Advertisement

Breaking News

நலம் தரும் தேனிக்கள் - Honey bees


நலம் தரும் தேனிக்கள் - Honey bees




தேனீ.

 ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் சேகரிக்கும் முறை:



தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்குக் கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது. இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.


தாவர இனப்பெருக்கத்தில் தேனீக்கள்:

தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தை (பூந்துகள்) சேகரிக்கையில், அவற்றை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு கடத்துவதால், பூக்களிடையே சூலுற (கருவுற) உதவுகின்றது. இதனால் சில மரஞ்செடிகள் காய்த்து விதையிட்டு இனம் பெருக்குவதில் தேனீக்களின் பங்கும் இருக்கிறது. இதனை பூந்துகள் சேர்க்கை (மகரந்தச்சேர்க்கை) என்பர்.

 தேனீக்களின் வாழ்க்கை:



தேனீக்களின் வாழ்க்கை முறையும் சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழ்கின்றன. இவைகளை குமுகப் பூச்சியினம் என்பர். ஒரு கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏறத்தாழ 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டுமே உள்ளன. இவைதவிர பணிசெய்ய பெண் தேனீக்கள் 50,000-60,000 வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.

தேன் கூடு:


தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுங்கோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். 

தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும்.

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.

இராணி தேனீ:


இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்து கிட்டத்தட்ட ஒரு கிழமையில் வெளியே பறந்து சூழலை அறிமுகப்படுத்திக் கொள்ளும். இது அறிமுகப் பறப்பு (Orientation flight) எனப்படும். அதன்பிறகு விரைவில் கலவிப்பறப்பை (nuptial flight or mating flight) மேற்கொள்ளும். கலவிப் பறப்பின்போது ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது. தரை மட்டத்திலிருந்து, 65-100 அடி உயரத்தில் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது.
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

ஆண் தேனீ:

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே இந்த ஆண் தேனீக்களின் செயலாகும். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

 வேலைக்கார தேனீக்கள்:

முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, குடம்பிகள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது.

இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடைபெறுகின்றது.

 தேனீக்களின் நடனம்:



தேனீக்கள் நடனம் மூலம் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கின்றன.

இடம்பெயரவும் , தேன் சேகரிக்கவும் முதலில் ஒரு இடத்தை வேவுபார்க்கும் வேலைக்காரத்தேனீ உகந்த இடத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கிறது. பிறகே அதனை அளக்கிறது. அத்தகவல்களை, பிற வேலைக்காரத்தேனிக்களின் குழுவிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது. அவை பறந்து சென்று, புதிய இடத்தைக் கண்டுணர்ந்து, கூட்டிலுள்ள பிற தேனிக்களிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது.

இறுதியாக கூட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான தேனிக்கள் ஒருசில நிமிடங்களில் புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து தேன் சேகரிக்கும். இத்தகைய துல்லியமான இடம் பெயர்ப்பு நிகழ்வு நடனம் மூலமே நிகழ்கிறது.

அழிவின் விளிம்பில் தேனீக்கள்:

தேனீக்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து வருவதாக தேனீ வளர்ப்பவர்களும், அறிவியலாளர்களும், சூழலியலாளர்களும், சில அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச்சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலியில் தேனீக்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. எனவே தேனீக்களின் அழிவு பலவகை பயிர்கள், பழவகைகள் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதனால், இது மிகவும் அவதானத்தில் கொள்ள வேண்டிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இதில் மற்றொரு காரணமாக கருதப்படுவது நாம் விவசாயம் செய்ய பயன்படுத்தும் இரசாயனம் கலந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“வாதமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத்தேனே”
என்கிறார் புலிப்பாணி சித்தர்.

அதாவது இதற்கு பொருள், வாதம் என்ற நோயால் முகம் மட்டும் சிலருக்கு குளிர்காலத்தில் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும் வியாதி வரும். இதை கொம்பு தேன் தீர்க்கும். சிலருக்கு காசு உழைக்காமலே கொட்டோ கொட்டென்று கொட்டும். இவர்கள் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு விட்டு அப்படியே படுக்கையில் கிடப்பார்கள். இதற்கு மாந்தம் என்று பெயர். இந்த மாந்தத்தை விரட்டும். பல மனக்கோளாறு,உடல் கோளாறுகளால் பலருக்கு பசி என்பதே இருக்காது. இவர்களுக்கு பசியை வரவழைக்கும். நாக்கின் ருசியையும் அதிகப்படுத்தும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேனை சேகரிக்கும் தேனீக்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும். இது மனித குலத்தின் நலனை சார்ந்தது.
ஆம் தேனீக்கள் மட்டும் உலகில் இல்லை என்றால் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடக்காது , மகரந்தச் சேர்க்கை நடக்கவில்லை என்றால்  காய் , கனிகள் என்று எதுவும் கிடைக்காது.
தேனீக்கள் இல்லை என்றால் ஒவ்வொரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் கூட வாழ முடியாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். 

ஒருபுறம் தேனீக்களின் அழிவு மற்றொருபுறம் உலக மக்கள் தொகை பெருக்கம் . இதனால் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவர தேனீக்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும். இது நம் அனைவரின் கடமையாகும்.

www.nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks