Breaking News - ரஷ்யாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி; 18 பேருக்கு பரிசோதனை
ரஷ்யாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி; 18 பேருக்கு பரிசோதனை
ரஷ்யாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள்.
ரஷ்யாவில் 5.60 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது, 7,600 பேரின் உயிரை பறித்தும் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 18 பேருக்கு செலுத்தி பரிசோதித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு ராடு; கொடூரமாக தாக்கிய சீன வீரர்கள்
லடாக் தாக்குதலில், சீன ராணுவத்தினர், ஆணிகள் அடிக்கப்பட்ட இரும்பு ராடுகளை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை பாதுகாப்புத்துறை வல்லுநரான அஜய் சுக்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீன வீரர்கள் தாக்கிய ஆணியடிக்கப்பட்ட இரும்பு ராடுகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை பிபிசி.,க்கு இந்திய ராணுவ உயரதிகாரி ஒருவர் அனுப்பி உள்ளார். மேலும், பாதுகாப்புத்துறை வல்லுநரான அஜய் சுக்லாவும் இதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சீனாவுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இத்தகைய காட்டுமிராண்டித்தனம் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.
அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு?
தமிழக அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், முதல்வர் அலுவலகத்தில், ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அரசியல் பிரமுகர்களும், அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், 'அவர் நலமுடன் உள்ளார்; சளி பிரச்னை தான்; கொரோனா பாதிப்பு இல்லை' என, அமைச்சர் தரப்பினர் தெரிவித்தனர்.
முதல்வர் அலுவலகம்
தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிச்செயலர் தாமோதரன், கொேரானாவால் இறந்தது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் பணிக்கு வந்த, முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஐந்து டிரைவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானதாக, தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
நேற்று பணிக்கு வந்த, 45 ஊழியர்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று வெளியாகும். மேலும், அமைச்சர்களின் உதவியாளர், பாதுகாவலர், டிரைவர் என, பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, அமைச்சர்களிடம், தலைமை செயலக ஊழியர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'அய்யப்பனும் கோசியும்' பட இயக்குநர் சாச்சி காலமானார்
'அய்யப்பனும் கோசியும்' பட இயக்குநர் சாச்சி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மலையாள திரையுலகம் கவலையில் உள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோசியும் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை இயக்கியவர் கே.ஆர்.சச்சிதானந்தன். திரைத்துரையில் சாச்சி என அழைக்கப்படுகிறார்.
அய்யப்பனும் கோசியும் படத்திற்கு முன்பே பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனனை வைத்து அனார்கலி எனும் 'ஹிட்' படத்தை சாச்சி இயக்கியுள்ளார். திலீப்பின் ராம்லீலா, மோகன்லாலின் ரன் பேபி ரன் ஆகிய படங்களுக்கு அவர் திரைக்கதை அமைத்துள்ளார். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள்.
இந்நிலையில் இயக்குனர் சாச்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது அறுவை சிகிச்சை முறையாக நடந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சாச்சியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. சாச்சியின் மூளை செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 18) இரவு மருத்துவமனையில் காலமானார். அவரது இழப்பால் மலையாள திரையுலகம் கவலையில் உள்ளது.
ஆன்மிகம்
சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* விநாயகர் தவிர மற்ற தெய்வங்களுக்கு தோப்புக் கரணம் இடக் கூடாது.
* நீண்ட காலமாக பூஜித்த சாளகிராமம், பாண லிங்கங்களை பூஜிக்க முடியவில்லை என பிறருக்கு கொடுக்கக் கூடாது.
* கிழக்கு, வடக்கு தவிர மற்ற திசை நோக்கி விளக்கு பூஜை, ேஹாமம், தர்ப்பணம் செய்யக் கூடாது.
* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதோ, முடி வெட்டுவதோ கூடாது.
* பக்தி இல்லாத அறிவு அர்த்தமற்றது. பக்தி இல்லாமல் மேற்கொள்ளும் விரதம் பலனளிக்காது.
* குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளிடம் கோபத்தைக் காட்டுவது மிக தவறான செயல்.
* சாப்பிடும் திசையைப் பொறுத்து பலன் மாறுபடும்.
கிழக்கு - நீண்ட ஆயுள்
மேற்கு - செல்வம்
தெற்கு - புகழ்
வடக்கு - நோய்.
* பக்தி, ஒழுக்கமுடன் வாழக் கற்றுத் தருவதே குழந்தைகளுக்குரிய ஆரம்பக்கல்வியாக இருக்க வேண்டும்.
* சனீஸ்வரரின் படம், விக்ரகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது கூடாது.
* வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமையில் பாலை வீணாக்கினால் தரித்திரம் வரும்.
* கோயிலில் கொடி மரம் அருகிலுள்ள பலிபீடத்தை தொடுவதோ, மிதிப்பதோ கூடாது.
சுபம்
No comments
Thanks