Breaking News - சீனா அத்துமீறல்: பிரதமர் முக்கிய ஆலோசனை
சீனா அத்துமீறல்: பிரதமர் முக்கிய ஆலோசனை

புதுடில்லி: இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக்கில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக,முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினர்.
'ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் இல்லை': ஐ.சி.எம்.ஆர்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பெரிய பக்க விளைவுகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்தது.

இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம். ஆர். பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது ;-'இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் கண்டறியப்படவில்லை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் உயிரியல் நம்பகத்தன்மை, இன்-விட்ரோ தரவு மற்றும் பாதுகாப்பை எடுத்து கொண்டு, கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதை பரிந்துரைக்கிறோம் பொது சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு தடுப்பு சிகிச்சையாக இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவுடன் மட்டுமே இருக்க வேண்டும். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் குமட்டல், வாந்தி மற்றும் படபடப்பு போன்ற பொதுவான பக்க விளைவுகள் இருக்கும். உணவுடன் மட்டுமே இதனை எடுத்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளோம். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து கொள்பவர்கள் பக்க விளைவுகளை தடுக்க, ஒருமுறை இ.சி.ஜி எடுக்க வேண்டும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை, சேலம் இடையே இன்று முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
சென்னை: சென்னை, சேலம் இடையே இன்று (மே.,27) முதல் விமானப் போக்குவரத்து துவங்க உள்ளது.

ஊரடங்கின் காரணமாக சுமார் 2 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப்போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை சேலம் இடையே இயக்கப்படும் ட்ருஜெட் விமானசேவை நாளை முதல் இயக்கப்படட உள்ளது. விமானம் புறப்படும், வந்து சேரும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25க்கு சேலம் சென்றடையும். சேலத்திலிருந்து காலை 8.50க்கு புறப்படும் விமானம் காலை 9.50க்கு சென்னை சென்றடையும்.

முதலில் சென்னையிலிருந்து காலை 9.50க்கு புறப்பட்டு 10.30க்கு சென்றடைந்தது. சேலத்திலிருந்து 11.25 க்கு புறப்பட்டு 11.25க்கு சென்னை சென்றடைந்தது. பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விமானத்தில் நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த 329 பேர்
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா விமானம் மூலம் பெங்களூருக்கு வந்தனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகள் தொடர்பான அச்சுறுத்தல்களால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூதரகம் மூலமாகவும், பிற வழிகள் மூலமாகவும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் மூலமும் கடற்படை மூலமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடர்ந்து, இதற்காக வந்தே பாரத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அரசு களமிறங்கியது. இதன் கீழ் ஏர்-இந்தியா விமானம் மூலமாக அமெரிக்காவிலிருந்து நாட்டு மக்களை திரும்ப அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி, சிகாகோ மற்றும் நியூயார்க் ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் பயணிகளுக்கான சேவையில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக இந்த 7 விமானங்களில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 2, சிகாகோவில் இருந்து 2, நியூயார்க்கில் இருந்து 2 மற்றும் வாஷிங்டனில் இருந்து 1 என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜே.எப்.கே சர்வதேச விமான நிலையத்தில் (JFK International Airport) இருந்து 329 இந்தியர்கள் ( 2 கைக்குழந்தைகள் உட்பட) ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலமாக பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் நேற்று நியூயார்க் நகரத்தில் இருந்து புறப்பட்டது. மேலும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நியூயார்க் நகரத்தில் இருந்து வரும் நான்காவது விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளை பரிசோதித்து, பாதுகாப்புடன் அனுப்ப வைக்கும் பணிகளில் நியூயார்க்கின் இந்திய தூதரக தலைவர் சந்தீப் சக்கரவர்த்தி மற்றும் துணை தலைவர் சத்ருகன் சின்ஹா உடன் இருந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை: சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 646 பேரில் சென்னையில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தெலுங்கானாவில் இருந்து தமிழகம் வந்தவர் ஆவார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் திருவள்ளூரில் 25 பேர், செங்கல்பட்டில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு:


மொத்த டிஸ்சார்ஜ் விவரங்கள்:


இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான் .இவரது வயது 55. சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது தவறி விழுந்தார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக தாலங்காமா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 17,728 பேருக்கு கொரோனா; 127 பேர் பலி
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 54 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 10,289 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 7 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,088 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15,105 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1535 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 30 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் இது வரை 17 லட்சத்து 300 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 லட்சத்து 37 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து ,301 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து,977 ஆக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 28 லட்சத்து 83 ஆயிரத்து,266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும்; மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல்
சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயற்படுத்த வேண்டிய புதிய உத்திகளை வகுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இதில் பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. பிரதானமாக கூட்டத்தில் மருத்துவர்களும், மருத்துவ வல்லுனர்கள் கூறியது, தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் கொரோனா இல்லாத ஒரு நிலை இருந்தது.ஆனால் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் எண்ணிக்கை கூட தொடங்கியது. தற்போதைய சூழ்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வரக்கூடியவர்களாலும் கொரோனா அதிகரித்து வருவதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
எனவே இந்த முறை ஊரடங்கில் சில நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் உடனடியாக ஊரடங்கில் தளர்வு கொண்டு வந்து விடக்கூடாது, இன்னும் 15 நாட்களுக்கு இந்த நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள். தேவையான தரவுகளை கொடுத்து பொதுமுடக்கத்தை நீட்டிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.குறிப்பாக அவர்களுடைய கவலை என்பது வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகப் படியாக இருக்கின்றது. இதனால் பொது போக்குவரத்து, திரையரங்குகள், மால் உள்ளிட்டவற்றை அனுமதிப்பதால் ஏற்படும் இந்த சிக்கல்களை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
எனவே ஊரடங்கு விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவு எடுத்து அவசரப்பட்டு அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதனால் முடக்கத்தை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து 30-ம் தேதி மீண்டும் ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தி அறிவிக்கலாம் என்று சொல்லாட்டுள்ளது. பொதுவாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனைக்கு பிறகு அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை என்ன ? அரசுக்கு என்ன பரிந்துரை வழங்கியுள்ளோம் போன்ற விஷயங்களை மருத்துவ வல்லுநர்கள் கூறுவார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்படாமல் , கூட்டம் மட்டுமே நடந்தது. ஏனென்றால் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி பொதுமக்கள் நீட்டிப்பதாக ? வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுக்கலாம் என்கின்ற ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.
எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதனால் பொது போக்குவரத்தை அனுமதிக்கவேண்டும். நாம சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலை கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அரசு தான் இறுதி முடிவு எடுக்க எடுக்கும். தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது 30ஆம் தேதி ஆலோசனை கூட்டத்தில் தெரிந்து விடும். பொதுவாக பொதுமுடக்கத்தை தளர்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனெனில் இப்போதைய முடிவில் ஊரடங்கை தளர்த்தினால் அது பொருத்தமாக இருக்காது, இன்னும் 4 நாட்கள் இருப்பதால் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் 30-ஆம் தேதியோடு ஊரடங்கை முடிப்பதாக அறிவித்து விடலாம் என அதிகாரிகள் கருதுவதாக தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48 லட்சத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,48,965 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,99,258-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
https://nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks