Advertisement

Breaking News

வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 17 - Kamarajar- Part 17

காமராஜர், சுந்தர வடிவேலு இருவரின் அர்ப்பணிப்புகள்


காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வி இயக்குனராக பணியாற்றியதிரு. நெ.து. சுந்தர வடிவேலு அவர்கள் காமராஜரின் கல்வி மற்றும் பகலுணவு திட்டத்திற்கு காமராஜருடன் சேர்ந்து கடுமையாக உழைத்தார்.காமராஜர் ஆணை இட அந்த ஆணையை திட்டமாக்கி செயல் படுத்தி அமைச்சரவைக்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு திரு சுந்தர வடிவேலு அவர்களையே சாரும்.
அன்றைய கால கட்டத்தில் ,புதிதாக எத்தனை பள்ளிகளை தொடங்குவது?உயர்நிலைப் பள்ளி கல்வியை எப்படி வளர்ப்பது ?கட்டிடங்களுக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்குவது?பள்ளிகளின் வளர்ச்சிக்கு மான்யம் எவ்வளவு ?இப்படி கல்வி முன்னேற்றத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை இருவரும் ஆராய்ச்சி செய்தனர்.
தொடக்க பள்ளிகளில் பகல் வுணவு போடுவதற்கு தனியாக திட்டம் தீட்டினர்.தொடக்கத்தில் எத்தனை பேருக்கு ஏற்ப்பாடு செய்ய முடியும் .ஆண்டுக்கு ஆண்டு எத்தனை பேருக்கு அதிகப் படுத்தலாம் ?ஐந்தாண்டின் முடிவில் எத்தனை லட்சம் குழந்தைகள் நன்மை பெறுவார்? இப்படியாக நுணுக்கமாக கணக்கிட்டனர்.அதற்க்கான பொறுப்புகளை காமராஜர் அவர்கள் திரு. சுந்தர வடிவேலு அவர்களிடம் ஒப்படைத்தார். அவர் கல்விக்கான இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் பகல்வுணவு திட்டத்தை சேர்த்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.
அனால் அதிகாரிகளோ "பல திட்டங்கள் உள்ளன உணவுத் திட்டம் பெரியது புதியது வருமானம் இல்லாதது .பகலுணவுத் திட்டத்தை ஏற்றுகொள்ள சொல்லி வற்புறுத்த வேண்டாம் .நிதி இல்லை என்று நிராகரித்தனர் அதிகாரிகள் அந்த அதிகாரிகள் திரு.d .n .s .ராகவன் , நிதித் துறை செயலர்.வர்கீஸ் , கல்வி செயலர் c .s .ராமசந்திரன் அவர்கள் ஆவர்.
சுந்தர வடிவேலு அவர்களோ அந்த அதிகாரிகளிடம் வாதாடினார், "முதலமைச்சர் காமராஜரோ மாநாட்டில் இத் திட்டத்தை அறிவித்துள்ளார் .இதற்காக தனி வரி போடவும் தயங்க மாட்டேன் என்று கூறி உள்ளார் இது உண்மை ... பகல் உணவு திட்டத்தை அதிகாரிகள் தள்ளுபடி செய்யலாமா??பெரியவர்களாகிய நீங்கள் ஏழைகளின் அறிவுப் பசி மற்றும் வயிற்றுப் பசி உணர வில்லையா???
இத் திட்டத்தை நான் வற்புறுத்துகிறேன் என்று மட்டும் குறித்து அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு சென்றார்.
இத்திட்டத்தைப் பற்றி நாம் எதுவும் சொல்ல வேண்டாம் அமைச்சரவையில் விவாதத்திற்கு விட்டு விடுவோம் என்று அதிகாரிகள் முடிவு தெரிவித்து அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தனர்.
அமைச்சரவையில் ,
நடுத்தர வர்க்கத்தினர் பள்ளிக்கு வருகிறார்கள் ஏழைகள் வருவதில்லை பள்ளிகளில் உணவு கொடுத்தால் தான் அவர்கள் வருவார்கள் அதனால் பகலுணவு திட்டம் அவசியம் என்று எடுத்துரைத்தார்.பொறுமையாக கேட்ட முதலமைச்சர் பகலுணவுத் திட்டத்தை பொது மக்கள் குழுவே நடத்தலாம் ஆசிரியர்களும் சாப்பிடலாம் ... பகலுணவுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்றார் காமராஜர் .ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கையில் இடம் பெற்றது .சட்ட மன்றத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது .
"அத்தனை பேரும் படிக்கணும் என்றேன் .வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான் ?அவனுந்தானே நம் இந்தியாவிற்கு சொந்தக்காரன் .ஏழை குழந்தைகளுக்கு பள்ளியிலே சோறு போட்டு படிக்க வைக்கணும்னேன்!இதை தள்ளி போட முடியுமான்னேன் ?இதுக்காக தனியாக வரி போட தயங்கவும் மாட்டேன்.எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கணும் அவர்களுக்கும் தான் இந்த தேசம் "-----__பெருந்தலைவர் காமராஜர் .
காமராஜரின் கல்வி சேவையில் நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் காமராஜர் அவர்கள் சுந்தர வடிவேலு அவர்களை மெட்ராஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தராக நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Thanks