எல்லா ஆண்களையும் முழுமையாக்குபவள் மனைவி - The wife makes all men Perfect
எல்லா ஆண்களையும் முழுமையாக்குபவள் மனைவி The wife makes all men Perfect
ஒரு ஆண், தன்னுடைய மனைவி
காலில் விழுவது
சில_மனைவிகளுக்கு
அவ்வளவு ஆனந்தமா!!
ஆம்....
அனைத்திலும் தன் முன்னே
அசையாமல் நிற்கும் தன்னவன்
தனக்காக ஒரு முறை
தன் காலில் விழும் போது
சந்தோசத்தின் உச்சிக்கே
செல்கிறாள்..
ஆனால் அதை
வெளிக்காட்ட தான் மாட்டாள்..
காரியம் சாதிக்கும்
புத்திசாலி மனைவி என்றும்
கணவனிடம் கோபத்தை
வெளிகாட்டிக் கொள்வதே
இல்லை ....😁
மனைவி இல்லை நிம்மதி என்று அதிகம் நகைச்சுவை ஆயிரம் பேசினாலும்....._
வீட்டில் நுழைந்தவுடன் மனைவியை காணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம்....!!❣️❣️❣️❣️❣️❣️❣️🌾❣️
உங்கள் இஷ்டம்
என
மனைவி சொல்லி விட்டால்
இஷ்டத்தை குழிதோண்டி
புதைத்து விட வேண்டும்
என்று அர்த்தம்...
நம்மில் பாதியாய் நம் கரம் பற்றி
நம்மை முழுமையாக்குபவள் மனைவி...
காதலுக்கும் வயது இல்லை..
காதலிப்பவர்க்கும் வயது இல்லை...
அவர்களின் மன புரிதலே ..
அவர்களின் காதலை..
மேலும் காதலிக்க செய்கிறது...
துணையாய் வந்தவளை தாய் போல நினைப்பவருக்கும்...
அன்பால் என்னுள் இணைந்த இதயமாய் !
என்னுள் துடிக்கும் இதயத்தின்
ஆற்றலாய் !
என் இருளில் ஓர் ஒளியாய் !என்றும் இயற்கையின் எழில் அழகாய் !
என்னுள் பாய்ந்தோடும் சக்தியாய் !
இதயத்தின் இணைப்பாய் !உன்னால் முழுமை அடைவேன் நான்..!!
என்றென்றும் என்னுள்
நீ வேண்டும் (மனைவியாய்) அம்மாவாய் ..!❤️
என்
மூச்சுக்காற்றும்
நீயடி . .. !!
உன்னால்
மூர்ச்சையாகி
போனவன் நானடி .. ... !!!
நான் ஒன்றும்
கவிஞன் இல்லை ஏனோ
உனை பார்த்த பின்புதான்
இப்படி ஆகிவிட்டேன்....!
விரலை தீண்டிய பின்பும்
என் உணர்வுகள்
உணர்வற்று கிடக்கிறது..🖤🖤
நீ
சொல்வதற்க்கெல்லாம்
தலையாட்டப்பிறந்த
உன்
தலையாட்டிபொம்மை
நான்
இருவரின்
புரிதல் ஏனினில்
இரு இதயங்கள்
மட்டும்
பேசிக்கொள்ளும்
மௌன மொழி.. 💕
இரவில் மீட்க்கும் இசை உலகில்
உறங்கும் பறவைக்கு உயிர் பிறக்கும்
பேரிடி ஓசை முழங்கிய பின்னே
அறை எல்லாம் சில நேரம்
அமைதி காக்கும்
ஒரு பருவ மங்கையின்
அடங்க மறுக்கும் காமத்தை எல்லாம்
காலினுடைய நரம்பின்
அதிர்வுகளே காட்டி கொடுக்கும் !
அருகாமைகள் இன்றி
அமைந்திடும் உலகில்
அவ்வளவு சுவாரஸ்யங்கள்
இருந்திட போவதில்லை !!
சித்திரம் தீட்டும் ஓவியன் கையில்
சிலை செய்யும் நுட்பம்
இருப்பதே இல்லை !! 🖤🖤😍
உரிமை எடுத்துக் கொண்டு நம்மிடம் கோபம் கொள்ளும் உறவுகள் எளிதில் எல்லோருக்கும் அமைவது இல்லை......
வரம் அந்த உறவு மனைவி ..
அதிகாலை சீண்டலும்
அந்திநேர சில்மிஷமுமாய்
அழகாகின்றது
அவனி 💕💕
தவணைகள்
தவறுகிறேன் வேண்டுமென்றே...
பத்து வட்டி
முத்தங்களுக்காக...!!!

No comments
Thanks