The Daily News - 4 எல்லைகளுக்கு குறி.அடுத்தடுத்த மீறல். இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.என்ன நடக்கும்?
24-05-2020
மாநில செய்திகள்
சென்னை:
தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார். உலகம் முழுக்க ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். கடந்த மாதம் தொடங்கிய நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதில் சூரிய உதிப்பதற்கு முன் சாப்பிட வேண்டும், அதன்பின் நோன்பு இருக்க வேண்டும், மீண்டும் சூரியன் மறைந்த பின்தான் நோன்பை துறக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் இதை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையில் ரமலான் பண்டிகை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு காஜி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரமலான் பெருநாள் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் மே 25ல் ரம்ஜான் கொண்டாடப்படும். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் கண்டிப்பாக நாளை நோன்பு நோற்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். பொதுவாக ரம்ஜான் பிறை தெரிந்த மறுநாள்தான் கொண்டாடப்படும். இன்று பிறை தெரியவில்லை. அமாவாசை முடியும் என்பதால் நாளை பிறை தெரியும். இதனால் நாளை மறுநாள் தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாடப்படும். ஆனால் சில மத்திய கிழக்கு நாடுகளில் இன்று பிறை தெரிந்த காரணத்தால் நாளையே ரம்ஜான் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெப்பநிலை
சென்னை,
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது. கத்திரி வெயிலால் கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.
சமீபத்தில் தெற்கு வங்க கடலில் தோன்றி வங்காளதேசம் நோக்கி பயணித்த அம்பன் புயலால், தமிழகத்தில் கடும் வெப்பநிலை நிலவியது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 6 இடங்களில் 2வது நாளாக இன்று வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது. இதன்படி, திருத்தணியில் 110.84 டிகிரி, வேலூர் 108.32 டிகிரி, மீனம்பாக்கம் 106.16 டிகிரி, ஈரோடு 104.72 டிகிரி, திருப்பூர் 104.36 டிகிரி மற்றும் காஞ்சிபுரம் 104.36 டிகிரி என வெப்பநிலை பதிவாகி உள்ளது.
பேக்கரி பிஸ்கட் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி,மயக்கம்.. விழுப்புரத்தில் பரபரப்பு..என்ன நடந்தது?
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே தெருவில் விற்கப்பட்ட பிரட் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருட்களை சாப்பிட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 322 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 298 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 4 வது கட்டமாக வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரையில் கிராமப் பகுதிகள் அதிகளவில் உள்ளன. கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஜவுளி, பாத்திரங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என்றால் பல கி.மீ பயணம் செய்து விழுப்புரம் நகரப் பகுதிக்கு வர வேண்டும்.
இதனால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனம், ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் வைத்து கிராமங்களில் விற்பனை செய்யும் நடைமுறை காலம் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் அருகே தெருவில் விற்கப்பட்ட பேக்கரி உணவு பொருட்களை சாப்பிட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பொய்கை அரசூர் கிராமத்தில், பிரட் மற்றும் பேக்கரி பொருட்கள் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றை வாங்கி சாப்பிட்ட அப்பகுதியை சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தைகளை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இச்சம்பவத்தால் பொய்கை அரசூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
நகர் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி
சென்னை:
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டுமே முடி திருத்தம் (சலூன்) மற்றும் அழகு நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நாளை (மே 24) முதல் சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் இயங்க அனுமதியளித்து முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ஊரக பகுதியில் முடி திருத்தும் நிலையங்கள் மே 19 முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது
தற்போது முடி திருத்தம் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து, சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்களை நாளை (மே 24) முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்க அனுமதி கிடையாது. அந்த பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.
முடிதிருத்தம் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதையும், முக கவசங்கள் அணிவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையத்தை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். ஏ.சி., வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்
4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்?
டெல்லி:
இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தற்போது அறிவிக்கப்படாத பனிப்போர் நடந்து வருகிறது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான யுத்தம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சீனா திபெத் மற்றும் நேபாளம் மூலம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நேபாளம் நாடு மூலம் இந்தியா மீது சீனா மறைமுக பனிப்போரை நடத்தி வருகிறது.
எங்கு அத்துமீறியது
அதேபோல் சீனா சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் உடன் தொடர்ந்து மோதி வருகிறது. ஏற்கனவே சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் சண்டை வந்துள்ளது. கடந்த 10ம் தேதி இந்த சண்டை இரண்டு நாட்டிற்குள் இடையில் வந்தது. அதேபோல் கடந்த 5ம் தேதி இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் ஹெலிகாப்டர்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறி உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை மூலம் விரட்டி அடிக்கப்பட்டது.
என்ன காரணம் இப்படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடந்து வரும் நிலையில் இன்றுதான் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த இடங்களில் அத்துமீறல் அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. இந்த நான்கு இடங்களும் லடாக் மற்றும் சிக்கும் கீழேதான் வருகிறது. இங்குதான் தற்போது சீனா படைகளை குவித்து வருகிறது. இந்த பகுதிகள் மூலம் சீனா மிக எளிதாக இந்தியாவிற்குள் ஊடுருவ முடியும் என்கிறார்கள். இங்கு பாதுகாப்பு செய்வதும் மிகவும் கடினம்.
இனி என்ன நடக்கும் இதனால் இந்த பகுதியில் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். அங்கு இனி வரும் நாட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதேபோல் நேபாளம் எல்லையில் படைகள் அதிகம் குவிக்கப்படும். சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதால் சீனா பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என்கிறார்கள்.
திக்குமுக்காடும் ஆயில் நிறுவனங்கள்.. இந்தியாவில் பெட்ரோலிய தேவை 8% சரியும்.. இறக்குமதி குறையலாம்..!
டெல்லி:
இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை 2020ம் நிதியாண்டில், ஒரு நாளைக்கு 8% குறைந்து 4,594 பேரல்கள் குறையலாம் என்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தெரிவித்துள்ளது.
இதே நாட்டில் பெட்ரோல் தேவையானது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒரு நாளைக்கு 350 ஆயிரம் பேரல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளது.
மேற்கு வங்கத்துக்கு ரூ.1,௦௦௦ கோடி இடைக்கால நிவாரணம்: மோடி அறிவிப்பு
பாசிர்ஹட் :
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், 'அம்பான்' புயலால் சேதம் அடைந்த பகுதிகளை, பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் வாயிலாக, நேற்று பார்வையிட்டார்.
இடைக்கால நிவாரணமாக, மேற்கு வங்கத்துக்கு, 1,000 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு, 100 கோடி ரூபாயும் உதவித் தொகை அறிவித்தார். ''உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.வங்கக்கடலில் உருவான அம்பான் புயல், கடந்த, 20ல், மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது, மேற்கு வங்கத்தில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது.
மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், மாநிலம் முழுதும், ௫,௦௦௦க்கும் மேற்பட்ட மரங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன; வீடுகளின் மேற்கூரைகள் அடித்து செல்லப்பட்டன. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மற்றும் மேற்கு மித்னாபூர், கோல்கட்டா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய மாவட்டங்கள், கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இந்த கொடூர புயலுக்கு, மேற்கு வங்கத்தில், 77 பேர் உயிரிழந்துள்ளனர். மறுசீரமைப்பு பணிகளுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாகவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:மாநிலத்தில், ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் வேறு மக்களை அச்சுறுத்தி வருகிறது.இதற்கிடையே, அம்பான் புயலால் கடும் சேதங்களை சந்தித்துள்ளோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், மேற்கு வங்க அரசு, மூன்று சவால்களை ஒரே நேரத்தில் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.மொத்தம், எட்டு மாவட்டங்கள் வரை, கடும் சேதம் அடைந்துள்ளன. 60 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆறு கோடிக்கும் அதிகமானோர், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடரில் இருந்து மீண்டு, இயல்பு நிலை திரும்ப, கொஞ்ச காலம் ஆகும்.தொலை தொடர்பு சேவை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. என் வீட்டு தொலைபேசி மட்டும் வேலை செய்கிறது; ஆனால், 'மொபைல் போன்' வேலை செய்யவில்லை. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. மீட்புப் படையினர், போலீசார், அதிகாரிகள், பல்வேறு துறை பணியாளர்களும், இரவு பகலாக உழைக்கின்றனர்.சேதங்கள் குறித்த முதற்கட்ட அறிக்கை தயாராக உள்ளது. மாநிலத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில், புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கோல்கட்டா வந்தார். அவரை, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, விமான நிலையத்தில் வரவேற்றார்.பின், பிரதமர் மோடி, முதல்வர் மம்தா மற்றும் கவர்னர் ஜக்தீப் தன்கர் ஆகியோர், ஹெலிகாப்டர் வாயிலாக, சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து ஒடிசாவில், அம்பான் புயல் பாதித்த பகுதிகளையும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் வாயிலாக பார்வையிட்டார்
பின், மத்திய அரசு சார்பில், இடைக்கால நிவாரணமாக மேற்கு வங்கத்துக்கு, 1,000 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு, ௫௦௦ கோடி ரூபாயும் நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.'சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை, விவசாயம், மின்சாரம் மற்றும் இதர துறைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து, விரிவான ஆய்வு நடத்தப்படும்' என, பிரதமர் தெரிவித்தார்.இதற்கிடையே, காங்., -- எம்.பி., ராகுல் வெளியிட்டுள்ள செய்தியில், அம்பான் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த கடும் நெருக்கடியில் இருந்து, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்கள் விரைவில் மீள, பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த கடும் நெருக்கடியில் இருந்து, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்கள் விரைவில் மீள, பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதில் நாதுராம் கோட்சே புகைப்படம்: பேஸ்புக்கில் பதிவிட்டவர் தலைமறைவு
மத்திய பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)-யில் நிர்வாகியாக இருப்பவர் சிவம் சுக்லா. இவர் தனதுபேஸ்புக் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அதில், பத்து ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு பதில் அவரை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் படம் கிராபிக்ஸ் முறையில் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. மேலும், அவரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதனிடையே, அவர் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிதி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர். ஆனால், போலீஸார் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர்எஸ்.எம். படேல் கூறும்போது, “பேஸ்புக்கில் வந்த பதிவை வைத்து ஒருவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. எனினும், இதுகுறித்து விசாரித்துவருகிறோம். தற்போது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகிறோம்” என்றார்.
அதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் வருவாயை பெருக்க மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோவிட் வரியை உயர்த்துமாறு தெரிவித்து ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார்.
இதனால் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் பெரும்பாலும் மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளதால், வருவாயை பெருக்க மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என துணைநிலை கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கிரண்பேடி கூறுகையில், ஆளுநர் மாளிகை கடந்த 4 ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் புதுவை மாநில கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்பட பல நிலுவைதொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த கூறினேன். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை புதுவை அரசு பார்க்க வேண்டும். அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை நோக்குவது அவசியம். மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது.
இதுபோன்ற நிலையை புரிந்து கொண்டு, அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் திட்டங்களை பின்பற்ற முடிவெடுப்பவர்களுடனே தொடர வேண்டும். இதற்கு கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் வழங்கும் என கிரண்பேடி கூறியுள்ளார்
உலகச் செய்திகள்
கோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்!
டெல்லி:
சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார். இரண்டு நாடுகளிலும் பொருளாதார ரீதியான முதலீடுகளை செய்ய அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் தொடர்ந்து மோதி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக ஆசியாவில் இருக்கும் சிறு சிறு நாடுகளை ஒன்று திரட்ட இந்தியா முயன்று வருகிறது. பாகிஸ்தான், நேபாளம் சீனாவிற்கு ஆதரவாக இருப்பதால் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
மோடி பேசினார்
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடன் பேசினார். போனில் இவர்கள் உரையாடினார்கள். இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்தும் வகையில் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் இந்தியா கூடுதல் முதலீடுகளை செய்யும் என்றும், இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்யுமென்றும் மோடி இதில் வாக்குறுதி அளித்தார்.
இலங்கை உறவு
ஏற்கனவே கடந்த வருட அறிவிப்பின் மூலமே இலங்கைக்கு இந்தியா 400 மில்லியன் டாலர் வளர்ச்சி நிதியாக கடன் அளிக்க முடிவு செய்தது. அதேபோல் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்காக 50 மில்லியன் டாலர் உதவி செய்வதாக கடந்த வருடம் அறிவித்தது. தற்போது அதற்கும் மேல் கூடுதலாக உதவி செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. சீனா உடன் இலங்கை நெருக்கம் ஆவதை தடுக்கும் விதமாக இந்த முடிவை இந்த எடுத்துள்ளது.
சீனா உறவு
கோத்தபாய ராஜபக்சே இந்தியாவில்தான் படித்தவர். ஆனாலும் அவர் சீனாவிற்கும் கொஞ்சம் நெருக்கம் ஆனவர். இதனால் அவர் அதிபர் ஆனதில் இருந்தே இந்தியா அவரை தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. அவர் அதிபராகி சில மணி நேரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவரை போய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் தர இதுதான் காரணம் என்கிறார்கள்.
சீனாவிற்கு செக்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை வந்தால் அதில் ஆசியாவில் இருக்கும் சிறிய நாடுகளின் பங்கு அதிக முக்கியத்துவம் பெறும். முக்கியமாக இந்தியாவிற்கு அருகே இருக்கும் இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதனால் தற்போது இந்தியா இலங்கை போன்ற நாடுகளை தங்கள் பக்கம் இழுத்து சீனாவிற்கு செக் வைக்க முயன்று வருகிறது.
கன்னியாகுமரி செய்திகள்
அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்.. சரமாரி பெண் தொடர்பு.. சிபிசிஐடி வசம் நாகர்கோவில் காசி வழக்கு!
நாகர்கோவில்:
யார் அந்த நடிகை மகள், வீடியோவில் காசியுடன் நெருக்கமாக இருந்த விஐபி மனைவி யார், நாகர்கோயில் காசிக்கு உதவிய புள்ளிகள் யார் யார் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.. காரணம், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் காசியின் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.

நாகர்கோவில் காசி சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை எல்லாரையுமே சீரழித்துள்ளார்.. இது சம்பந்தமான நிர்வாண போட்டோக்கள், ஆபாச வீடியோக்கள் காசியின் லேப்டாப்பில் சிக்கியது.. அதை அடிப்படையாக வைத்துதான் விசாரணை நடந்து வருகிறது
ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்தபோதே விஐபிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இத்தனை பெண்களை நாசம் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை மிரட்டி பறித்துள்ளார் என்றால் நிச்சயம் பின்புலம் இல்லாமல் செய்திருக்க முடியாது என்று முதலில் இருந்தே நம்பப்பட்டு வந்தது.
பாதிக்கப்பட்டவர்களும், குடும்ப மானம் வெளியாகி கேவலப்பட்டுவிடுவோம் என்பதால் இதுவரை புகார் தராமல் உள்ளனர். ஏற்கனவே ஒருமுறை போலீஸ் காவலில் காசியிடம் விசாரணை நடந்தது.. எந்த தகவலும் பெரிதாக வரவில்லை.. ஆபாச வீடியோவை அப்லோடு செய்யும் ஜினோ என்ற நண்பனை பற்றி மட்டும்தான் விஷயம் வந்தது.
இந்த சமயத்தில்தான் சிறுமி ஒருவரும் காசி மீது புகார் தந்தார்.. இந்த சிறுமியை இரண்டரை வருஷமாகவே காசி காதலிப்பது போல நடித்து சீரழித்து வந்துள்ளார்.. அந்த சிறுமியிடம் பணம் பறிக்க முயல்வதற்குள்தான் போலீசில் சிக்கி கொண்டார். அதனால் இவர் யார் யாரை ஏமாற்றி பணம் பறித்தால் என்பதை விசாரிக்க திரும்பவும் 6 நாள் விசாரணை நடந்து
இதில் பெரிய பெரிய புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால், அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டியிருக்கும் என போலீஸ் தயக்கம் காட்டுவதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.. அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி, சிபிஐக்கு மாற்றினால் பல தகவல்கள் கிடைக்கலாம் என சமூக ஆர்வலர்களும் கூறியபடியே இருந்தனர்.
முதலில் காசி ஏமாற்றியது வெறும் தமிழகத்தில் மட்டும்தான் என்று யூகிக்கப்பட்டது.. பிறகுதான் இவர் பெங்களூரு, பாண்டிச்சேரி என பிற மாநிலங்களிலும் வேலையை காட்டியதால், சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இதை அதிகமாக வலியுறுத்தி வருவது மாதர் சங்கத்தினர்தான்... "காசியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியே ஆகவேண்டும்" என்கிறார்கள். இந்நிலையில் தற்போது காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் உள்ள 5 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை
நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் வருபவர்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது.
ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வருபவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 22 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். மயிலாடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பலியானார்.
ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் நேற்று காலையில் 25 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஆளூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இன்று காலை கொரோனா வார்டில் 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வார்டில் உள்ள 22 பேரையும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதில் இன்று 5 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கும் பட்சத்தில் நாளை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
மாவட்டம் முழுவதம் இதுவரை 11,091 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10,696 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 342 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 7,849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5,864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Great Job, keep it up
ReplyDeleteGood Job Continue your Service
ReplyDelete