Advertisement

Breaking News

வரலாறு - குழந்தைகளுக்கு உதவிய காமராஜர்- காமராஜர் பகுதி 15 - Kamarajar- Part 15

குழந்தைகளுக்கு உதவிய காமராஜர்



காமராஜர் ஒருநாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே வந்தனர். பரட்டைத் தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் நிலைமையைப் பறைசாற்றின.
பணியாளர் ஒருவர் அவர்களை அடித்து விட்டினார். கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள். மீண்டும் வீட்டுக்குள்ளே வர முயன்றனர். தம்மை பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கண்களில் அந்த குழந்தைகள் பட்டுவிட்டனர்.

அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க என்ன யாரைப் பார்க்க வந்தீங்க என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட்டார். சிறுமி தயங்கி பேசினாள்.

உங்களைத் தான் பார்க்க வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை. உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம் என்றாள்.

அவர்களை அன்போடு தட்டிக்கொடுத்தபடி அம்மா தான் அனுப்பிச்சாங்களா? என்று கேட்டார். இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடா விக்கிறாங்க. 

அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க என்று சிறுமி சொன்னதும் அதற்குமேல் கேட்டுக்கொண்டிருக்க தலைவரால் முடியவில்லை. அன்பு உள்ளம் உருகியது.

மாடிக்குச் சென்ற அவர் கையில் ஒரு கவருடன் வந்தார். 

சிறுமியிடம் கொடுத்து இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க. அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். 

மறுநாள் மீண்டும் அந்த குழந்தைகள் வந்தனர். வைரவன் குழந்தைகளை அழைத்து வந்தார். வாங்க... வாங்க.. என்று வாய் நிறைய வரவேற்றார் காமராஜர்.
பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா. அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை தலைவரிடம் சிறுமி நீட்டினாள். காமராஜர் கண் கலங்கி விட்டார்.
ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா? குழந்தைகள் அவரை வணங்கினார்கள். அவர் குழந்தைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்..


www.nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks