சிறுதானியங்கள் அவற்றின் சில நன்மைகள் - Health benefit of Millets
சிறுதானியங்கள் அவற்றின் சில நன்மைகள் - Health benefit of Millets
நம் முன்னோர்கள் இயற்கை அளித்த அருமையான காய் , கனிகள் , நவதானியங்கள் போன்ற உணவு வகைகளை உண்டு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் இப்போது நம் இளைய தலைமுறையினர் பீட்ஸா , பர்கர் , நூடுல்ஸ் மற்றும் பல துரித உணவு வகைகளை உண்டு தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர்.
அன்று உணவே மருந்தாக இருந்தது ஆனால் இப்போது மருந்தே உணவு ஆகி விட்டது.
நாம் மாறினால் தான் நம் அடுத்த தலைமுறை மக்களும் நல்வாழ்வு வாழ முடியும்..
வரகு:
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
எலும்பு வலுவடையும் மூட்டு வலியைக் குணப்படுத்தும்.
சாமை:
வயிற்றில் ஏற்படும் கோளாறு நீங்கும்.
மலச்சிக்கல் தீரும்.
கம்பு:
உடல் வலிமை பெறும் புத்துணர்ச்சி பெறும்.
கண்ணில் உள்ள நரம்புகள் புத்துணர்வு கொடுக்கும்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
இளநரை நீங்கும் மற்றும் வராமல் தடுக்கும்
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
குதிரை வாலி:
சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
சோளம்:
நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்
சர்க்கரை அளவை குறைக்கும்
சிறுநீர் அதிக அளவில் சுரந்து கொண்டே இருக்கும் இதனால் உடலில் உள்ள உப்பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது
கண் பார்வை குறைபாட்டை சீர் செய்யும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்து பலப்படுத்தும்.
கேழ்வரகு ( ராகி ):
உடல் உஷ்ணத்தை தணிக்கும்
குடலுக்கு வலிமை தரும்
எலும்புகள் உறுதி பெறும்
பசி தாங்கும்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
பனிவரகு:
நரம்பு மண்டலம் பலப்படுத்தும்
எலும்புகள் அடர்த்தி பெறும்
கல்லீரலில் உள்ள கற்களை கரைக்கும் மற்றும் வராமல் தடுக்கும்
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது
உடல் பருமனைக் குறைக்கும்
பெண்களுக்கு ஏற்றது.
www.nmsfriendsassociation.blogspot.com
அருமையான பதிவு அனைவரும் பாரம்பரிய உணவை உண்டு வாழ்ந்தால் நமக்கு எந்த நோய்களும் அண்டாது..
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteThanks
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநாமும் , நம் அடுத்து வரும் தலைமுறை மக்களும் ஆரோக்கியமாக வாழ நம் பாரம்பரிய உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும். மாற்றங்களை நம்மிடம் இருந்து ஆரம்பம் ஆகட்டும்.