வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 09 - Kamarajar- Part 09
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணை தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்சென்றாராம்.
அருவியில் யாரும் குளித்துக்கொண்டிருக்கவில்லையாம்.
மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக காவலர்களால்
தடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஏன்யா அருவி காலியா இருக்கு? சுற்றுலாப்
பயணிகள் யாரும் குளிக்கலையா?என்று
கேட்டிருக்கிறார்...
இல்லைங்கய்யா,, முக்கியஸ்தர்கள் வந்தால்,யாரையும் அருவியில் அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வரும்
வழக்கம் என்றனராம் அதிகாரிகள்.
உடனே காமராஜர் கோபம் கொண்டு, அது வெள்ளைக்காரன் ஆட்சி.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா, மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை. உடனே அருவியில் குளிக்க மக்களை அனுமதிங்கய்யா என்று சொல்லிவிட்டு, மக்களோடு மக்களாகக் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
அதனால்தான் அவர் இன்றைக்கும் கர்ம வீரர் காமராஜர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்.
www.nmsfriendsassociation.blogsopt.com

திறமையான தலைவர் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதநேயமிக்க மிகச்சிறந்த மாமனிதர் ஐயா காமராஜர்.
ReplyDelete