Advertisement

Breaking News

Breaking News - லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம்- இந்திய ராணுவம்

லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம்- இந்திய ராணுவம்..



டெல்லி: 
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்தினர் மீது சீனா கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் வீரமரணம் அடைந்தார்.
இந்த நிலையில் தற்போது சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை முதலே சில ஊடகங்கள் 11 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவித்து வந்தன.
ஆனால் ராணுவம், வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்கிற விவரம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதலில் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில் டெல்லி ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலர், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இதன் பின்னர் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சீனாவின் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 17 ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் மொத்தம் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் சீன ராணுவம் சுட்டு 3 இந்திய வீரர்கள் வீரமரணம்; சீன வீரர்கள் 5 பேர் பலி





    லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 5 பேர் பலியானதாக தெரிகிறது.

லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.





இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது. இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்கள் தரப்பு சேத விபரத்தைத சீனா வெளியிடவில்லை.





இதற்கிடையில் தங்கள் எல்லைக்குள் இந்தியா தான் ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியது. தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

சீன தரப்பில் 4 பேர் பலி?

இந்த மோதலில் சீன தரப்பில் 3 முதல் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்திய ராணுவம் விளக்கம்

இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதனிடையே, மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளி ல் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழர்

சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.


லடாக் பிரச்னை : பிரதமர் மோடி ராஜ்நாத்சிங் ஆலோசனை

 லடாக் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினர்.





லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது. இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ தளபதி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடியுடனும் ஆலோசனை நடத்தினார்.





வெளியுறவுத்துறை விளக்கம்

தனது எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இந்தியாவின் நடவடிக்கைகள் உள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சீன தரப்பினர் தங்களது நிலையை மாற்ற முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. உயர் மட்ட அளவில் மேற்கொண்ட உடன்படிக்கையை சீனா பின்பற்றி இருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. எல்லைப்பகுதியில் பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண்பதற்கு இந்தியா உறுதியாக நம்புகிறது. இந்தியா சீனா மோதலில் இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறையான்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியாவை போன்றே சீனாவும் செயல்படும் என எதிர்பார்க்கிறோம். என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை

   மத்திய பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : தென்மேற்கு பருவமழை மேற்கு மத்திய பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளிலும், கிழக்கு மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளிலும் முன்னேறியுள்ளது. அதன்படி, பருவமழையின் வரம்பு (வடக்கில்) காண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரைசன், கஜுராஹோ, ஃபதேபூர் மற்றும் பஹ்ரைச் வழியாக செல்கிறது. மேலும் உத்தரப்பிரேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் சுற்றுப்புறங்களில் ஒரு சூறாவளி சுழற்சி ஏற்படலாம். சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து 3.6 கி.மீ வரை பரவியுள்ளது. வடமேற்கு ராஜஸ்தானில் இருந்து கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மீது தெற்கு ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் சூறாவளி சுழற்சி வரை ஒரு தொட்டி பகுதியாக செல்கிறது. இதன் நிலை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கி.மீ வரை நீண்டுள்ளது.





மகாராஷ்டிரா மாநிலம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பின்னர், தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு மந்தமடைய வாய்ப்புள்ளது, ஏனெனில் வங்காள விரிகுடாவின் குறைந்த அழுத்தப் பகுதி பலவீனமடைந்து உள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத், வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில்தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மழையுடன் கொங்கன் மற்றும் கோவாவில் இன்று பலத்த மழை பெய்யும்.
சில நாட்களில் வட இந்திய மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்க உள்ளது. மேற்கு ராஜஸ்தானில் வெப்பம் அதிகரித்து நேற்று, 46.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பீகானீர் வெப்பமான இடமாகவும் மாறியுள்ளது. டில்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 40டிகிரிக்கு குறைவாக இருக்கும். நேற்று 41.4 டிகிரி செல்சியசாக இருந்தது






ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது மற்றும் ஜார்கண்ட், மேற்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதற்கிடையில், ஜூன் 19 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்தழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது.


இந்தியாவில் 3.4 லட்சம் பேருக்கு கொரோனா: பலி 10 ஆயிரத்தை நெருங்குகிறது





   இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக அதிகரித்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 9,900 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 013 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 215 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



சிறுவனின் கழுத்தில் குத்திய 2 அடி நீள கொக்கி வெற்றிகரமாக அகற்றம்

   தொட்டில் கொக்கி கழுத்தில் ஏறியதில் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்தார்.





திருப்பூர் மாவட்டம், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த, சிவராஜ் மகன் ரிதிகேஷ்வர், 7. வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கீழே கிடந்த தொட்டில் கட்டும் கொக்கி சிறுவனின் கழுத்தை பதம் பார்த்தது. வலது பக்க கழுத்தில் குத்திய கொக்கி, காது அருகே வெளியே வந்தது.





கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, 2 அடி நீள கொக்கியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தற்போது, உடல்நலம் தேறியுள்ள சிறுவனை டிஸ்சார்ஜ் செய்யவுள்ளதாக மருத்துவமனை டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.


துப்பாக்கியா? கைகலப்பா?: இரு நாட்டு வீரர்கள் பலியானது எப்படி?





   இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த மோதலில் சீன வீரர்கள் சுட்டதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தற்போது, துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் உயிரிழக்கவில்லை.
இரு தரப்புக்கு இடையே நடந்த கை கலப்பில் தான் அவர்கள் உயிரிழந்தனர். இந்த கைகலப்பின் போது கற்கள், இரும்பு பொருட்களை கொண்டு சீன வீரர்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில், கடந்த சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்தை குறைக்க இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய பபகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியது. அவர்களை இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பினர்.

சீன வீரர்கள் திருப்பி செல்லும் போது வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் சீன வீரர்கள் சுட்டதில் தான் இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சீன தரப்பிலும் 5 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.






தற்போது, சீன வீரர்கள் திருப்பிசெல்லும் போது கைகலப்பில் ஈடுபட்டு வன்முறைறையை ஏற்படுத்தினர். அப்போது, கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தரப்பில் 3 பேர் வீரமரணம் அடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


           

     மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

No comments

Thanks