Advertisement

Breaking News

M-Sand - எம்சாண்ட் (M-Sand) பயன்படுத்தலாமா? கூடாதா?

எம்சாண்ட் (M-Sand) பயன்படுத்தலாமா? கூடாதா?


மணல் இன்றைய தமிழக கட்டுமானத்துறையின் பெரிய தலைவலி ஆகிவிட்ட கட்டுமான பொருள்.  
நாம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இப்பிரச்சினைக்கு தீர்வாகவே தற்போது எம்சாண்ட் (M-Sand) பயன்பாட்டுக்கு வந்துள்ளது...

எம்சாண்ட் தயாரிக்கும் முறை:
எம்சாண்ட் இயற்கையான கருங்கல் பாறைகளை உடைத்து பொடியாக்கி அவற்றை சல்லடை கொண்டு சலித்து பின் நன்னீரால் கழுவி அதில் உள்ள பவுடர் போன்ற மண் மற்றும் கழிவுகள் நீக்கப்பட்டு தயாரிக்க படுகிறது.  இது எம்சாண்ட் (Manufactured Sand ) என அழைக்கப்பட்டாலும் அரசால் CS Sand (Crushed Stone Sand) என்ற பெயரிலேயே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு தனது கட்டுப்பாட்டில் நடக்கும் அனைத்து கட்டுமான வேலைகளுக்கும் எம்சாண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென உத்தரவே பிறப்பித்து விட்டது.

எம்சாண்ட்டின் உறுதித்தன்மை :
இம்மணல் செயற்கையாக உருவாக்குவதால் இதன் முனைகள் கூறாக உள்ளது அதனால் சிறந்த கிரிப் இருக்கின்றது. இயற்கை மணல் என்றால் கூட அதன் முனைகள் மழுங்கி இருக்கும்.  கருங்கல் துகள் என்பதால் சிறந்த திட தன்மையுடன் உறுதியாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது கட்டுமானத்தின் எந்த வேலைக்கும் இது சிறந்ததாக உள்ளது. பூச்சு வேலைகளுக்கு இதற்கு மாற்றாக மேலும் சிறிய அளவிலான பாறை துகள் (P-Sand)  பயன்படுத்தப்படுகிறது.  

இந்த எம்சாண்ட் கட்டுமான வேலைக்கு மிக சிறந்த ஓன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இதை தாராளமாக அணைத்து கட்டுமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். 


No comments

Thanks