Breaking News - திருப்பதியில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி
திருப்பதியில் நாளை முதல்
அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி
11.06.2020
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (ஜூன் 11) முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் தளர்த்தப்பட் விதிகளின் காரணமாக வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து ஏழுமலையான் கோவிலில் 8 மற்றும் 9, 10 ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சோதனை முறையில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரூ 300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் 3000 விற்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை நேரிடையாக பெற மிக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் வந்தனர்
மேலும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் விடுதிகளில் உள்ள கவுண்டர்களில் 3000 இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன்களை வாங்க மக்கள் இன்று அலைமோதினர்.
இந்தியாவில் 2.76 லட்சம் பேருக்கு கொரோனா:
ஒரே நாளில் 9,985 பேருக்கு தொற்று
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
தமிழகம் - 34,914 - 307
டில்லி - 31,309 - 905
குஜராத் - 21,014 - 1,313
உத்தர பிரதேசம் - 11,335 - 301
ராஜஸ்தான் - 11,245 - 255
மத்திய பிரதேசம் - 9,849 - 420
மேற்கு வங்கம் - 8,985 - 415
கர்நாடகா- 5,921 - 66
பீஹார் - 5,459 - 32
ஹரியானா - 5,209 - 45
ஆந்திரா - 5,070 - 77
காஷ்மீர் - 4,346 - 48
தெலுங்கானா - 3,920 - 148
ஒடிசா- 3,140 - 9
அசாம் - 2,937 - 4
பஞ்சாப் - 2,719 - 55
கேரளா - 2,096 - 16
உத்தரகாண்ட் - 1,537 - 13
ஜார்க்கண்ட் - 1,411 - 8
சத்தீஸ்கர் - 1,240 - 6
திரிபுரா - 864 - 1
ஹிமாச்சல பிரதேசம் - 445 - 5
கோவா - 359 - 0
சண்டிகர் - 323 - 5
மணிப்பூர் - 304 - 0
புதுச்சேரி - 127 - 0
நாகலாந்து - 127 - 0
லடாக் - 108 - 1
மிசோரம் - 88 - 0
அருணாச்சல பிரதேசம் - 57 - 0
மேகாலயா-43-1
அந்தமான் - 33 - 0
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 22 - 0
சிக்கிம் - 13 - 0
கோவா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமல்ல
பனாஜி : கோவாவிற்கு வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் அல்ல என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. நோய் பரவாமல் இருக்க நாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பிரமோத் சவந்த் கூறுகையில், கோவா மாநிலத்தில்ரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு விதிமுறையொட்டி, தற்போது பல்வேறு நாடுகளிலும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்ட பிறகும், இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தை துவங்க எந்த அரசும் முன்வரவில்லை. மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நாளை முதல், கோவாவில் நுழையும் பயணிகள் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவ்வாறு பயணிகளுக்கு சோதனையின் போது நோய் தொற்று இல்லையெனில் வீட்டிற்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலே மக்கள் கோவாவில் நுழைய அனுமதிக்கப்படுவர். அதற்கு எவ்வித தடையும் இல்லை. எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாதவர்களுக்கு இது பொருந்தும். நாளையில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆனால், பரிசோதனையை புறக்கணிக்கும் நபர்கள் கட்டாயம் குடும்ப உறுப்பினர்களுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
ஊரடங்கால் விவாகரத்து அதிகரிப்பு:
மும்பை ‛டாப்'
மும்பை: ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்தியாவில் விவாகரத்து மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதலிடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்காலும், தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய பல நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், வீட்டிலேயே குடும்பத்தினருடன் இருந்து பெரும்பாலான ஐ.டி., பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலக்கட்டத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் விவாகரத்தும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே அதிக பாதிப்பை கொண்ட நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அதேபோல், விவாகரத்து மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளிலும் மும்பையே முன்னிலையில் உள்ளது. அங்கு இந்த வழக்குகள் பதிவாகும் விகிதமானது 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது சம்பந்தமான வழக்குகள் மட்டும் இதுவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,280 வழக்குகளாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது 3,480 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பெங்களூரில் சராசரியாக 890 ஆக இருந்த வழக்குகள் 1,645 ஆகவும், டில்லியில் 1,080 லிருந்து 2,530 ஆகவும், கோல்கட்டாவில் 350 லிருந்து 890 ஆகவும் உயர்ந்துள்ளது.
தந்தைக்கு வீடியோ காலில் இறுதிச்சடங்கு
நடத்திய மகன்கள்
கொரோனா காரணமாக சார்ஜாவில் சிக்கி கொண்ட மகன்கள், ஊட்டி அருகே உடல்நலக்குறைவால் மரணமடைந்த தந்தைக்கு வீடியோ காலில் இறுதிச்சடங்கு நடத்தினர்.
ஊட்டி அருகே ஆலட்டனை கிராமத்தை சேர்ந்தவர் ஜோகன்( 62). குன்னூரில் வக்கீலாக இருந்தார். மனைவி ருக்மணியுடன் ஆலட்டனை கிராமத்தில் வசித்து வந்தார். இன்று காலை ரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது இரண்டு மகன்கள் பிரபு, பிரனேஷ் ஆகியோர் துபாயில் சார்ஜாவில் பணிபுரிகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் துபாயிலிருந்து சர்வதேச விமான மூலம் இந்தியா வர, 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் துபாயிலிருந்து 200 பேர் விமானம் மூலம் கொச்சின் அழைத்து வரப்படுகின்றனர்.
அதன்படி, பிரபு, பிரனேஷ் இந்தியா வர டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் வரிசைப்படி இவர்கள் வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. இதனால், அவர்களால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனால், தந்தையின் இறுதி சடங்கை மகன்கள், துபாயிலிருந்து வீடியோ காலில் நடத்தி முடித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
No comments
Thanks