Advertisement

Breaking News

Breaking News - இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசி தயாரித்து வழங்க முடியும்: பில் கேட்ஸ்



இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசி தயாரித்து வழங்க முடியும்: பில் கேட்ஸ்


 இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.



இதுகுறித்து தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிகப்பெரும் சவாலாக உள்ளது. கொரோனா பரவலின் முதல்கட்டத்தில் தான் இந்தியா தற்போது வரை உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் தாமாக முன்வந்து பங்களித்து வருகின்றனர்.




இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு துறை அதிக பலம் வாய்ந்தது. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவில்தான் நடக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும் மருந்து தயாரிப்புக்கான சிஇபிஐ குழுமத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பினர். இந்தியாவால், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும். அங்கு சீரம் இன்ஸ்டிடியூட், பயோ இ, பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் உள்ளன.

இறப்பு விகிதத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்திய அரசுடன் இணைந்து எனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், உ.பி., பீகார் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி


 ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ), மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை துவங்கியது. அபுதாபி சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி, பரிசோதனை முயற்சியாக போடப்பட்டது.



யுஏஇ.,யில் சுகாதார அமைச்சகத்தின் கீழ், அபுதாபியின் ஜீ42 மற்றும் சீனாவை சேர்ந்த சீனோபார்ம் இணைந்து, கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வந்தன. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி மேற்கொள்ளப்பட்ட இந்த தடுப்பூசியின் முதல் இரு கட்ட பரிசோதனைகள் சீனாவில் நடந்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு 28 நாட்களில் செலுத்தப்பட்ட 2 டோஸ் மருந்துகளுக்கு பின், கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் உருவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு யுஏஇ தேர்வு செய்யப்பட்டு, அங்கு சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அபுதாபியில் இன்று நடந்த 3ம் கட்ட பரிசோதனையில், அபுதாபி சுகாதாரத் துறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீது, முதல் தடுப்பூசியை, பரிசோதனை முயற்சியாக போட்டுக் கொண்டார். அவரை தொடர்ந்து துணை செயலர் ஜமால் அல் ஹாபி தடுப்பூசியை ஏற்றுக் கொண்டார்.




இந்த தடுப்பூசிகள் வெற்றி பெறும்பட்சத்தில், விரைவில் யுஏஇ மக்களுக்கு கொரோனா தடுப்பூசியாக பயன்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3ம் கட்ட பரிசோதனை முயற்சியில், அபுதாபி, அல் அமீனில் வசிக்கும் 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள், தன்னார்வலராக பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 15,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படும். தன்னார்வலர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முயற்சிகள் 3 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும்.

                               https://nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks