Advertisement

Breaking News

வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 08 - Kamarajar- Part 08


ஏழைக்கு அரசு ஊழியர் வேலை கிடைக்க உதவிய #காமராஜர்

காமராஜர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த நேரம். தனது அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
திரளான மக்கள் கூட்டத்திலும் சுலபமாக நெருங்க முடிந்த ஏழை மனிதர் ஒருவர், ``அய்யா எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுங்க...'' என்று கையேந்துகிறார்.
அதிகாரிகள் அவசர கதியில் அவரை விசாரிக்கும் போது அவர் படிக்காதவர், பரம ஏழை என்று புலனாகிறது.
அந்த ஏழை மனிதருக்கு ஏதாவது அரசாங்க வேலை போட்டுத்தர முதல்-அமைச்சர் காமராஜர் விரும்பினார்.



அதுபற்றி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த போது, ``படிக்காதவர், அதோடு அரசாங்க வேலை பார்க்கும் வயதுக்கான வரம்பையும் தாண்டியவர்'' என்று விளங்கிய அதிகாரிகள், ``சட்டரீதியாக அரசு வேலை கிடைக்க (கொடுக்க) வாய்ப்பில்லை'' என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.
உடனே சட்டென முகம் வாடிப்போனது முதல்-அமைச்சருக்கு. ஆனாலும் தனது வேதனையை அதிகாரிகளிடம் கேள்வியாக்கினார். ``இல்லாத ஒரு ஏழைக்கு ஒரு வேலை கொடுத்து உதவ மாநிலத்தின் முதல்-அமைச்சருக்கே கூட அதிகாரம் இல்லாமல் ஒரு சட்டமா?''
முதல்-அமைச்சரின் இந்த வருத்தமான கேள்விக்கு உடனே தலைமை நிர்வாகி இப்படிப் பதில் சொன்னார். ``ஆனாலும் பொதுநலன் கருதி முதல்-அமைச்சர் தனது சுயசிந்தை மூலம் அச்சட்டத்தை மீற அச்சட்டமே இடம் கொடுக்கிறது''.
முதல்-அமைச்சர் முகத்தில் வருத்தம் மறைந்தது. ``ஒரு ஏழைக்கு உதவறதுன்னா என்ன? பொது நலன்னா என்ன? ரெண்டும் ஒண்ணுதானே.
இவருக்கு வாட்ச்மேன் வேலை போட்டு ஆர்டரை அடிச்சிட்டு வாங்க. நான் கையெழுத்துப் போடறேன்'' என்றார் மகிழ்ச்சி முகமாய்.
அதன்படியே அந்த ஏழைக்கு அரசு ஊழியர் வேலை கிடைத்தது.




No comments

Thanks