Advertisement

Breaking News

கீழடிக்கு அருகே மணலூரில்.. வித்தியாசமான விலங்கின் பிரமாண்ட எலும்புக்கூடு - keeladi


கீழடிக்கு அருகே மணலூரில்.. வித்தியாசமான விலங்கின் பிரமாண்ட எலும்புக்கூடு



மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மணலூர் என்ற கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் அடுத்தடுத்து ஆச்சரியப்படத் தக்க பல பொருட்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இன்று, ஒரு வித்தியாசமான விலங்கின், எலும்புக் கூடு அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19ம் தேதி, 6வது கட்ட அகழாய்வு பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட நிலையில், மணலூரில் அகழாய்வு பணி துவங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.



மணலூர் ஆய்வு

கொரோனா லாக்டவுன் காரணமாக, மார்ச் 24ம் தேதி முதல், அனைத்து அகழாய்வு பணிகளையும் தொல்லியல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், மே 20ம் தேதி மறுபடியும், கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி ஆரம்பித்தது. மே 23ம் தேதி முதல் முறையாக மணலூரில் ஆய்வுப் பணிகள் ஆரம்பித்தன. மே 27ம் தேதி கொந்தகையில் மறுபடியும், ஆய்வுப் பணி துவங்கியது


சுடுமணல் உலை

இதுவரை பிற பகுதிகளில் புதிதாக எதுவும் தென்படவில்லை. ஆனால், மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழி பகுதியில், சுடுமண்ணாலான உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலை உலோகங்கள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக இருக்க கூடும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தொடர்ந்து அது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.



பெரிய எலும்புக் கூடு

இந்த நிலையில்தான், இன்றைய ஆய்வின்போது, மணலூரில், எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. அது மிகப்பெரியதாக இருந்தது. புதிய வகை தோற்றத்தில் இருப்பதை போல தெரிகிறது. இது என்ன விலங்கு என்பது பற்றி தொல்லியல் துறை இன்று அறிவிக்கவில்லை.

ஆய்வு

அதேநேரம், விலங்கின் தன்மை குறித்த ஆய்வுகள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான விலங்கின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்த ஆய்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த காலத்தில் வாழ்ந்த மிருகங்கள் குறித்த புரிதல் ஏற்பட இந்த ஆய்வு பலனளிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை

புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.
முதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மே 18ஆம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா (13) அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகியும் அவரைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவைத் தேடினர்.



சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி?

அப்போது பாப்பான்குளம் அருகேயுள்ள தைல மரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் கிழிந்த நிலையில், முகத்தில் காயத்துடன், கழுத்து இறுக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சிறுமி வித்யாவை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மே19-ம் தேதி வித்யா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வித்யா, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
காவல்துறை விசாரணையில் வித்யாவின் அப்பா பன்னீர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பன்னீரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தானும் தனது இரண்டாவது மனைவியும் சேர்ந்து பணப் பிரச்சனையைத் தீர்க்க புதுக்கோட்டையை சேர்ந்த மந்திரவாதியான வசந்தியின் பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து பன்னீரை கடந்த ஜீன் 01ம் தேதி போலீசார் கைது செய்தனர்

மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் தெம்மாவூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். இந்த கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், சேலை, துண்டு மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
பன்னீருக்கு ஆசை வார்த்தை காட்டி மகளை நரபலி கொடுக்க சொன்ன மந்திரவாதி வசந்தி மற்றும் உறவினர் முருகாயியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று (04.06.2020) அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர்.



இரண்டாவது மனைவி மர்ம மரணம்

இதனிடையே வித்யாவை நரபலி கொடுக்க உடந்தையாக இருந்த பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி வடுகவயலில் உள்ள தனது அம்மா வீட்டில் கடந்த மே 31 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மூக்காயின் மரணம் குறித்தும், உடையாளிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விரிவாக பேசினார்.
"பன்னீர் தனது வறுமை மற்றும் பண ஆசை காரணமாக மந்திரவாதியான வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அப்போது மந்திரவாதி 'உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் கிடைக்கும், செல்வாக்கு பெருகும்' எனக் கூறியதால் அதனை நம்பி மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார்."

'பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்'

"கடந்த மே மாதம் 17ம் தேதி நள்ளிரவு பிடாரி அம்மன் கோயில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை 7 மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய மகள் வித்யா 'அக்கா நீ வர வேண்டாம் வீட்டில் இரு, நான் போய் தண்ணீர் எடுத்து விட்டு வருகிறேன்' என சொல்லி விட்டு குடத்துடன் சென்றுள்ளார்."
"சிறுமியை பின் தொடர்ந்து சென்ற பன்னீர், தனியாக பேச வேண்டும் என்று தைல மரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை இறுக்கமாக பிடித்து மூச்சு திணற செய்துள்ளனர்."
"சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் மூக்காயியை மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மந்திரவாதி உள்ளிட்ட அனைவரையும் அனுப்பிவைத்துள்ளார் பன்னீர்."
"பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பாலியல் தொந்தரவால் நிகழ்ந்த சம்பவம் போல இருக்க வேண்டும் என்று நம்ப வைப்பதற்காக பன்னீர் தனது மகளின் ஆடைகளை களைந்து, உள்ளாடையைக் கழற்றி அப்பகுதியில் போலீசார், பொதுமக்களுக்கு கண்ணில் படும்படி வீசி எறிந்துவிட்டு மகள் இறந்து விட்டதாக நினைத்து ஒன்றும் நடக்காதது போல வீட்டிற்கு சென்றுவிட்டார்."

"ஆனால், சிறுமி இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தததை கண்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்."
"பன்னீர் நீண்ட நாட்களாக மிகவும் ஆழமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மகளை கொன்ற பதற்றம் சிறுதளவும் இல்லாமல் ஊர் மக்கள் சந்தேகப்படாத வகையில் இருந்துள்ளார். மகள் இறந்த அடுத்த நாள் பன்னீர் தினசரி செல்லும் இடங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் தான் கவலைப்படாததை போல் சகஜமாக பழகியுள்ளார்."

'மந்திரவாதிகள் மனநோயாளிகள்'

நரபலி சம்பவம் குறித்து சென்னையை சேர்ந்த மன நல மருத்துவர் சிவபாலன் பிபிசி தமிழிடம், "அந்த சிறுமியின் தந்தை யாரை பற்றியும் கவலைப்படாமல், தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு சுய நலவாதியாகத் தான் இருந்திருப்பார், தனது பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தைகளை கூட கொலை செய்ய தயாராகியுள்ளார் என்றால் அவர் ஆளுமையற்றவர் என்பது தெரிய வருகிறது. இவர் இந்த கொலையை நீண்ட நாட்களாய் திட்டமிட்டுத்தான் செய்து இருக்க வேண்டும்."
"இப்படியான மன நிலையில் உள்ளவர்களை கண்டுபிடிப்பது சிரமம் ஆனால் அவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர்கள் மட்டும் இதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்," என்று கூறினார்.
மந்திரவாதி வசந்தி நிச்சயம் ஒரு மனநோயாளி காரணம் மூட நம்பிக்கையால் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி, ஒரு கட்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராகவே மாறிவிடுகிறார்கள். மக்களின் மூட நம்பிக்கையை முதலாக்கி பேய், பூதம், புதையல் என மோசடி செய்துவரும் மந்திரவாதிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மன நல மருத்துவர் சிவபாலன்.

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மத்திய அரசு வெளியீடு



வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு வருகிற 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், மதம் தொடர்பான இடங்கள், மால்கள், ஓட்டல்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழிகாட்டுதல் நெறிமுறைகைள அறித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-





* அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் வைக்க வேண்டும்

* அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

* வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது

* அன்னதானம் வழங்கும்போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும். அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

* கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்

* ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்

* வரிசையாக அனுமதிக்கப்படும்போது ஆறு அடி தூர இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

* மக்கள் வழிபாட்டு தலங்களுக்குள் செல்லும் முன் கை மற்றும் கால்களை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பில் காவல்துறையின் பங்கு மிக முக்கியமானதாக திகழ்கிறது. இதனால் அவர்களும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை காவல்துறை துணை ஆணையர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டிஜிபி அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்




சென்னை:

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்படுவதாகவும், 24 மணி நேரமாக ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது






கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து தன் பரவலால் அலற வைத்து வருகிறது.

64 லட்சம் பேருக்கும் மேலாக இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது. எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும் பலனற்றுப்போய் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களது இழப்பால் குடும்பத்தினர் மீளாத சோகத்தில் இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த கொரோனாவை கொல்வதற்கு இன்னும் ஒரு மருந்து, சந்தைக்கு வருவதில்லை. இந்தியாவில் தொடங்கி இஸ்ரேல் வரை எத்தனையோ நாடுகள் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் கண்டறிந்து அவற்றை சோதனை செய்யும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றன. சோதனை செய்து வெற்றி கண்டு தயாரிக்கத்தொடங்கினாலும் எல்லா மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமானால் ஒன்றிரண்டு ஆண்டுகள் வரையில் ஆகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 700-கோடிக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மருந்தினை தயாரிப்பது என்பது எளிய வேலை இல்லை. அது இந்தக்கணத்தில் உலகிலேயே பிரமாண்டமான பணியாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனாவால் நாள்தோறும் ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரமாகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 96 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 31 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனா மையமாக திகழும் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1 லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு தினமும் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்




சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம், அன்பானந்தம் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 38). இவரது மனைவி லட்சுமி (34). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்வேல் முருகன் கூலி தொழில் செய்து வந்தார்.
லட்சுமி அதே பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்யும் கோவிந்தசாமி (62) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை செந்தில்வேல்முருகன் கண்டித்தார். இதனால் மோதல் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அதே பகுதியில் உள்ள தியாகி குப்பன் தெருவில் இருக்கும் கோவிந்தசாமியின் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று அதிகாலை செந்தில்வேல் முருகன், கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். கோவிந்தசாமி கதவை திறந்தார். உடனே தனது கையில் எடுத்துச் சென்றிருந்த கேனில் வைத்திருந்த பெட்ரோலை கோவிந்தசாமி மீது செந்தில்வேல் முருகன் ஊற்றியதாக தெரிகிறது. பின்னர் அவரது உடலில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடலில் பற்றி எரிந்த தீயுடன் கோவிந்தசாமி அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி எழுந்து ஓடி வந்தார். அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி செந்தில்வேல்முருகன் தீ வைத்தாராம். லட்சுமியும் தீயில் எரிந்தபடி வெளியில் ஓடி வந்தார். வந்த காரியத்தை முடித்து விட்டு செந்தில்வேல்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 2 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை லட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தியாகராயநகர் துணை கமிஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில், எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிய நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கோவிந்தசாமியிடம், போலீசார் மாஜிஸ்திரேட்டு மூலம் மரணவாக்கு மூலம் பெற்றதாக தெரிகிறது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட செந்தில்வேல்முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் முதலீடு: கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்


சென்னை:பென்ஸ், ஆடி உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்

latest tamil news


உலகளவில் மோட்டார் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பென்ஸ் , ஆடி, டெஸ்லா, பி.எம்.டபிள்யூ., ஹோண்டா, மெர்சிடிஸ். ஸ்கோடா, ஜாக்குவார் லேண்ட்ரோவர், டொயோட்டா, வோக்ஸ் வேகான் உள்ளிட்ட 11 முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

latest tamil news


தமிழகத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் உள்ள சாதகமானஅம்சங்களை குறிப்பிட்டும், முதலீடு செய்வதால் அளிக்கப்படும். முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை தமிழக அரசு வழங்கும் எனவும் ஊக்கச்சலுகைகள் வழங்கப்படுவது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து 3 இந்திய இன்ஜி., மீட்பு



UN report, United Nation,  Abducted, Indian engineers, freed, exchange, Taliban members, Taliban terrorists, Afghanistan, Afghan government, ஐநா, மீட்பு, தலிபான்

நியூயார்க்: சிறையில் இருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுவித்து, 2018 ம் ஆண்டு கடத்தி செல்லப்பட்ட, 3 இந்திய இன்ஜினியர்களை, கடந்த ஆண்டு மீட்டதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

கடந்த 2018 மே மாதத்தில், வடக்கு பக்லான் மாகாணத்தில், ஆப்கன் அரசால் செயல்படுத்தப்பட்ட மின்சார திட்டத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 3 பேர் உட்பட 7 இன்ஜினியர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடந்த ஆண்டு இந்திய இன்ஜினியர்கள் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர் என்ற தகவலை வெளியிட இந்திய அரசு மறுத்துவிட்டது.

latest tamil news

இந்நிலையில், பக்ராம் விமான தளத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 11 தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்து. அதற்கு பதிலாக 3 இந்திய இன்ஜினியர்களை மீட்டதாக ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடத்தப்பட்டவர்களில் மேலும் ஒருவர் கடந்த மார்ச்சில் மீட்கப்பட்டார். மற்ற மூவரின் கதி என்னவானது என்ற தகவல் இல்லை

குமரிக்கு பஸ்சில் வந்தாலும் பரிசோதனை கட்டாயம்கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்



ஆரல்வாய்மொழி,

குமரிக்கு பஸ்சில் வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி தனியார் கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் குமரி மாவட்டத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்கள் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு இயக்கப்பட்டன. மேலும் அந்த மாவட்டங்களில் இருந்து குமரிக்கு பஸ்சில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் அதிகாரிகளுடன், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தனியார் கல்லூரியில் மையம்

இதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்கு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளியூர்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் நேராக அந்த கல்லூரி வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அதில் வந்த பயணிகளின் பெயர் விவரம் அங்கேயே சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிந்ததும், பயணிகள் பஸ்சில் ஏறி நாகர்கோவிலுக்கு சென்றனர்.

நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் நேற்று என்ஜினீயரிங் கல்லூரிக்கு வந்து கொரோனா பரிசோதனை சிறப்பு மையத்தில் பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிப்பதை பார்வையிட்டார். நேற்று காலையில் இருந்து மாலை 4 மணி வரை 300 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

ஆதார் அவசியம்

அதே சமயம் வெளி மாவட்டங்களில் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து சோதனை நடத்தப்பட்டது. அவ்வாறு சோதனை செய்யும் போது, வாகனத்தில் வருபவர்கள், வள்ளியூர் மற்றும் நாங்குநேரியில் இருந்து வருவதாக கூறி வந்தனர். இதனால் அவர்கள் உண்மையிலேயே எங்கிருந்து வருகிறார்கள் என்பதை கண்டறிய, ஆதார் அட்டை அவசியம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர். ஆதார் அட்டையுடன் வருபவர்களை மட்டுமே மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கிறார்கள். இதனால் கார்-மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளானதை காண முடிந்தது.

குவைத்தில் வெளிநாட்டினரை 30 % ஆக குறைக்க திட்டம்



குவைத் சிட்டி: 

  குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் சபா அல்-காலித் அல்-சபா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், குவைத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னை குறித்து அல்சபா பேசியுள்ளார். 'குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 48 லட்சம் பேரில், கிட்டத்தட்ட 34 லட்சம் பேர் வெளிநாட்டினர் ஆவர். இந்த ஏற்றத்தாழ்வை தீர்க்க நமக்கு எதிர்காலத்தில் சவால் உள்ளது' என அல் சபா கூறியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தில் சுமார் 6.5 லட்சம் வெளிநாட்டினர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலும் இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். குறைவான வரி விதிப்பு காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களது வருமானத்தை தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை, குறிப்பாக திறனற்ற தொழிலாளர்களை குறைக்க சட்டம் இயற்ற எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு மாற்றாக, குவைத்தை சேர்ந்தவர்களுக்கு பணியை ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை முன்வைத்துள்ளனர்.
கொரோனா தாக்கம் மற்றும் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சமாளிக்க, வளைகுடா நாடுகள், வங்கிகள், வணிக நிறுவனங்களுக்கு பல மில்லியன் டாலரை உதவியுள்ளன. இதில் குவைத் பிராந்தியத்திற்கு மிகச்சிறிய நிதியுதவி மட்டுமே கிடைத்துள்ளது. ஏப்.1ம் தேதி துவங்கிய நிதியாண்டில், பட்ஜெட் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 % அளவுக்கு இருக்குமென குவைத்தின் தேசிய வங்கி கணித்துள்ளது. பெரும்பாலான வளைகுடா மாநிலங்கள் பொருளாதார மதிப்பீட்டில் 15 % முதல் 25 % பற்றாக்குறையுடன் இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது கடனை அதிகரித்து, இருப்பை குறைப்பதுடன், கடுமையான தேர்வுக்கு வழிவகுக்கும்.

குவைத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பதிலாக உள்நாட்டினரை மாற்றுவது ஏற்கனவே மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் குவைத்தில் பார்லி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசு பணியில் உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுவது சில வாக்காளர்களை கவர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதி கணக்கின் படி, தனியார் துறைகளில் 19 % மட்டுமே குவைத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.





குவைத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்களில், சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குவைத் அதன் பொருளாதாரத்தை எண்ணெயைச் சார்ந்திருப்பதிலிருந்து விலக வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய 224 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாகவுக், தற்போதைய சூழலில் குவைத்தில் வசிக்கும் அனைவருக்கும் தாங்கள் பொறுப்பு என்றும், ஆனால் வர்த்தகம் கைவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பள்ளிக்குள் நடந்த கத்தி தாக்குதலில் 39 பேர் காயம்!


பீஜிங் : 
தெற்கு சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த காவலாளி, கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் காயமடைந்தனர்.
latest tamil news



தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள வாங்ஃபு நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. காலை 8:30 மணியளவில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் ஆஜராகி கலைந்து சென்றனர். அப்போது பள்ளிக்குள் நுழைந்த காவலாளி ஒருவர் எதிர்படுபவர்களை எல்லாம் கத்தியால் தாக்கியபடி சென்றுள்ளார்.இத்தாக்குதலில் 14 குழந்தைகள், பள்ளி தலைமையாசியர் உட்பட 39 பேர் காயமடைந்தனர். இருவரும் பலமாக கத்திக்குத்து விழுந்துள்ளது.

latest tamil news

தகவல் அறிந்து 8 ஆம்புலன்ஸ்களில் விரைந்த மருத்துவக் குழுவினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் 50 வயதான லி சியாமின் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிருப்தி அடைந்த ஊழியர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களால் சீன பள்ளிகளில் கத்தி தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளது. ஏப்ரல், 2018-ல், ஷாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே இளைஞர் ஒருவர் நடத்திய கத்தி தாக்குதலில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் தூக்கிலிடப்பட்டார்.

அதே போல், அக்டோபர், 2018 இல், தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் சமையலறை கத்தியுடன் மழலையர் பள்ளிக்குள் நுழைந்த பெண் ஒருவர் 14 குழந்தைகளை குத்தினார். சமீபத்தில் 2019 ஜனவரியில் பெய்ஜிங் பள்ளியில் நடந்த கத்தி தாக்குதலில் 20 குழந்தைகள் காயமடைந்தனர்.


ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்


துபாய் : 
ஊரடங்கு விதிமுறைகளையொட்டி, அரபு எமிரேட்ஸில் ஜூன் 15 முதல் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் விமான சேவைகளை மீண்டும் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



latest tamil news

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாண்டவம் ஆடி லட்சக்கணக்கானோரை பாதித்தது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் ஊரங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஜூன் 15 முதல் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் விமான சேவையை தொடங்குகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கும் பயணிகள் விமானங்களில் செல்ல முடியும் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூன் 15 முதல் துபாய் உள்ளிட்ட 16 வெவ்வேறு நகரங்களுக்கு இடையே பயணிகள் விமானங்களை இயக்கவுள்ளது.

அதன்படி, எமிரேட்ஸ்.காம் மற்றும் பயண முகவர்கள் வழியாக முன்பதிவு செய்ய பின்வரும் நகரங்களுக்கான விமானங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பஹ்ரைன், மான்செஸ்டர், சூரிச், வியன்னா, ஆம்ஸ்டர்டாம், கோபன்ஹேகன், டப்ளின், நியூயார்க் ஜே.எஃப்.கே, சியோல், கோலாலம்பூர், சிங்கப்பூர், ஜகார்த்தா, தைபே, ஹாங்காங், பெர்த் மற்றும் பிரிஸ்பேன் ஆகியவை அடங்கும். தொடர்ந்து, ஜூன் 8 முதல் கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பாகிஸ்தானின் பிற நகரங்களில் இருந்து எமிரேட்சின் பிற பகுதிகளுக்கு செல்ல விரும்புவோருக்கு விமானங்கள் கிடைக்கும் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

latest tamil news

தற்போதைய அறிவிப்புகளுடன், ஜூன் 11 முதல் துபாயில் இருந்து லண்டனின் ஹூத்ரோ, ஜெர்மனியின் பிராங்பேர்ட், பிரான்சின் பாரிஸ், இத்தாலியின் மிலன், ஸ்பெயினின் மாட்ரிட், அமெரிக்காவின் சிகாகோ, கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் உள்ளிட்ட 29 நகரங்களுக்கு எமிரேட்ஸ் பயணிகளுக்கு விமானங்களை வழங்கவுள்ளது. பயணிகள் விமானங்களில் பயணம் செய்வதற்கு முன் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

No comments

Thanks