Advertisement

Breaking News

Breaking News - என் எல் சி யில் பாய்லர் வெடித்து 5 பேர் பலி

என் எல் சி யில் பாய்லர் வெடித்து 5 பேர் பலி





   நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.






ஏற்கனவே கடந்த மே மாதம், 6வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.


ஈரான் மருத்துவமனையில் தீ விபத்து: 13 பேர் பலி

டெஹ்ரான்:ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.




ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 13 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன.






மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அவை தொடரந்து வெடித்து சிதறியபடி இருக்கிறது.இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.



கராச்சி தாக்குதலின் பின்னணியில் இந்தியா: இம்ரான்கான் அடுத்த பொய்





      கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியில், சண்ட்ரிகர் சாலையில் அமைந்துள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் ஜூன் 29ம் தேதி, பயங்கரவாதிகள் நான்கு பேர், வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.






இத்தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாக்., பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பேசியதாவது: மும்பையில் என்ன நடந்ததோ அது பாகிஸ்தானிலும் நடக்க வேண்டும் என இந்தியா நினைக்கிறது. நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. கடந்த சில மாதங்களாகவே என் அமைச்சரவைக்கு இந்தத் தாக்குதல் குறித்துத் தெரியும். நான் என் அமைச்சர்களிடத்தில் தகவல் தெரிவித்தேன். நாங்கள் முழுமையாக தயாராக இருந்தோம். சதியை முறியடித்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு அவர் பேசினார்.




                     https://nmsfriendsassociation.blogspot.com/

No comments

Thanks