Father's Day 2020 - இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் 2020
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
தாய் பெற்று , தந்தை வளர்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நம் தாய் நம்மை பெற்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்க்கும் போது , அங்கே ஒரு ஜீவன் தான் தன் வாழ்நாளில் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் , அவமானம் தன் குழந்தைகள் அனுபவிக்க கூடாது என்று தன் இரத்தத்தை வியர்வை துளிகளாய் மண்ணில் சிந்த உழைத்து நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் அப்பா.
நம் அம்மா எவ்வளவு கோபப்பட்டு திட்டினாலும் , சில நேரங்களில் அடித்தால் கூட நாம் பெரிது படுத்துவது இல்லை. ஆனால் நம் அப்பா "டேய் " என்று ஒற்றை வார்த்தை கூறினால் கூட நம்மால் தாங்க முடியாது
குழந்தைகள் ( நாம் ) பிறந்த பிறகு தன் தேவை அனைத்தும் குறைத்து தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று அனைத்தையும் தேடி தேடி செய்வார்.
தன் சந்தோசம், துக்கம் , கோவம் என்று எந்த ஒரு உணர்சிகளை எதுவும் வெளிக்காட்டாமல் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆளும் ஒரு மகான்.
வாழ்க்கையை பற்றிய புரிய வைப்பதில் நல்ல ஆசிரியராக ,
நம் எதிர்கால வாழ்க்கையை சீரமைப்பதில் நல்ல தலைவனாக
வாழ்க்கையில் சில நேரங்களில் நல்ல தோழனாக தோள் கொடுக்கும் அனைத்து அப்பாக்களும் தன் பிள்ளைகளுக்கு ஹீரோ தான்.
அப்பாவின் மனதை புரிந்து கொள்ள பல நேரங்களில் யாராலும் இயலாது. நாம் அப்பா ஆகும் போது தான் நமக்கு புரியும்.
ஏனெனில் அப்பா என்பது வெறும் வார்த்தை இல்லை அவர் ஒரு பல்கலைக்கழகம்.
ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார்...
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது...
அப்பாக்கள் :
➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்
➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்
➡பிள்ளைகளின் அச்சாணிகள்
➡பிள்ளைகளின் சூரியன்கள்
➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்
➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்
➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்
அப்பா:
தூய்மையான
அன்பு,
போலியற்ற
அக்கறை,
நேர்மையான வழிகாட்டல்,
நியாயமான
சிந்தனை,
நேசிக்கத்தக்க உபசரிப்பு,
மாறுதலில்லா நம்பிக்கை,
காயங்களற்ற
வார்த்தை,
கம்பீரமான
அறிவுரை,
கலங்கமில்லா
சிரிப்பு,
உண்மையான
அழுகை,
என அத்தனையும் உளமகிழ்ந்து
செய்து வளர்த்தவர்.
தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுப்பவர் அப்பா.
அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர்.
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
-
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks