Advertisement

Breaking News

உன் வருகைக்காய் என் இனிய ராட்சசியே !!!- Your visit is my sweet one


உன் வருகைக்காய் என் இனிய ராட்சசியே!
 Your visit is my sweet one



நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே💕🎶😍😘💋

களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் மதங்கொண்ட யானை என் வலிமை !! 
இதோ இந்த பூ முடித்த பூவையின் கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வைக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!
இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதாலோ!💕💕💕

இடம் மாறிய
இதயங்களின்
இன்னிசைப் பயிற்சி💕💕💕
💕💕💕💕காதலாய்
இதயத்தினுள்ளே...😍

அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் என் இதயம்.,
ஏனோ,,
உன் நினைவுகளுக்கு மட்டும் கமா வைத்துச் செல்கிறது,,,💘

என்னை வெல்வதற்கு  யாரும் இல்லை
உன் அன்பைத் தவிர..💘

என்னைக் கொல்வதற்கு யாரும் இல்லை உன் பிரிவைத் தவிர!!!!ராட்சசியே💘💘💘


உலகிலேயே மிக
கொடிய நோய்
நினைவுகள் தான்....
ஊரடங்கு போட்டாலும்
உன்
நினைவுகள்
அடங்குவதில்லை... என்னுள் 💕

நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, உன்  முகத்தில் கிடையாதே! 💕

முழுமதியே!
நிலவே!
பெண்மானைப் போன்ற இந்த மங்கையுடன் ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால்
களப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட, 
பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்! 💕

எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு ரசிக்கப்படுவது மட்டும் தான் கவிதைகளா?....❣️❣️❣️

உன் நினைவுடன் நான் கடந்து போகும் அனைத்து நொடிகளும் எனக்கு கவிதைதான்...❤️❣️அழகியே❣️

பேரழகே
உன் ஒற்றை சிரிப்பினில் ஓராயிரம் மூத்துக்கள் சிந்தும் ..
உன் ஒற்றை பார்வையில் ஒளியிழந்துடி விண்மீன் கூட்டம் ..
குளத்தின் நடுவே பூத்த ஆகாயத் தாமரையே !!!!💕

புரிந்துக் கொள்ள முடியாத இடத்தில் நீ உள்ள வரை 
உன்னை பிடித்தவர்களும் இல்லை பிடிக்காதவர்களும் இல்லை...

உந்தன்
சின்ன சின்ன 
அசைவுகளில்
எந்தன்
மிச்ச உலகம்
சுழலுதடி.. 💙

நான் உறங்காது காணும் கனவுகளாய் நீ...
என் இமையோரமும் இதயத்தினோரமும் நிலாடுகிறது உன் எண்ணம்..💛..❤...

கற்பனைகளும்
கனவுகளும்
கதை
பேசிக்
கொள்கின்றன
கள்ளியே
உனைக்
காண்கையிலே
மட்டும்....💕


ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய மேகலை !!!
எனை வாட்டும் அழகோ! 
வண்ண மயிலோ! 
இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம் !!
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே கொண்ட பேரழகி!!!

பனிப்படர்ந்த அவளது கூந்தல்..😉
உயிர் குவிக்கும் அவளது இதழ்கள்..😍😍
இமைப்பொழுதில் மொழியறியா இரு விழிகள்..👀👀
என்று முடியுமோ இந்த பாவியின் ஏக்கம்..😊😊

இமைகள் விழித்திருக்க🌹🌹🌹
இதழ்கள் இனித்திருக்க
மனமோ லயித்திருக்க
காத்திருக்கிறேன்🌹🌹🌹
உன் வருகைக்கு ராட்சசியே🌹🌹🌹 

www.nmsfriendsassociation.blogspot.com


1 comment:

Thanks