வெற்றி என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன? - What is success and Failure ?
வெற்றி என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன?
வெற்றி என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன?
வெற்றி மற்றும் தோல்வி பற்றிய விஷயங்கள் மீது நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்பது தான்.
வெற்றிகரமான மக்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கும்போது, அவர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்து இருந்தாலும் பரவாயில்லை, அவர்களிடம் சில பண்புகள் இருக்கின்றன.
வெற்றியானது சில சுவடுகளை விட்டுச் செல்கிறது.
வெற்றிகரமான மக்களின் பண்புகளை நாம் அடையாளம் கண்டு அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தினால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதுபோல தோல்வியடைந்தவர்கள் எல்லோரிடமும் சிறப்பான பண்புகள் இருக்கின்றன. அத்தகைய பண்புகளை தவிர்த்தால் தோல்வியைத் தவிர்க்கலாம்.
வெற்றி என்பது புரியாத புதிர் இல்லை. மாறாக, சில அடிப்படை கொள்கைகளை விடாது தொடர்ந்து பயன்படுத்துவதால் வரும் விளைவே வெற்றியாகும்.
தோல்வி என்பது ஒரு சில தவறுகளை திரும்பத் திரும்பச் செய்வதன் பலனாகும்.
வெறுமனே இவ்வுலகில் வாழ்வது மட்டுமே வெற்றி இல்லை. பல விஷயங்கள் உள்ளன:
•உயிர் வாழ்வது மட்டும் போதாது - வாழ்க்கையை முழுவதுமாக வாழ வேண்டும்.
•மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாது - உணரவேண்டும்.
•பார்ப்பது மட்டும் போதாது - கருத்துடன் கவனிக்கவேண்டும்.
•படித்தால் மட்டும் போதாது - கருத்துகளை உள்வாங்கவேண்டும்.
•பேச்சை கேட்பது மட்டும் போதாது - வார்த்தைகளை உணரவேண்டும்.
•வார்த்தைகளை உணர்ந்தால் மட்டும் போதாது - முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும்.
No comments
Thanks