங்., தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் ‛ஸ்பீக் அப் இந்தியா' என்னும் பிரச்சாரத்துக்காக காங்., தலைவர் சோனியா வெளியிட்ட வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது: கடந்த இரு மாதங்களாக ஒட்டுமொத்த தேசமும் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தீவிரமான பணப் பற்றாக்குறை, நிதிப் பிரச்னையுடன் இருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பின் முதல் முறையாக, புலம்பெயர் தொழிலாளர்கள் காலில் செருப்பு இல்லாமல், பசியுடனும், தாகத்துடனும், போக்குவரத்துக்கு வழியில்லாமலும், தங்கள் சொந்த மண்ணைத் தேடி ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் நடப்பதைப் பார்க்கிறோம்.

அவர்களின் வலி, வேதனை, அழுகுரல் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் கேட்கிறது. ஆனால், மத்திய அரசுக்கு மட்டும் கேட்கவில்லை. தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதத்துக்கு ரூ.7,500ஐ 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும். இதில் ரூ.10 ஆயிரத்தை நேரடியாக வழங்கிட வேண்டும். 200 நாட்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை வழங்க வேண்டும். கஜானாவைத் திறந்து தேவையுள்ள மக்களுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களில் பாதுகாப்பாகச் சென்று சேர இலவசமாக வாகனங்களை, ரயில் போக்குவரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளைச்சல்கள் விற்கப்படாமல் உள்ளன. ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் இருக்கிறது. இந்தத் துயரம் அரசின் அறிவுக்கு எட்டவில்லை. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் நாளில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், தேசத்தின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் மத்திய அரசிடம் தொடர்ந்து விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள் ஆகியோரின் காயத்தை ஆற்றுங்கள், துயரத்தைப் போக்குங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு செவிமெடுத்து இதைக் கேட்க மறுப்பது ஏனோ தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
நான்கு பேருக்காக பெரிய விமானத்தை
வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்!
போபால்: போபாலைச் சேர்ந்த தொழிலதிபர் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை கொரோனா அச்சமின்றி டில்லிக்கு அனுப்ப 180 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப்போக்குவரத்து கடந்த 2 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போது திங்கள் முதல் உள்நாட்டு விமானங்கள் பல்வேறு வழிகாட்டுதல்களின் படி இயக்கப்படுகின்றன. இருப்பினும் விமானங்களில் பயனிப்போருக்கு யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துவிடுகிறது.
இந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர் ஒருவர் ஏ320 என்ற 180 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை தனது மகளுக்காக மட்டும் வாடகைக்கு எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு சொந்த ஊர் வந்த அவரது மகளால் ஊர் திரும்ப முடியவில்லை. தற்போது விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதால், விமானத்தில் அனுப்ப முடிவு செய்தார். ஆனால் பயணிகள் விமானத்தில் சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, கூட்டத்தை தவிர்க்க மொத்த விமானத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.

டில்லியிலிருந்து விமானிகளுடன் மட்டும் போபால் வந்த அவ்விமானம், தொழிலதிபரின் மகள், அவரது இரண்டு பேரப்பிள்ளைகள் மற்றும் உதவியாளர் ஒருவருடன் மீண்டும் டில்லி புறப்பட்டு சென்றது. விமானத்தை வாடகைக்கு எடுத்தவர் பெயரை குறிப்பிட விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சாதரணமாக ஏ320 விமானத்தை ஒரு டிரிப் வாடகைக்கு எடுக்க ரூ.20 லட்சம் ஆகும் என்கின்றனர்.
மதுரை, நெல்லை, புதுக்கோட்டையில் மழை
சென்னை: அக்கனி நட்சத்திரம் முடிந்த நிலையில் மதுரை, நெல்லை, தேனி , புதுக்கோட்டைஉள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம்
வசூலிக்க தடை
புதுடில்லி : சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பஸ்களில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புலம்பெயர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே கவுல் மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு பஸ்கள் அல்லது ரயிலில் செல்வதற்கு, அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அவர்கள் பயணத்திற்கான செலவை, தொழிலாளர்கள் கிளம்பும் மற்றும் அவர்கள் சென்றடையும் மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தவித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களே உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். உணவு வழங்கும் இடத்தை அறிவிப்பதுடன், புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் ரயில் அல்லது பஸ் எப்போது கிளம்பும் என்பதையும் விளக்க வேண்டும். ரயில் பயணத்தின் போது, ரயில் கிளம்பும் மாநில அரசு உணவு மற்றும் தண்ணீர் அளிக்க வேண்டும். வழியில், அதனை ரயில்வே அளிக்கும். அதேபோல், பஸ் பயணத்தின் போதும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான பயண திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: மே 1 ல் இருந்து தற்போதுவரை 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களில் 84 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கொரோனாவை நீங்களே கையாளலாம்:
அமித்ஷாவிற்கு மம்தா பதில்
கோல்கட்டா: கொரோனா விவகாரத்தை மே.வங்க அரசு சரியாக கையாளவில்லை என நினைத்தால், நீங்களே கையாண்டு கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்தேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் மம்தா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் தவறுகள் குறித்து மே.வங்க அரசுக்கு அமித்ஷா கடிதம் எழுதினார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அமித்ஷா எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து, மே.வங்கத்திற்கு தொடர்ச்சியாக மத்திய குழுவினரை அனுப்பி வருகிறீர்கள் என அமித்ஷாவிடம் கூறினேன். மாநில அரசு தனது கடமையை சரியாக கையாளவில்லை என நீங்கள் நினைத்தால், கொரோனா விவகாரத்தை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அதில் எனக்கு பிரச்னையில்லை என தெரிவித்தேன். அதற்கு அமித்ஷா, இல்லை, இல்லை,. மக்களால் தேர்வு செய்த அரசை நாங்கள் ஒதுக்கி வைக்க முடியாது என தெரிவித்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு தான் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், விமானங்கள், ரயில்கள் இயங்குகின்றன. ஆனால், மக்களின்நிலை என்ன?

பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். கொரோனா பரவவில்லை என்பதை பார்க்க வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். அதில், கால்வாசி, அரசியல்காரணமாக பரப்பப்பட்டது. பீஹார் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானும், ம.பி.,யும் கொரோனாவை பரப்பி வருகின்றன. அதில் நான் என்ன செய்ய முடியும். இந்த மோசமான நேரத்தில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.
எனக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக , அரசியல் சூழ்ச்சியுடன் மாநிலத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களுடன் ரயில் திடீரென வருகிறது. 2021 சட்டசபை தேர்தலில் காரணமாக, பிரச்னை ஏற்படுத்துகின்றனர். எனக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், மாநிலத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனக்கு இடையூறு செய்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயிலை திட்டமிட்டு இயக்குங்கள்.
ஒரு புறம் கொரோனாவையும், மறுபுரம் புயல்பாதிப்பையும் எதிர்கொள்ளும் நேரத்தில், திடீரென ரயில்கள் வருகின்றன. ரயிலை அனுப்புவதற்கு முன்னர் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டாமா? மாநில அரசுடன் ஏன் ஆலோசனைநடத்தவில்லை. எங்களின் திட்டமிடலை அவர்கள் பின்பற்றவில்லை. அரசியல் ரீதியாக தங்களுக்கு வசதியானவற்றை, கட்டாயப்படுத்தி செல்கின்றனர். இது போன்ற செயல்கள் மாநிலத்தை பாதிப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இயற்கை பேரழிவு மத்தியில் நாங்கள் இருக்கிறோம். நான் அதனை சரிசெய்வேனா? மக்கள் அவதிப்படும் பிரச்னையை கவனிப்பேனா அல்லது என் மீது சுமத்தப்பட்டுள்ள அரசியலை கவனிப்பேனா? இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில் பொருளாதார மந்தநிலை;
சமாளிக்க 2.2 டிரில்லியன் டாலர் ஒதுக்கீடு
டோக்கியோ: கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சமாளிக்க இதுவரை, 2.2 டிரில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது ஜப்பான் அரசு.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை, 16,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில், 13,973 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனர்; 869 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பரவல் கட்டுப்பட்டாலும், உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவுள்ள ஜப்பானிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்க, 117 ஜப்பான் யென் (1.1 டிரில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள தொகுப்புதவி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், ஜப்பானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இதுவரை அரசு அறிவித்துள்ள தொகுப்புதவி திட்டங்களின் மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
'உலக நாடு ஒன்றால் அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார தொகுப்புதவி திட்டம் இதுதான். இதுபோன்ற பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகளிருந்து மீண்டுவர ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் பயன்படும்' என, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும்
23 பேருக்கு கொரோனா
எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்தபோதிலும் அவ்வப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில், எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். அறிகுறிகளுடன் 2 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. இருவருமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.
கொரோனாவால் 1 லட்சம் பேரை
இழந்திருக்கிறோம் - டிரம்ப் வருத்தம்
கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனாவால் 58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 896 பேர் பலியாகி உள்ளனர். 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளனர்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான மைல்கல்லை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சமயத்தில் பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார் எனப் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதனால தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-
“தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 10,548 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிற மாநிலங்களில் இருந்து வந்த 1,253 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வருபவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 4,55,216 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.
மருத்துவப் பணியாளர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே எண்ணிக்கையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். உலகம் முழுவதும் பல வல்லரசு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.பெல்ஜியம் நாட்டில் இறப்பு விகிதம் 16 சதவீதமாக உள்ளது, அதுவே பிரான்ஸ் நாட்டில் 15 சதவீதமாக இருக்கிறது. இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் இறப்பு விகிதம் 14 சதவீதமாக உள்ளது. அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள அமெரிக்காவில் இறப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் இறப்பு விகிதம் மிக குறைந்த அளவில் 0.7 சதவீதமாக உள்ளது.
மூன்று மாதங்களாக கடினமாக உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படுக்கை வசதிகள், நிதி உதவி என அனைத்தையும் தமிழக அரசு செய்து வருகிறது.
அனைத்திற்கும் மேலாக அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் உழைப்பு, அரசின் நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் விட பொது மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து நாம் விரைவில் மீண்டு வர முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் ரெயில், விமானம், போக்குவரத்துக்கு தடை - கர்நாடக அரசு
தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் ரெயில், விமானம், வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதுஇந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.
தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.நிலைமை இப்படி இருப்பதால் ஊரடங்கை உடனடியாக வாபஸ்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.இதனிடையே மே 12 முதல் 15 ரெயில்கள் (எதிர் தடத்தில் 15 ரெயில்கள்) இயக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரெயில்கள் மற்றும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொ
ரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதன்கிழமை மதிய நிலவரப்படி, அதற்கு முந்தைய 19 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மராட்டியத்தில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும் பணிகளும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைளும் ஒருசேர நடைபெற வேண்டும். கொரோனா பரிசோதனைக்காக சளியை சேகரிக்கும் மையங்கள் நகரில் 15 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.
ரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் புதன்கிழமை மதிய நிலவரப்படி, அதற்கு முந்தைய 19 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மராட்டியத்தில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும் பணிகளும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைளும் ஒருசேர நடைபெற வேண்டும். கொரோனா பரிசோதனைக்காக சளியை சேகரிக்கும் மையங்கள் நகரில் 15 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம்த்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
https://nmsfriendsassociation.blogspot.com/
No comments
Thanks