Advertisement

Breaking News

Breaking News - இந்தியாவில் வெள்ளத்திற்கு பலி: ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்


இந்தியாவில் வெள்ளத்திற்கு பலி: ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்


23.07.2020


   வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து டில்லி, அசாம், பீஹார், உ.பி., உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வடமாநிலங்களில் மழை வெள்ளத்தி்ற்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.







இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு தூதரகம் வாயிலாக தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.


மக்களுடன் தொடர்பில் இருங்கள்: புதிய எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை




    சமூக வலைதளங்கள் வழியே மக்களிடம் தொடர்பில் இருங்கள் என, ராஜ்யசபாவுக்கு தேர்வான பா.ஜ., புதிய எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 45 பேருக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களில், 36 பேர் புதுமுகங்கள். பா.ஜ.,விலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா உட்பட, 19 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து புதிதாக தேர்வான எம்.பி.,க்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.





அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

   அரசு தொடர்பான தொள்கைகள் மற்றும் பிற தகவல்களை பற்றி புதிதாக தேர்வான எம்.பி.,க்கள் நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும். பார்லி.,யிலும், பொதுமக்கள் மத்தியிலும், திறம்பட செயல்படவேண்டும். சமூக வலைதளங்கள் வழியே மக்களிடம் தொடர்பில் இணைந்திருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


                                   https://nmsfriendsassociation.blogspot.com


No comments

Thanks