Breaking News - ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் - அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் - அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதால், ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை,
கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மீன்பிடி விசைப்படகுகள், எந்திரம் பொருத்திய மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் ஆகிய அனைத்து மீன்பிடி படகுகளின் மீன்பிடி தொழிலும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் மற்றும் அனைத்து கரையோர மீன்பிடி இறங்குதளங்களிலும் கொரோனா நோய்பரவலை தடுப்பதற்கும் அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாரம்பரிய மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளில் பணிபுரியும் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கடந்த மார்ச் 20-ந் தேதியிட்ட ஆணையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையிலான 61 நாட்களுக்கும் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடைவிதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகளின் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகள் தொழிலில் ஈடுபடாத காலத்தை, மீன்பிடி தடைக்காலமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றபடி தடைக்காலத்தை மாற்றி அறிவிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தனது மே 25-ந் தேதியிட்ட ஆணையில், தற்போது அமல்படுத்தப்படும் ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31-ந் தேதி வரையிலான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31-ந் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.இதனால், கொரோனா நோய் கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ந் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.
62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு
இது குறித்து அகில இந்திய ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தென் மண்டல தலைவர் முகேஷ் குப்சந்தானி கூறியதாவது:-
இங்குள்ள கடைகளையும் திறக்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.அப்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளித்தனர். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க எங்கள் சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது, எந்த பலனும் அளிக்கவில்லை - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை.
கொரோனா பாதிப்பை சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கொரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.
ஆனால் உண்மையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் நேற்றைய தினத்திற்கான உலகின் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.
சுரு,
கோடை காலம் தொடங்கிய பின்பு நாடு முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாட்டில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வது முடங்கி போயுள்ளது.
நாட்டின் அதிக வெப்பநிலை நேற்று ராஜஸ்தானின் சுரு நகரில் பதிவாகி உள்ளது. இதுபற்றி சுரு நகரில் அமைந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ரவீந்திர சிகாக் கூறும்பொழுது, நாட்டில் 50 டிகிரி செல்சியஸ், நேற்றைய நாளுக்கான அதிக வெப்பநிலையாக சுரு நகரில் பதிவாகி உள்ளது
ஆர்.எஸ்.பாரதி வழக்கு: மே 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்பான விசாரணையை மே 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
சென்னை,
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, வரும் 31ஆம் தேதி வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி, கைதுக்கு முன்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக்கு வாரிசு யார்? ஜெ. தீபா பேட்டி
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணன் மகனும், அண்ணன் மகளும் இரண்டாம் நிலை வாரிசு என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய சொல்லி உள்ளது என நிருபர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த தீபா, மெமொரியல் உருவாக்குவதால் மக்களுக்கு என்ன பயன் என்பதை நீதிபதிகள் பட்டியிலிட்டுள்ளனர்.
இறுதியாக சொல்லக்கூடியது என்னவென்றால் இதற்கும் மேலாக இப்படி ஒரு அநியாயமாக செயலை செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. ஜெயலலிதா சொத்து தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாக உள்ளது. தீர்ப்பும் அவசர சட்டமும் முரணாக உள்ளது. அவரச சட்டம் செல்லாது.
மேல்முறையீடு செல்ல நானும் தீபக்கும் முடிவு செய்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்வோம். அதன்பிறகே போயஸ் தோட்டம் செல்வோம்.
எனக்கும் தம்பிக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தர நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாங்கள் தான் சட்டப்பூர்வ வாரிசு என நீதிமன்றமே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்முலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 17,728 இல் இருந்து 18,545 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,645 இல் இருந்து 12,203 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 8,500 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிப்பதா? - ஆளும் கூட்டணி கட்சிகள் கண்டனம்
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதாவுக்கு ஆளும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ெகாரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு வேகமாக பரவும் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் பாரதீய ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் நாராயண் ரானே ராஜ்பவன் சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டதாகவும், எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனால் கொரோனாவுக்கு மத்தியில் மராட்டியத்தில் அரசியல் விவகாரம் சூடுபிடித்தது.இந்த பிரச்சினை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இவர்களின் இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அவர்கள் நடத்திய ஆலோசனை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாரதீய ஜனதா முயற்சிப்பதாக கூறி அந்த கட்சிக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுபற்றி சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
மராட்டியத்தில் எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தனிமைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்தை கவிழ்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும். அதற்கான சூத்திரத்தை இன்னும் எதிர்க்கட்சி கண்டுபிடிக்கவில்லை. மராட்டியத்துடன் ஒப்பிடும் போது, குஜராத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மிக மோசமாக உள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டுமானால் முதலில் குஜராத்தில் தான் அமல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “மராட்டியத்தை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர்கள் அதிகார பேராசை கொண்டவர்கள். தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு உதவுவது பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது. அவர்கள் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அரசு நிலையானது. முறையாக செயல்படுகிறது” என்றார்.தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான நவாப் மாலிக் கூறுகையில், “இந்த அரசாங்கம் வலுவானது. மகா விகாஷ் கூட்டணிக்கு போதுமான ஆதரவு உள்ளது. 3 கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் தான் இந்த அரசு கவிழ்ந்து விடும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று வதந்தியை பரப்புகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மராட்டிய அரசு கடைப்பிடித்து வருகிறது. இங்கு தான் நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு
நடிகர்: ஹரீஷ் கல்யாண், விவேக் நடிகை: தான்யா ஹோப் டைரக்ஷன்: கிருஷ்ணா மாரிமுத்து இசை : அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஒளிப்பதிவு : செல்வக்குமார் எஸ் கே
கருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் "தாராள பிரபு" விமர்சனம் பார்க்கலாம். "தாராள பிரபு" கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் கால்பந்தாட்ட வீரர். விளையாட்டு கோட்டாவில் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவருக்கும், தன்யாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதன்பிறகு விவேக்கை விட்டு விலகுகிறார். ஆனால் தன்யாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத குறை உள்ளதால் ஒரு சிறுமியை தத்தெடுக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களும், பிரச்சினைகளும் மீதி கதை.
ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். காதல் வயப்பட்டு தன்யாவை சுற்றிவரும் காட்சிகள் சுவாரஸ்யம். மனைவி பிரிவிலும், அவரும் குழந்தையும்தான் தனது உலகம் என்று உருகும்போதும் நெகிழ வைக்கிறார். கருத்தரிப்பு மைய டாக்டராக வரும் விவேக் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு நகைச்சுவை குணசித்திர நடிப்பில் அமர்க்களப்படுத்தி உள்ளார்.
ஹரிஷ் கல்யாணை சுற்றிவந்து விந்தணு தானத்துக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. தன்னால் ஹரிஷ் கல்யாண் வாழ்க்கை தடம் புரண்டது அறிந்து கலங்கும்போது அனுபவ நடிப்பால் கவர்கிறார். தன்யா அமைதியான காதலியாக வருகிறார். அனுபமா, பாட்டியாக வரும் சச்சு கதாபாத்திரங்களும் நேர்த்தி.
விந்தணு தான விழிப்புணர்வை மையமாக வைத்து கதையை கலகலப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. இறுதி வரை காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைத்ததில் அவரது திறமை பளிச்சிடுகிறது. செல்வகுமாரின் கேமரா கதையின் தன்மைக்கு ஏற்ப காட்சிகளை கச்சிதமாக படம்பிடித்து உள்ளது. பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை பலம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
https://nmsfriendsassociation.blogspot.com
சென்னை,
கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மீன்பிடி விசைப்படகுகள், எந்திரம் பொருத்திய மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் ஆகிய அனைத்து மீன்பிடி படகுகளின் மீன்பிடி தொழிலும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் மற்றும் அனைத்து கரையோர மீன்பிடி இறங்குதளங்களிலும் கொரோனா நோய்பரவலை தடுப்பதற்கும் அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாரம்பரிய மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளில் பணிபுரியும் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கடந்த மார்ச் 20-ந் தேதியிட்ட ஆணையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையிலான 61 நாட்களுக்கும் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடைவிதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகளின் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகள் தொழிலில் ஈடுபடாத காலத்தை, மீன்பிடி தடைக்காலமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றபடி தடைக்காலத்தை மாற்றி அறிவிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தனது மே 25-ந் தேதியிட்ட ஆணையில், தற்போது அமல்படுத்தப்படும் ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31-ந் தேதி வரையிலான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31-ந் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.இதனால், கொரோனா நோய் கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ந் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை அண்ணாசாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. சுமார் 2 ஆயிரம் கடைகளுக்கு மேல் இயங்கி வரும் இந்த எலக்ட்ரானிக் சந்தையானது ஆசிய அளவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இங்கு சாதாரண டி.வி. ரிமோட் முதல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து வகையான எலக்ட்ரானிக் பொருட்களும் அவற்றுக்கான உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 62 நாட்களாக கடைகள் மூடப்பட்டு இருந்தன. நேற்று முதல் ரிச்சி தெருவில் உள்ள கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.இது குறித்து அகில இந்திய ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தென் மண்டல தலைவர் முகேஷ் குப்சந்தானி கூறியதாவது:-
இங்குள்ள கடைகளையும் திறக்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.அப்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளித்தனர். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க எங்கள் சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று கடைகள் திறக்கப்பட்டதையொட்டி, ஏராளமானோர் அங்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை.
கொரோனா பாதிப்பை சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கொரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.
ஆனால் உண்மையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கப்போகிறது. தற்போது இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் ஊரடங்கின் தோல்வியே ஆகும். பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை ஊரடங்கு தரவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என்றார்.
இந்தியாவின் சுரு நகரில் பதிவான உலகின் அதிக வெப்பநிலை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் நேற்றைய தினத்திற்கான உலகின் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.
சுரு,
கோடை காலம் தொடங்கிய பின்பு நாடு முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாட்டில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வது முடங்கி போயுள்ளது.
நாட்டின் அதிக வெப்பநிலை நேற்று ராஜஸ்தானின் சுரு நகரில் பதிவாகி உள்ளது. இதுபற்றி சுரு நகரில் அமைந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ரவீந்திர சிகாக் கூறும்பொழுது, நாட்டில் 50 டிகிரி செல்சியஸ், நேற்றைய நாளுக்கான அதிக வெப்பநிலையாக சுரு நகரில் பதிவாகி உள்ளது
இதே 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பாகிஸ்தான் நாட்டின் ஜகோபாபாத் நகரிலும் பதிவாகி உள்ளது. நேற்றைய நாளில் உலகின் மிக அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளாக சுரு மற்றும் ஜகோபாபாத் நகரங்கள் இருந்தன என தெரிவித்து உள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்பான விசாரணையை மே 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
சென்னை,
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, வரும் 31ஆம் தேதி வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி, கைதுக்கு முன்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை மே 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணன் மகனும், அண்ணன் மகளும் இரண்டாம் நிலை வாரிசு என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய சொல்லி உள்ளது என நிருபர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த தீபா, மெமொரியல் உருவாக்குவதால் மக்களுக்கு என்ன பயன் என்பதை நீதிபதிகள் பட்டியிலிட்டுள்ளனர்.
இறுதியாக சொல்லக்கூடியது என்னவென்றால் இதற்கும் மேலாக இப்படி ஒரு அநியாயமாக செயலை செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. ஜெயலலிதா சொத்து தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாக உள்ளது. தீர்ப்பும் அவசர சட்டமும் முரணாக உள்ளது. அவரச சட்டம் செல்லாது.
மேல்முறையீடு செல்ல நானும் தீபக்கும் முடிவு செய்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்வோம். அதன்பிறகே போயஸ் தோட்டம் செல்வோம்.
எனக்கும் தம்பிக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தர நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாங்கள் தான் சட்டப்பூர்வ வாரிசு என நீதிமன்றமே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்முலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 17,728 இல் இருந்து 18,545 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,645 இல் இருந்து 12,203 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 8,500 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிப்பதா? - ஆளும் கூட்டணி கட்சிகள் கண்டனம்
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதாவுக்கு ஆளும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ெகாரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு வேகமாக பரவும் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் பாரதீய ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் நாராயண் ரானே ராஜ்பவன் சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டதாகவும், எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனால் கொரோனாவுக்கு மத்தியில் மராட்டியத்தில் அரசியல் விவகாரம் சூடுபிடித்தது.இந்த பிரச்சினை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இவர்களின் இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அவர்கள் நடத்திய ஆலோசனை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாரதீய ஜனதா முயற்சிப்பதாக கூறி அந்த கட்சிக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுபற்றி சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
மராட்டியத்தில் எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தனிமைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்தை கவிழ்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும். அதற்கான சூத்திரத்தை இன்னும் எதிர்க்கட்சி கண்டுபிடிக்கவில்லை. மராட்டியத்துடன் ஒப்பிடும் போது, குஜராத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மிக மோசமாக உள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டுமானால் முதலில் குஜராத்தில் தான் அமல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “மராட்டியத்தை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர்கள் அதிகார பேராசை கொண்டவர்கள். தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு உதவுவது பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது. அவர்கள் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அரசு நிலையானது. முறையாக செயல்படுகிறது” என்றார்.தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான நவாப் மாலிக் கூறுகையில், “இந்த அரசாங்கம் வலுவானது. மகா விகாஷ் கூட்டணிக்கு போதுமான ஆதரவு உள்ளது. 3 கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் தான் இந்த அரசு கவிழ்ந்து விடும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று வதந்தியை பரப்புகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மராட்டிய அரசு கடைப்பிடித்து வருகிறது. இங்கு தான் நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு
நடிகர்: ஹரீஷ் கல்யாண், விவேக் நடிகை: தான்யா ஹோப் டைரக்ஷன்: கிருஷ்ணா மாரிமுத்து இசை : அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஒளிப்பதிவு : செல்வக்குமார் எஸ் கே
கருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் "தாராள பிரபு" விமர்சனம் பார்க்கலாம். "தாராள பிரபு" கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் கால்பந்தாட்ட வீரர். விளையாட்டு கோட்டாவில் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவருக்கும், தன்யாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதன்பிறகு விவேக்கை விட்டு விலகுகிறார். ஆனால் தன்யாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத குறை உள்ளதால் ஒரு சிறுமியை தத்தெடுக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களும், பிரச்சினைகளும் மீதி கதை.
ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். காதல் வயப்பட்டு தன்யாவை சுற்றிவரும் காட்சிகள் சுவாரஸ்யம். மனைவி பிரிவிலும், அவரும் குழந்தையும்தான் தனது உலகம் என்று உருகும்போதும் நெகிழ வைக்கிறார். கருத்தரிப்பு மைய டாக்டராக வரும் விவேக் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு நகைச்சுவை குணசித்திர நடிப்பில் அமர்க்களப்படுத்தி உள்ளார்.
ஹரிஷ் கல்யாணை சுற்றிவந்து விந்தணு தானத்துக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. தன்னால் ஹரிஷ் கல்யாண் வாழ்க்கை தடம் புரண்டது அறிந்து கலங்கும்போது அனுபவ நடிப்பால் கவர்கிறார். தன்யா அமைதியான காதலியாக வருகிறார். அனுபமா, பாட்டியாக வரும் சச்சு கதாபாத்திரங்களும் நேர்த்தி.
விந்தணு தான விழிப்புணர்வை மையமாக வைத்து கதையை கலகலப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. இறுதி வரை காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைத்ததில் அவரது திறமை பளிச்சிடுகிறது. செல்வகுமாரின் கேமரா கதையின் தன்மைக்கு ஏற்ப காட்சிகளை கச்சிதமாக படம்பிடித்து உள்ளது. பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை பலம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
https://nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks