மனிதன்... சில நேரங்களில் மிருகத்தை விட தாழ்ந்து விடுகிறான்! - Elephant Murder in Kerala
மனிதன்... சில நேரங்களில் மிருகத்தை விட தாழ்ந்து விடுகிறான்! - Elephant Murder in Kerala
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட வனப் பகுதியின் எல்லையோரத்தில்
ஒரு கர்ப்பமடைந்த காட்டு யானை காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உணவு தேடிச் சென்றுள்ளது. அது தெருவில் நடந்து சென்றபொழுது, உள்ளூர் மக்கள் அன்னாசிப்பழத்திற்குள் பட்டாசை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனர்... மிகவும் சக்தி வாய்ந்த அந்த பட்டாசு யானையின் வாயில் வெடித்துள்ளது..
நாக்கும் வாயும் மோசமாக காயமடைந்தன.. வாயில் ஏற்பட்ட காயங்களால் யானையால் எதுவும் சாப்பிட முடியவில்லை... கிராமம் முழுக்க வலியிலும் பசியிலும் சுற்றித்திரிந்து இறுதியாக நதியை அடைந்தது. ஒருவேளை தாங்க முடியாத வலியிலிருந்து நிவாரணம் பெறவேண்டியோ அல்லது காயங்களில் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக வேண்டியோ அது தண்ணீரில் நின்றிருக்க வேண்டும்..
யானையை மீட்க அதிகாரிகள் பல மணிநேரம் முயற்சி செய்த பின்பும் மே 27 மாலை 4 மணியளவில் அந்த யானை தண்ணீரில் நின்று கொண்டே இறந்துவிட்டது..யானை மீண்டும் ஒரு லாரியில் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு அங்கு வன அதிகாரிகளால் தகனம் செய்யப்பட்டது..
அந்த யானை தாய்மையடைந்திருந்து துயரத்திலும் பெருந்துயரம்.
அவ்வளவு வலியில் கிராமத்தில் சுற்றித்திரிந்த போதிலும் அந்த ஐந்தறிவு ஜீவன் மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்கவில்லை.. இங்கு மனிதனே மிருகமானான்
மனிதனை நம்பிய பாவத்திற்கு, வாய் வெடித்து, சித்திரவதை அனுபவித்து, மரணத்திற்காக காத்திருந்ததை என்னும் போது மனசு சொல்லெனாத் துயரத்திற்கு உள்ளாகிறது.
சாதாரணமாக நம் மனைவியோ அல்லது அக்காவோ, தங்கையோ கருவுற்றிருக்கும் போது எப்படி பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறோம். அத்தைகைய சூழலில்,உலகில் உள்ள மற்ற ஏனைய உயிரினங்கள் நல்லதோ,கெட்டதோ தங்களே தாங்களைக் கவனித்துக் கொள்கின்றன.
ஏதோ தெரியாமல், மனிதனிடம் வந்து வயிற்றுப் பசிக்கு உணவு கேட்டால் முடிந்தளவு உணவு கொடுத்திருக்கலாம் அதை விடுத்து மனித மிருகம் தன் திமிரு தனத்தை இப்படியாக் காட்டுவது. இறைச்சியை உண்ணும் ஊண் விலங்குகளே தான் விரும்பி சாப்பிடும் தாவர உண்ணிகள் கருவுற்றுறுக்கும் சூழலில் மனம் இரங்கி கொல்லாமல் விட்டு செல்வதை எத்தனைக் காணொளிகளில் பார்த்திருக்கிறோம். ஐந்தறிவு உயிரினங்களுக்கு உள்ள இரக்கம் மனித மிருகங்களுக்கு இல்லாமல் போனது ஏனோ.
மனித மிருகத்துக்கு திமிரு தலைக்கேறிவிட்டது தன்னைத் தவிர வேறெந்த உயிரினமும் இவ்வுலகில் பெரியது இல்லை என்று. அதனால்தான் இப்படி பட்ட மிகவும் கீழ்தனமான சிந்தனைகள்,செயல்பாடுகள் வெளிப்படுகிறது. மனித மிருகமே இவ்வுலகம் உனக்காக மட்டும் படைக்கப்படவில்லை. எதுவும் நிரந்தரமில்லை. அதனால் அடங்கி இரு இல்லையென்றால் எப்படியோ ஒரு வழியில் அழிக்கப்படுவாய்.
உன்னை நம்பி வந்த உயிரை ஏமாற்றி உணவு என்ற பெயரில் வெடிமருந்து குடுத்தும் அதை நம்பி உண்ண அந்த யானைக்கு தெரியவில்லை நம்மை விட கீழான அறிவுள்ள மனிதன் இவன் என்று,
"மனிதனின் பேராசை மனிதத்தை
தொலைக்க செய்கிறது".
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks