Breaking News - திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா
திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா
சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு(61) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் இருப்பதால், டாக்டர்களில் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் வேலை வாய்ப்பு பெற மத்திய அரசு நடவடிக்கை
புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ள இந்தியர்கள் உள்நாட்டில் வேலை பெறும் நோக்கத்தில் அவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை சேகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு திரும்பும் திறமை வாயந்த பணியாளர்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஸ்வேதேஸ் என்னும் வேலைவாய்ப்பு உதவிக்காக திறன் வாய்ந்த பணியாளர்கள் வருகை தகவல் தரவுதளத்தை ( SWADES; Skilled Workers Arrival Database for Employment Support) மத்திய அரசு துவங்கி உள்ளது
இதன் மூலம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை அரசு சேகரித்து வைக்கும். தொழில் முனைதல் அமைச்சகம், விமானப்போக்குவரத்து அமைச்சகம், வெளியுறவு அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் தகுதியுள்ள நபர்களின் தரவுதளத்தை அவர்களின் திறமைகள் அடிப்படையில் உருவாக்கி இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். நாட்டில் உள்ள தகுந்த வேலை வாய்ப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் நிறுவனங்களுடன் பகிரப்படும். ஆன்லைன் ஸ்வேதேஸ் திறன்கள் அட்டையை நாடு திரும்பும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இது குறித்து பேசிய மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, 'இந்த இக்கட்டான காலகட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒட்டு மொத்த நாடும் ஆதரவு அளிக்க வேண்டும். வந்தேபாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியவர்களின் திறன்கள் குறித்த தகவ்லகளை விவரணையாக்கம் செய்ய, விமானப்போக்குவரத்து, அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்' இவ்வாறு தெரிவித்தார்.
கேரளா தமிழகம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு தமிழக அரசு வரும் 6 ம் தேதி வரை கால அவகாசம் அளித்தது. இந்நிலையில் மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை:: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில் மார்ச் 25 முதல் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்த ஜூலை 6 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. 4 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான முறையில் தான் மின் கணக்கீடு செய்யப்படுகிறது. நான்கு மாத மின் நுகர்வு, இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. முந்தைய மாத மின் யூனிட்டை கழிக்காமல், தொகையை மட்டும் கழிக்கப்படுகிறது என்பது தவறாகும். கணக்கீடு முறை குறித்து சந்தேகம் இருந்தால், www.tangedco.gov.in இல் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361 கோடி கடனுதவி: நிர்மலா
புதுடில்லி: அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ், ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனங்கள், எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் வழங்கி வருகின்றன.
இதன்படி, ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தின் முதல் இரு நாட்களில் மட்டும் ரூ.3,892.78 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு திட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் பள்ளிகளை திக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அம்மாநில பள்ளி க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் 4 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகளை ஜூலை1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஜூலை 15-ம் தேதியும், மழலையர் பள்ளிகள் ஜூலை 20-ம் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வரும் 5-ம் தேதி பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி தரப்படும்.
பள்ளிகளை திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10 முதல் 12-ம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு அறிக்கை அனுப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாளை ஹால் டிக்கெட் விநியோகம்
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம் தேதி துவங்குகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது.
தேர்வு தொடர்பான விவரங்களை அறிய தேர்வு கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது
புதுடில்லி: இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 217 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்தது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 3) காலை 11:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,815 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் தற்போது 1,01,497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 72,300 - 2,465
தமிழகம் - 24,586 - 197
டில்லி - 22,132 - 556
குஜராத் - 17,617 - 1,092
ராஜஸ்தான் - 9,373 - 203
மத்திய பிரதேசம் - 8,420 - 364
உத்தர பிரதேசம் - 8,361 - 222
மேற்கு வங்கம்- 6,168 - 335
ஆந்திரா - 3,898 - 64
கர்நாடகா- 3,796 - 52
தெலுங்கானா - 2,891 - 92
கேரளா - 1,412 - 11
புதுச்சேரி- 82 - 0
சவுதியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 30 பேர் பலி
ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 2,171 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஒரு நாளில் 30 பேர் பலியானதாகவும் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பாதிப்புகளை குறைக்க சவுதி அரசு ம் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை இன்று தெரிவித்ததாவது : சவுதியில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் புதிதாக 2,171 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,182 ஆக அதிகரித்தது. சவுதியில் அதிகபட்சமாக ஒரு நாளில் மட்டும் 30 பேர் பலியாகினர். நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 579 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து, இன்று 2,369 பேர் குணமடைந்தனர். நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68,159 பேர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,321 ஆக உள்ளது.
டெல்லி: கொரோனாவால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி மற்றும் பல்வேறு மாநில நிவாரண நிதிக்கு ரூபாய் 35 கோடி வழங்கி உள்ளது. அதேபோல் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கொரோனா வாரியர்ஸ் பாடல் ஒன்றும் இயற்றப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பலவற்றில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படும் முன்னிலை பணியாளர்கள்தான் மக்களுக்காக உழைத்து வருகிறார்கள். இவர்களை பாராட்டும் விதமாக இவர்களுக்கான பாராட்டு கீதம் ஒன்று இயற்றப்பட்டு உள்ளது. One Nation One Voice என்ற பெயரில் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது . கடந்த 17ம் தேதி இந்த பாடல் வெளியானது.
இந்த பாடலை உருவாக்கியதில் முக்கியமான ஸ்பான்ஸர் நிறுவனங்களில்Jayatu Jayatu Bharatam, Vasudev Kutumbakkam என்ற இந்த பாடல் 200 பாடகர்கள் மூலம் பாடப்பட்டுள்ளது. இந்திய பாடகர்கள் உரிமை சங்கம் (Indian Singers Rights Association -ISRA) ஒன்றாக இணைந்து 15 மொழிகளில் இந்த பாடலை இயற்றி உள்ளது.
சோனு நிகம், ஸ்ரீனிவாஸ், ஐஎஸ்ஆர்ஏ அமைப்பின் சிஇஓ சஞ்சய் தண்டான் ஆகியோர் கூட்டு முயற்சியில் இந்த பாடல் உருவாகி உள்ளது. இந்த பாடலை எல்லா பாடகர்களும் தங்கள் வீட்டில் இருந்தே பாடி வெளியிட்டு இருக்கிறார்கள். வீட்டில் பாடலை பாட சரியான கருவிகள் இல்லாமல் இருந்தும் கூட இந்த பாடலை அவர்கள் பாடியுள்ளனர். இதற்கு முன் இத்தனை பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடியது இல்லை. மொத்தம் 14 மொழிகளில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. ஆஷா போஷ்லே, அனுப் ஜலோடா, அல்கா யாக்கினிக், ஹரிஹரன், கைலாஷ் கேர் , கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சானு, மஹாலக்ஷ்மி ஐயர் , மனோ, பங்கஜ் யூதாஸ், எஸ்பிபி, ஷான், சோனு ஜகம், சுரேஷ் வடகர், ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன் , ஷங்கர் மஹாதேவன் என பல முன்னணி கலைஞர்கள் இதில் பாடி உள்ளனர் .
இது குறித்து ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ அமித் சைங்ல் தெரிவிக்கும் போது, மக்கள் மீது எப்போது அக்கறை கொண்ட நிறுவனம்தான் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். நாம் எதிர்காலம் குறித்த சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் நாம் துணிச்சலாக முன்னே வந்து செயல் ஈடுபட வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் 200 கலைஞர்கள் தங்கள் மொழியில் பாடி வெளியிடும் இந்த வீடியோவை பாராட்டுகிறோம். இதற்கு ஒரு காரணமாக இருப்பதில் பெருமை அடைகிறோம்.
இந்திய நிறுவனம் என்ற வகையில் இந்தியர்களின் உழைப்பை மதிக்கிறோம். இதற்காக பிஎம் கேர் தொண்டிற்கு நாங்கள் உதவி செய்கிறோம். One Nation One Voice வெறும் பாடல் மட்டும் அல்ல. இது மக்களை ஒன்றிணைக்கும் இயக்கம். மக்களை ஒன்றாக சேர்க்கும் அமைப்பாக இந்த பாடல் இருக்கும்.
இந்த பாடல் மட்டுமின்றி, கொரோனாவால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி மற்றும் பல்வேறு மாநில நிவாரண நிதிக்கு ரூபாய் 35 கோடி வழங்கி உள்ளது. 100க்கும் மேற்பட்ட தளங்களில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. டிவி, வானொலி, மீடியா, OTT, VOD, ISP, DTH மற்றும் CRBT, 100க்கும் மேற்பட்ட ஒளிபரப்பு சேனல்கள், சமூக வலைத்தளம், தொழில்நுட்ப தளங்கள் இந்த செயலை ஆதரித்துள்ளது.
தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், போஜ்பூரி, அசாமி, காஷ்மீரி, சிந்தி, ராஜஸ்தானி, ஓடியா ஆகிய மொழிகளில் இந்த பாடல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை வழங்குவதில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் குறித்து: ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 1942ல் தொடங்கப்பட்டு தற்போது இந்தியாவில் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆசியாவில் நான்காவது பெரிய நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் வருடாந்திர வருமானம் 192.48 பில்லியன் ரூபாய் ஆகும். மொத்தம் 15 நாடுகளில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. அதேபோல் 60 நாடுகளில் பொருட்களை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது . பெயிண்ட் துறையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தற்போது கிங் போல செயல்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
https://nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks