Advertisement

Breaking News

Breaking News - கல்லூரி தேர்வுகள் ரத்து: அரசு அறிவிப்பு


கல்லூரி தேர்வுகள் ரத்து: ஒடிசா அரசு அறிவிப்பு






புவனேஷ்வர்: ஒடிசாவில் நடத்தப்படாமல் இருக்கும் இளநிலை, முதுநிலை கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளது.






இந்நிலையில் ஒடிசாவில், எஞ்சியுள்ள அனைத்து இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறவித்துள்ளது. தேர்வு முடிவுகள் பல்கலை., மானிய குழு எடுக்கும் முடிவின் படி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


கொரோனாவுக்கான முதல் மருந்து ரஷ்யாவில்
 அறிமுகம்






மாஸ்கோ: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகமாகி உள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு 'அவிஃபாவிர்' என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு நேற்று  (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இம்மருந்தினை உற்பத்தி செய்துள்ளது. ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் மிக குறைந்த சமயத்திலேயே, அதாவது சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இம்மருந்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

மாதந்தோறும் 60,000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும். இம்மருந்தினை வாங்க 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.




ரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை கடந்து விட்டது. இருப்பினும் அங்கு இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. இதுவரை அங்கு 6,532 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு
 கொரோனா பாதிப்பு





சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் 1,407 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 127 பேருக்கும், திருவள்ளூர் 72 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


கொரோனா வைரசை பரப்பிய சீன அதிபர் மீது
 பீஹார் கோர்ட்டில் வழக்கு


பெட்டையா: கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.





இது குறித்து கூறப்படுவதாவது: சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வரைஸ் பரவ துவங்கியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அமெிக்க அதிபர் டிரம்ப் வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் என வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடியும் இதனை சுட்டிக்காட்டி உள்ளார்





இந்நிலையில் பீஹார் மாநிலம் மேற்கு சம்ரான் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் முராத் அலி என்பவர் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தொற்று குறித்து உலகிற்கு தகவல் அளிக்காமல் மறைத்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டம் 269,270,271,302,307,500,504, மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் சாட்சிகளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சேர்த்துள்ளார். இந்த வழக்கு ரும் 16 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக 
பரவலாக மாறவில்லை: ஐ.சி.எம்.ஆர்





புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது: இந்தியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. அதற்கான சூழல் இல்லை. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் பரவும் வேகமும், பாதிப்பின் அளவும் மிக குறைவாகவே உள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை பலன் அளித்துள்ளதையே இது காட்டுகிறது. ஊரடங்கால் கொரோனா வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குணமடைவோர் விகிதம் 49.21 சதவீதமாக உள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.


பயங்கரவாதிகள் சதியை முறியடித்தது 
பஞ்சாப் போலீஸ்


புதுடில்லி : காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவிருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை பஞ்சாப் போலீசார் முறியடித்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.





இந்தியா-பாக்., எல்லை பகுதிகளில் தொடர்ந்து பயங்கரவாதிகளில் அடிக்கடி ஊடுருவி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுதுறை தகவல்கள் வெளியானது. இதனால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் ஆயுதங்களை கடத்தி செல்ல முயன்றனர். அதன் மூலமாக சதித்திட்டத்தில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது





இது தொடர்பாக, பஞ்சாப் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஏ.கே 47 துப்பாக்கி ஒன்று, 10 கையேறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் பஞ்சாப் போலீசார் பயங்கரவாதிகள் நடத்த இருந்து சதி திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

     மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

                    https://nmsfriendsassociation.blogspot.com/

No comments

Thanks