Advertisement

Breaking News

Breaking News - தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 3 போலீசார் சிறையிலடைப்பு


தந்தை, மகன் கொலை வழக்கு:

 மேலும் 3 போலீசார் சிறையிலடைப்பு

03.07.2020




     தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்த ஜெயராஜ் 60, அலைபேசி கடை நடத்திவந்த அவரது மகன் பென்னிக்ஸ் 31, ஊரடங்கு காலத்தில் நீண்டநேரம் கடையை திறந்திருந்ததாக, ஜூன் 19ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் விசாரணையின்போது கடுமையாக தாக்கினர். பின்னர் மறுநாள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்தனர்.





இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதில் எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், எஸ்.ஐ., ரகுகணேஷ், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரை நேற்று கைது செய்துனர். .

இந்நிலையில் இன்று இன்ஸ்பெக்டர். ஸ்ரீதர், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை தூத்துக்குடி மருத்துவமனையில் பரிசோதனை நடத்திய பின்னர் கோர்ட்டில் நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி ஜூலை 16 வரை கோர்ட் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.



போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை:ஐகோர்ட் கிளை

இதனிடையே மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது: போலீசார் உளவியல் ரீதியாக மற்றும் உடல்ரீதியாக உறுதியாக இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை அடுத்த ஐந்து ஆண்டிற்கும் தொடர வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.

கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நடத்திய விசாரணை அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்,பி அனில்குமாரிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விசாரணைக்கு பின் நீதிமன்ற சொத்துஅறையில் பத்திரமாக வைக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட்கிளை பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


20 கோடி வாடிக்கையாளர்களை இழந்த டிக்டாக்: ரூ 45,000 கோடி நஷ்டம்

   சமீபத்தில் லடாக் எல்லையில் சீனா நடத்திய அடவாடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த நம் வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 42 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் நாடெங்கிலும் சீனாவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்





இதையடுத்து மத்திய அரசு டிக்டாக், ஷே ர்சாட் உள்ளிட்ட 59 சீனசெயலிகளுக்கு தடை விதித்தது. இந்த நடவடிக்கையால் டிக்டாக் இந்தியாவில் மட்டும் 20 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது. இதனால் டிக்டாக் தாய் நிறுவனமான 'பைட் டான்ஸ்'க்கு ரூ 45,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ' கடந்த மாதம் நடந்த இந்திய சீன எல்லைப் பிரச்னையால் சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த நடவடிக்கையால் டிக்டாக் தய் நிறுவனமான பைட் டான்ஸ் ரூ 45,000 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் மட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட செயலிகளின் தாய் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இழப்பை சந்தித்துள்ளது. கடந்த சில வருடங்களாக பைட்டான்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ 7,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் சிறிய அளவிலான வீடியோக்களை டிக்டாக் பகிர்கிறது. இதே நிறுவனம் சமூக வலைதளம் போல் செயல்படும் ஹலோ செயலியை இந்திய சந்தையை குறி வைத்து அறிமுகம் செய்தது. விகோ வீடியோ எடிட்டிங் செயலியும் இந்நிறுவனத்தின் செயலி தான்.




மொபைல் செயலி பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவரின் தரவுப்படி கடந்த மே மாதத்தில் மட்டும் உலக அளவில் டிக்டாக் 12 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக்கின் பங்கு 20 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவைப் போல் இரு மடங்காகும்.


இந்தியாவில் ஒரே நாளில் 19,148 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது





   இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,85,493 ல் இருந்து 6,04,641 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 434 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 17, 834 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:






                           https://nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks