Advertisement

Breaking News

Breaking News - 10ம் வகுப்பு தேர்வு ரத்து, அனைவரும் ஆல்பாஸ்!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு


10ம் வகுப்பு தேர்வு ரத்து, 
அனைவரும் ஆல்பாஸ்!! 
முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

10.06.2020





தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் , பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரித்து வந்தனர்

 இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.





 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு 
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு அரசுத் துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில், பள்ளித் தேர்வுகளும் அடங்கும். தற்போது ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் சில பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நுழைவுச் சீட்டும் வெளியிடப்பட்டது.

 பெற்றோர்கள் எதிர்ப்பு 

இதனிடையே, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், மேலும் சில மாவட்டங்களில் கொரோனா இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் குழந்தைகளைத் தேர்வுக்காக வெளியில் அனுப்ப முடியாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும்
கடும் அதிருப்தி வெளிப்படுத்தி வந்தனர்.






நீதிமன்றத்தில் வழக்கு
 மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான 10ம் வகுப்பு தேர்வு குறித்து உயர் நீதிமன்றத்திலும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.




 முதலமைச்சர் ஆலோசனை 
இதனிடையே, 10ம் வகுப்பு தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், 10ம் வகுப்பு தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இந்த ஆலோசனை இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



முதலமைச்சர் அறிவிப்பு
 அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்) பகல் 12.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வலுத்து வருகிறது. நீதிமன்றமும், தேர்வை தள்ளி வைக்க அரசு பரிசீலிக்கக் கேட்டுக் கொண்டது. இதை அரசு பரிசீலித்தது



 தேர்வு முழுமையாக ரத்து 

 நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பு இல்லை என இது சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பெற்றோர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் மற்றும் நோய் தொற்று கருத்தில் கொண்டும், மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்க, வருகிற 15ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், 11ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

 அனைவரும் ஆல் பாஸ் 
இந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்படும்.



 தேர்வு தேதி அறிவிக்கப்படும்
 12ம் வகுப்பைப் பொறுத்தவரையில் ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.


அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவன 
எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ







அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 500 கி.மீ., தொலைவில் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாக்ஜானில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரி வாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் கிணறு உள்ளது. இதில் கடந்த இரு வாரங்களாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 9) பிற்பகல் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.

இதையடுத்து மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தீயினை கட்டுப்படுத்த விமானப்படை மற்றும் ராணுவத்தின் உதவியை அசாம் அரசு நாடியுள்ளது. தீயை கட்டுப்படுத்த சிறப்பு நிபுணர்கள் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.






முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் 1.5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் சுமார் 6000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.






முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் 1.5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் சுமார் 6000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி., அரசுக்கு பாக்., பத்திரிகை ஆசிரியர்
 பாராட்டு





 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உ.பி., அரசு சிறப்பாக செயல்படுவதாக, பாக்.,ஐ சேர்ந்த 'டவுன்' பத்திரிகையின் ஆசிரியர் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டவுன் பத்திரிக்கையின் ஆசிரியர் பாஹத் ஹுசைன் டுவிட்டரில், பாக்., மற்றும் உ.பி.,யின் கொரோனா கிராபின் படத்தை பகிர்ந்து பதிவிட்டதாவது: இந்த கிராப்பில், பாகிஸ்தான் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்கள். ஒப்பிடுகையில், பாக்., உ.பி., ஏறக்குறைய ஒரே மக்கள் தொகை, கல்வியறிவை கொண்டவை. ஊரடங்கு நடவடிக்கையை உ.பி., அரசு கடுமையாக பின்பற்றியுள்ளது. நாம் அதை முறையாக பின்பற்றவில்லை.





பாக்.,ஐ விட உ.பி.,யில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், சிறந்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவால் பலியானவர்கள் அதிகம். எனவே உ.பி., கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு சரியாக செய்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

திருப்பதியில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை 
தரிசனத்திற்கு அனுப்ப ஏற்பாடு

சித்தூர் : திருப்பதியில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.





கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, சோதனை முறையில் 2 நாட்கள் தேவஸ்தான பணியாளர்களும், நாளை உள்ளூர் பக்தர்களும் அனுமதிக்கப்படுவர்.





தொடர்ந்து, ஜூன் 11 முதல் ஆன்லைன் மூலமாக தரிசனத்துக்கு முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான கவுண்டர்கள் மூலமாக முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் என மொத்தமாக 6 ஆயிரம் பேர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில், சுவாமி தரிசனத்திற்கு 1 மணி நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.





ஆனால் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோதனை முறையில் அனுப்பப்பட்டதன் மூலம் நேற்று 2 மணி நேரத்தில் 1200 பக்தர்கள் வரை சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது


அன்பழகனுக்கு மருந்து அனுப்பி தமிழிசை உதவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும் தெலுங்கானா கவர்னருமான தமிழசை சவுந்தரராஜன் மருந்து அனுப்பி உதவி உள்ளார்.






சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன். இவருக்கு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே நீரிழிவு மற்றும் பல பிரச்னைகளால் அன்பழகன் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் அவர் உடல் நிலை கவலைக்கிடமானது.

அதனால் கடந்த 3ம் தேதி முதல் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆக்சிஜன் செயற்கை சுவாச முறையிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. அன்பழகனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதன் பிறகு அவரின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






இந்நிலையில் தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரும் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் ஐதராபாத்திலிருந்து கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி அனுப்பி இருக்கிறார். ரெம்டெசிவர் மருந்தினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் போது குணமாகும் வேகம் 31 சதவீதம் அதிகமாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ரெம்டெசிவர் மருந்தினையே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை





 டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

டில்லியில், கொரோனா வைரஸ் தாக்குதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம், காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்ட நிலையில், தனிமையில் இருந்து வருகிறார். ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்புள்ள அவருக்கு, இன்று காலை, கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியாயின. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் சாதாரண காய்ச்சல் தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் கொடுத்து கொரோனா நோயாளி மீட்பு: மதுரை டாக்டர்கள் அசத்தல்





 மதுரையில் அதிதீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன், ரூ.3 லட்சம் பிரத்தியேக மருந்து கொடுத்து 30 நாட்கள் போராடி டாக்டர் குழுவினர் மீட்டு அசத்தியுள்ளனர்.

நாட்டில் அறிகுறியில்லாத, மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் 10 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். தீவிர பாதிப்புள்ளோர் 15 நாட்கள் வரை கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த 54 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மே 9ல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே நுரையீரல், சர்க்கரை நோய்கள், குண்டுத் தன்மை போன்ற பாதிப்புகள் இருந்ததால், தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ.,வில் சிகிச்சை துவங்கியது.


மிகவும் சவாலான நோயாளி

அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருந்தது. மூச்சுத்திணறல் பாதிப்பு கடுமையானது. இதுவரை டாக்டர்கள் சந்தித்த வேறு எந்த நோயாளிகளும் இவரளவு பாதிப்பிற்குள்ளாகவில்லை. செயற்கையாக அதிவேக ஆக்ஸிஜன் வழங்க டாக்டர்கள் முடிவு செய்தனர். நிமிடத்திற்கு 60 முதல் 70 லிட்டர் வரை வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விலையுயர்ந்த பிரத்தியேக மருந்தை டாக்டர்கள் பயன்படுத்தினர். ஊசி மூலம் அம்மருந்தை நோயாளியின் உடலில் சில நாட்கள் செலுத்தினர்.

உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செயற்கை ஆக்ஸிஜன் இன்றி நன்றாக சுவாசிக்க துவங்கினார். எனினும் பூரண குணமடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. மதுரை கொரோனா வார்டில் அதிக நாட்கள் சிகிச்சையில் இருந்தவர் இவர் தான். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சையளித்த நுரையீரல் துறை தலைவர் பிரபாகரன், பொது மருத்துவத் துறை தலைவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவை டீன் சங்குமணி பாராட்டினார்.





22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன்


டீன் சங்குமணி மேலும் கூறுகையில், 'நாங்கள் சந்தித்த கொரோனா நோயாளிகளிலேயே இவர் மிகவும் சவாலாக இருந்தார். 30 நாட்கள் போராடி குணமாக்கியுள்ளோம். இதை டாக்டர்கள் குழுவின் சாதனை என்றே கூறுவேன். மொத்தம் 22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கியுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்திக்காக அவரது உடலில் ஏற்றப்பட்ட மருந்தின் பெயர் 'டொசுலிசுமேப்'; விலை ரூ.3 லட்சம். தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது' என்றார்.



10 மடங்கு கூடுதல்


மருத்துவமனை ஆக்ஸிஜன் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், 'மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜனை திரவநிலையில் வாங்கி, வாயு நிலைக்கு மாற்றி நோயாளிகளுக்கு சப்ளை செய்கிறோம். பொதுவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நிமிடத்திற்கு 5 முதல் 6 லிட்டர் (வாயு நிலையில்) வரை ஆக்ஸிஜன் வழங்குவோம். ஆனால் இவருக்கு பாதிப்பு தீவிரமாக இருந்ததால் 10 மடங்கு கூடுதலாக வழங்கினோம்' என்றனர்


லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவம் 
வாபஸ்





 இந்திய சீனா இடையே ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய - சீன எல்லையில் சமீப காலமாக பதற்றம் நிலவியது. நம் அண்டை நாடான சீனாவின் ராணுவ வீரர்கள், நம் எல்லைக்கு அருகில் அத்துமீறி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். நம் வீரர்கள் பதிலடி கொடுத்ததை அடுத்து, எல்லையில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். எல்லையில் அசாதாரண சூழல் நிலவியதை அடுத்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, நேற்று முன்தினம் நீண்ட நேரம் பேச்சு நடந்தது.







இந்நிலையில், லடாக் எல்லையில் இருந்து இரு நாட்டு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், சீன வீரர்கள், 2.5 கி.மீ., தூரம் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

              https://nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks