Advertisement

Breaking News

Breaking News - ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

19.06.2020



   
      சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தார். இதனைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் எனவும் தேடி வருகின்றனர்.





தமிழில் ஊர் பெயர்கள் மாற்றம்; அரசாணை வாபஸ்: அமைச்சர்


   தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.





கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு,தமிழை போன்று ஆங்கிலத்திலும் ezhumboor என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து 1,018 ஊர்களின் பெயர்களை மாற்ற, அரசாணை வெளியிடப்பட்டது. உதாரணமாக, 'தொண்டயார்பெட்' என்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் எழுதப்படுவது, தண்டையார்பேட்டை என, மாற்றப்பட்டது. அதேபோல், புரசைவாக்கம், வ.உ.சி. நகர், அயன்புரம், அமைந்தகரை, உள்ளிட்டவையும் மாற்றப்பட்டன. மேலும் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது thiruvallikkenni என்றே உச்சரிக்க வேண்டும். எனவும், tuticorin என்பதை thoothukudi என அழைக்க வேண்டும். இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின் புதிய அரசாணை வெளியிடப்படும் என பதிவிட்டு உள்ளார்.







ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு

  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஏழை மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கடந்த மாதம் 31 வரை விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருவதால் அப்பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


  இது தவிர முதியோர், நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் நலன் கருதி சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் சமையல் செய்து வீடு தேடி சென்று உணவு வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை இம்மாதம் 19 முதல் 30ம் தேதி வரை இருக்கும் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டரில் 7.4 ஆக பதிவு

   நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் இன்று (ஜூன் 18) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது.





  கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ தொலைவிலும், 33 கி.மீ ஆழத்திலும் பதிவான நிலநடுக்கம் , ஹாக்ஸ் பே உட்பட கிழக்கு கடற்கரையின் பெரும்பகுதி முழுவதும் உணரப்பட்டது. கிஸ்போர்ன், மடவாய், ஓபோடிகி, ரூட்டோரியா, தே அரோரா, தே காஹா, டோகோமாரு விரிகுடா, டோலாகா விரிகுடா, வகாரி அல்லது வெள்ளை தீவு, வகாடனே மற்றும் விட்டியாங்காவில் நிலநடுக்கம் பதிவானது.

உள்ளூர் நேரப்படி, காலை 12.49 மணியளவில் பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி ஏற்படுவதற்கான ஆபத்து இல்லை. எனினும் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது.






   நீண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்தால் மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து உயர்வான இடங்களுக்கு செல்லுமாறு ரேடியோ நியூசிலாந்து கேட்டுகொண்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை
.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 52 ஆயிரத்தை தாண்டியது; இதுவரை 625 பேர் பலி





   
     தமிழகத்தில் நேற்று  (ஜூன் 18) ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆகவும், பலி எண்ணிக்கை 625 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 52,334 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 81 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,736 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,63,506 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன
.





நேற்று  சென்னையில் 40 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், திருவண்ணாமலை, கடலூர், விக்கிரவாண்டி, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 36 பேர் அரசு மருத்துவமனையிலும், 13 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பு பணி: மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்







   தமிழகத்தில் 33 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மாவட்டம் - சிறப்பு அதிகாரி பெயர்


கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்

கடலூர் - ககன்தீப் சிங் பேடி

கோவை- ஹர்மேந்தர் சிங்

ராமநாதபுரம்- சந்திரமோகன்

சேலம் -நசிமுதின்

அரியலூர் - சரவணவேல்ராஜ்

தஞ்சை- பிரதீப் யாதவ்

திருவண்ணாமலை- தீரஜ்குமார்

விழுப்புரம்- முருகானந்தம்

தென்காசி- அனுஜார்ஜ்

நீலகிரி - சுப்பிரியா சாகு

நாமக்கல் -தயானந்த் கட்டாரியா

தேனி - கார்த்திக்

மதுரை - தர்மேந்திரபிரதாப் யாதவ்

ராணிப்பேட்டை -லட்சுமி பிரியா

தர்மபுரி - சந்தோஷ்பாபு

திருப்பூர்- கோபால்

வேலூர் - ராஜேஷ் லக்கானி

கன்னியாகுமரி- ஜோதி நிர்மலா சாமி



கரூர் - விஜயராஜ்குமார்

திருச்சி -ரீட்டா ஹரிஷ் தாகர்

விருதுநகர் -மதுமதி

தூத்துக்குடி - குமார் ஜெயந்த்

நாகப்பட்டினம் - முனியநாதன்

சிவகங்கை - மகேசன் காசிராஜன்

திருவாரூர் - மணிவாசன்

நெல்லை - அபூர்வா

பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்

திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா

ஈரோடு - ககர்லா உஷா

புதுக்கோட்டை: ஷம்பு கலோலிகர்


கள்ளக்குறிச்சி- நாகராஜன்

திருப்பத்தூர்-ஜவஹர் 

    ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு மற்றும்கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.






அதேபோல்,கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு - உதயசந்திரன்

திருவள்ளூர் - பாஸ்கரன்

காஞ்சிபுரம் - சுப்ரமணியன்


  விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாக 
கொண்டாட வாய்ப்பு இல்லை ; உத்தவ் தாக்கரே

    கொரோனா அச்சுறுத்தலால் மஹாராஷ்டிராவில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தெரிவித்துள்ளார்.





கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளால் நாட்டில் பல்வேறு வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் படிப்படியாக திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்ப்டடு வருகின்றனர். மாநில அரசின் பரிந்துரைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தொடர்ந்து, ஆக.,மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் சதுர்த்தி, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயினும் மஹாராஷ்டிராவில் 10 நாட்கள் வரை சிறப்பாக கொண்டாடப்படும்.





மஹா.,வில் தாராவி, மும்பை போன்ற நகரங்களில் கணபதி பாபா என்று பல்வேறு பெயர்களில் விநாயகர் வழிபாடு ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படும். பல்வேறு வண்ணங்களுடன், விதவிதமான கோலங்களுடன் விநாயகர் அமர்ந்த சிலைகளுக்கு வழிபாடு, ஊர்வலம் என நாடே விழாக்கோலமாக இருக்கும். பின்னர் கடல், ஆறுகளில் கரைப்பார்கள். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகளால் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் முக்கிய விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே விழா நடத்தும் குழுக்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசினார்.






அவர் கூறுகையில், மஹா.,வில் கொரோனா பாதிப்புகளால், விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும். அச்சுறுத்தல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆகவே, கடந்த ஆண்டு போன்று ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை. விநாயகர் ஊர்வலத்தில் அதிக கூட்டத்திற்கு அனுமதி கிடையாது. சமூக பொறுப்பை மனதில் வைத்துக் கொண்டு விழாவை எளிமையாக கொண்டாடி உலக மக்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு கூறினார்.


   மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
                    https://nmsfriendsassociation.blogspot.com/






No comments

Thanks