Advertisement

Breaking News

The goodwill of Social activists and leaders - சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்களின் நன்மொழிகள்


சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும்
லைவர்களின் நன்மொழிகள்



   சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுங்ஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்கவேண்டும். 
அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை. 
உண்மையைச் சொல்! அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும். 
யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ! அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். 
எனக்குச் சித்திகள் எல்லாம் தருகின்ற தெய்வமாக விளங்குவது சத்தியமே! 
எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து, சமஉரிமையை வழங்குவோரின் மனத்தில்தான் இறைவன் வாழ்கிறான். 
ஏதுமில்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனமுவந்து ஈவதே ஜீவகாருண்யம். 
- வள்ளலார்

நம்பிக்கை இருக்கும் வரை தோல்விகள் வருவதில்லை! 
- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 

நம்மிடம் உள்ள குறைகளை நீக்கிகொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய நல்வாய்ப்பாகும்! 
- கதே 

மிகப்பெரிய வாய்ப்பு வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும்; அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றிக்காண முயலவேண்டும்! 
- மெகல்லன் 

பிறருடைய துன்பங்களைப் பார்ப்பதால் நம்முடைய துன்பங்களைச் சகிக்கக் கற்றுக்கொள்கிறோம்! 
-மார்க்கெட் வைன் 

நீ வாழ்க்கையை நேசிக்கிறாயா? அப்படியானால் பொழுதை வீணாக்காதே! வாழ்க்கையின் மூலப்பொருளே நேரம்தான்! 
- ப்ராங்ளின். 

கெட்ட நோக்கத்தோடு கூறப்படும் உண்மை; பொய்யை விட மோசமானது ஆகும்! 
- சார்லஸ் டிபிளேக்

பொறுமை என்பது பலவீனம் அல்ல! அதுவும் போராட்டமே! 
- ஹோசிமின் 

எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது? என்பதே முக்கியம்! 
- ஸ்டீபன் ஹாக்கின்ஸ் 

பிரச்சினைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்; எதிர்கொண்டு வெற்றிப் பெறுங்கள்! 
- ஓசோ 

பலமாகத் தட்டுபவன் தான்; கதவு திறந்தே இருப்பதை அறிவான்! 
- இரவிந்தரநாத் தாகூர் 

தோல்வி அடைந்து விடுவோமோ! என்று அஞ்சுபவன் ஒருபோதும் வெற்றியை அடையமாட்டான் 
- சிங்கிஸ்கான் 

இசையால் அடைய முடியாத மகிழ்ச்சியும் இல்லை; அழிக்க முடியாத துயரமும் இல்லை! 
- மொசார்ட் 

பிறரை எடைபோடுவதிலேயே காலம் கடத்தாதீர்கள்! 
அன்பு செலுத்த நேரம் இருக்காது! 
- அன்னை தெரெசா 

மனதில் உறுதி இருந்தால்; வெற்றி நிச்சயம்! 
- அண்ணல் காந்தி

இரண்டாவதாக வருபவனை உலகம் ஒருபோதும் நினைவில் வைத்துகொள்வதில்லை! 
- குத்துச்சண்டை வீரர் முகமது அலி 

எதுவுமே என்னுடையது அல்ல! 
- மகாவீரர் 

உன் தகுதியை நீயே உரக்கச்சொல்! பிறருக்காகக் காத்திருக்காதே! 
- ஜூலியஸ் சீசர் 

மகிச்சியாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது! 
- டென்சிங் 

மாற்றம் என்பது தடை அல்ல; வளர்ச்சியே! 
- அன்னிபெசன்ட் அம்மையார் 

செய்து முடி அல்லது செத்து மடி! 
- தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 

குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவுமே சாத்தியம்! 
- பாப்லோ நெருடா 

வாய்ப்புகள் தாமே வராது; நாம் தான் உருவாக்க வேண்டும்! 
- புருஸ்லி 

அனுபவத்தால் முடியாததை உற்சாகம் சாதித்துக்காட்டும்! 
- கால் பந்தாட்ட வீரர் பீலே 

சுயநலமற்றவனையே தலைமை தேடி வரும்! 
- பிளாட்டோ 

தோல்வி என்பது வீழ்ச்சி அல்ல; படிபினையே! 
- தாமஸ் ஆல்வா எடிசன் 

அன்பு செலுத்துங்கள்; காலம் குறைவாகவே இருக்கிறது! 
- பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

இந்த நிலை மாறிவிடும்! 
- சார்லி சாப்லின் 

எதிலும் தீவிரமாக இரு! 
- வின்சென்ட் வான்கோ 

உன்னையே நீ அறிவாய்! 
- கிரேக்க ஞானி சாக்ரடீஸ் 

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்! 
- சார்லஸ் டார்வின் 

நீ எதுவாக விரும்புகிறாயோ? அதுவாகவே மாறுவாய்! 
- ஆபிரகாம் லிங்கன் 

இக்கணத்தில் வாழு! 
- புத்தர் 

நீ என்ன செய்ய வேண்டும்? என்பதே உன் கவலையாக இருக்கட்டும்; பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதல்ல! 
- அண்ணல் அம்பேத்கர் 

இழப்பதற்கு எதுவும் இல்லை, அடிமை விலங்கைத் தவிர! 
- கார்ல் மார்க்ஸ் 

துணிந்தவனுக்குத் தோல்வியே இல்லை! 
- சத்ரபதி சிவாஜி 

எது வசதியானதோ? அதைச் செய்யாதே! 
எது சரியானதோ? அதைச் செய்! 
- சீன ஞானி கன்பூசியஸ் 

எதையுமே காதலுடன் செய், வெற்றி நிச்சயம்! 
- உமர் கயாம் 

மனிதனுக்குத் தேவை மாற்றமில்லை; விழிப்புணர்வே! 
- ஜெ.கிருஷ்ணமூர்த்தி

பொருளைக் கொடுப்பதால் அதை மட்டுமல்ல விசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்தே கொடுக்கிறோம் 
- யோசேப் டி பேர்ட் 

மற்றவர்களை அன்பால் மகிழச்செய்வதே ஒருவன் பெற்றிருக்கும் செல்வங்களிலேயே மேலான செல்வம் 
-தாகூர் 

நீ ஒரு செயலை ஆரம்பத்தில் நன்றாகச் செய்தால் முடிவு எப்படியும் உன்னை மகிழ்விக்காமல் போகாது. 
- சோபாக்கலிஸ் 

புறக்கணிக்கும் ஒவ்வொரு கடமையும் தெரிந்துகொள்ளக்கூடிய ஓர் உண்மையைப் புலப்படுத்தும் 
- ஜார்ஜ் வாசிங்டன் 


www.nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks