Advertisement

Breaking News

Breaking News - இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 லட்சம் ஆக அதிகரிப்பு


இந்தியாவில் ஒரே நாளில் 10,956 
பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 
லட்சம் ஆக அதிகரிப்பு






புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.




கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

தேவ கவுடா, கார்கே ராஜ்யசபாவுக்கு 
போட்டியின்றி தேர்வு





பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபாவில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள குபேந்திர ரெட்டி(ஜே.டி.எஸ்.,), ஹரிபிரசாத்(ஜே.டி.எஸ்.,), ராஜூவ் கவுடா(காங்.,), பிரபாகர்(பா.ஜ.,) ஆகியோரின் பதவி காலம் வரும் ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைகிறது.











காலியாகும் இந்த 4 இடங்களுக்கு, முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., கட்சி தலைவருமான தேவ கவுடா, காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த அசோக் கஸ்தி, ரான் கடாடி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

கொரோனா இரட்டிப்பாகும் நாள் 17.4 ஆக 
அதிகரிப்பு






புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டிப்பாகும் விகிதம் 17.4 நாளாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் 15.4 ஆக இருந்த நிலையில், தற்போது 17.4 நாள்களாக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.





நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் சதவீதம் 49.47 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 லட்சத்து 438 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது.


மஹா.,வில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை
 கடந்தது






மும்பை: மஹாராஷ்டிராவில் புதிதாக 3,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 12) மட்டும் 3,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது. அங்கு இதுவரை 1,01,141 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.





புதிதாக 127 பேர் உயிரிழந்ததையடுத்து. மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்தது. புதிதாக 1,718 பேர் குணமடைந்ததையடுத்து, மாநிலத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 47,793 ஆக உயர்ந்தது.


உக்ரைன் அதிபரின் மனைவிக்கு கொரோனா

உக்ரைன் அதிபர் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.உக்ரைன் நட்டின் அதிபராக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளார். இவரது மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.







ஜெலன்ஸ்கா பாதிக்கப்பட்டுளள நிலையில், அதிபரான கணவர் மற்றும் அவர்களது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நலமுடன் இருப்பதாகவும் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்பத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு 
கொரோனா






சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக  ஜூன் 12   இல்  1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றும்  1,479 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.



கிணற்றில் விழுந்த வளர்ப்பு பூனைக்காக தன் 
உயிரை பணயம் வைத்த முதியவர்


சென்னை: தான் ஆசையாய் வளர்த்த பூனை கிணற்றில் விழுந்து தத்தளித்த போது தன் உயிரை பணயம் வைத்து முதியவர் காப்பாற்றி உள்ளார்.

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்து வருபவர் பி.என்.டயர்ஸ் (80) இவர் லயோலா கல்லூரியில் 40 ஆண்டு காலம் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.






இவருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது கொள்ளை பிரியம். வளர்ப்பு பிராணிகள் மட்டுமில்லாமல் தன் தெருவில் உள்ள மற்ற நாய்கள், பூனைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த அன்புள்ளம் கொண்டவர். தன் வீட்டின் முதல் தளத்தில் மகனுடன் வசித்து வரும் நிலையில், தான் உணவளிக்கும் மற்ற நாய்கள் பூனைகள் தங்குவதற்கு தன் வீட்டின் தரை தளத்தில் இடமளித்துள்ள அதிசய மனிதர்.

இந்நிலையில் அவர் வளர்த்து வந்த பூனை ஒன்று நிலைதடுமாறி வீட்டின் பின்புறம் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட டயர்ஸ் யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் தானே பூனையை காப்பாற்ற முயன்றுள்ளார். அருகிலிருந்த சிறிய ஏணியை எடுத்து கொண்டு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பூனையை காப்பாற்றி விட்டார்.

ஆனால், டயர்ஸ் கிணற்றில் இருந்து வெளியே வர முயற்சித்த போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்தனர். யாராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனே தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.






சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 பேர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லேசான காயங்களுடன் டயர்ஸை மீ்ட்டனர். தன் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு டயர்ஸ் தன் நன்றியினை தெரிவித்தார். வாயில்லா ஜீவன் உயிருக்கு போராடிய நிலையில், தன் முதுமை பற்றி கூட கவலைப்படாமல் உயிரை பணையம் வைத்து தானே கிணற்றுக்குள் இறங்கி பூனையை காப்பாற்றிய அவரது துணிச்சனை தீயணைப்பு வீரர்கள் பாராட்டினர்.

                                               சுபம் 


     மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
                    https://nmsfriendsassociation.blogspot.com/







No comments

Thanks