வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 10 - Kamarajar- Part 10
”காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார்”
1961-ம் ஆண்டு பிரபல வார பத்திரிகை
ஒன்றுக்கு அளித்த பேட்டி.
”காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார்”
1961-ம் ஆண்டு பிரபல வார பத்திரிகை
ஒன்றுக்கு அளித்த பேட்டி.
“தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”
“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”
“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”
“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”
“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”
“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”
“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”
“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”
“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”
“மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”
“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”
“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”
“எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”
“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா… ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)
www.nmsfriendsassociation.blogspot.com
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks