Advertisement

Breaking News

Breaking News - நேற்று நடந்தது 2 வது சந்திர கிரகணம்


 நேற்று நடந்தது 2 வது சந்திர கிரகணம்





  சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வே சந்திர கிரகணம். கடந்த ஜனவரி 10-ம் தேதி இரவு 10.37 மணிக்கு துவங்கி 4 மணி நேரம் 5 நிமிடங்கள் நீடித்து மறுநாள் அதிகாலை 2.42 மணிக்கு முடிவடைந்தது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்களால் பார்த்தனர்.இது இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் என அழைக்கப்பட்டது. 






இந்நிலையில், இரண்டாவது பெனும்ப்ரல் சந்திர கிரகணம், நேற்று  நள்ளிரவு இந்திய நேரப்படி 11.15 மணி முதல், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.34 மணி வரை தெரிந்தது . சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்தது .

கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனும்ப்ரல் (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகக் காணமுடிந்தது .

சவுதியில் 2,591 பேருக்கு கொரோனா


ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,591 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 31 பேர் பலியாகினர் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.





கொரோனா வைரசின் தாக்கம் சவுதி அரேபியாவில் சற்று அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் பல்வேறு கட்டங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை கூறுகையில், சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 2,591 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,748 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 31 பேர் நோய் தொற்றால் பலியாகினர். தொடர்ந்து இதுவரை சவுதியில் 642 பேர் பலியாகினர்.





சவுதியில் 1,651 பேர் முழுமையாக குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 70,616 ஆக உயர்ந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் ரியாத்தில் 719 பேர், ஜெட்டாவில் 459 பேர், மற்றும் தீவிர சிகிச்சையில் 1,412 பேர் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




ரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் கொந்தளிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் தொழிற்சாலை ஒன்றில் டேங்கர் வெடித்ததால் 20,000 டன் டீசல் ஆற்றில் கலந்தது.





ரஷ்யாவின் கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள தொழில் நகரம் நோரில்ஸ்க். இது மாஸ்கோவிலிருந்து 2,900 கி,மீ., தொலைவில் உள்ளது. இங்கு நோரில்ஸ்க் நிக்கல் குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் எண்ணெய் டேங்க் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. அதனால் டேங்கிலிருந்த 20,000 டன் டீசல் 12 கி.மீ., சுற்றளவுக்கு பரவியது. வெளியேறிய டீசல் ஆர்டிக் கடலில் கலக்கும் அம்பர்னாயா மற்றும் டால்டிகன் ஆறுகளில் கலந்தது. டீசல் கலந்ததால் ஆற்று நீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியது. ஆற்றில் வாழும் உயிரினங்களும் இதனால் மடிந்து வருகின்றன.

எண்ணெய் டேங்க் வெடித்து இரு நாட்கள் கழித்து தான் அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதுவும் சமூக வலைதளத்தில் வெளியாகியிருந்த போட்டோக்களை பார்த்து தான் ஆறுகளில் எண்ணெய் கலந்த சம்பவம் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. ஆற்றினை ஆய்வு செய்த ரஷ்ய மீன்வளத் துறை அதிகாரிகள் ஆற்றினை பழைய நிலைக்கு கொண்டு வர 10 ஆண்டு காலம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.





  இச்சம்பவம் தொடர்பாக காணொளியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ' டீசல் எண்ணெய் ஆற்றில் கலந்த விஷயம் இரு நாட்களுக்கு பிறகு தான் தெரிந்துள்ளது. இது தான் நீங்கள் வேலை பார்க்கும் லட்சணமா' என்று திட்டியுள்ளார். இதையடுத்து அம்பர்னயா ஆறு மற்றும் டால்டிகன் ஓடும் பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.



  இந்நிலையில் நோர்லிஸ்க் நிக்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். அம்பர்னாயா மற்றும் டால்டிகன் ஆறுகளை சுத்தப்படுத்துவது கடினம், இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், உயிரினங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு தொற்று: பாதிப்பு 2.26 லட்சத்தை கடந்தது





  புதுடில்லி:கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்



மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 77,793 2,710
தமிழகம் - 27,256 -220
டில்லி - 25,004-650
குஜராத் - 18,584 -1,155
ராஜஸ்தான் - 9,862 - 213
உத்தர பிரதேசம் - 9,237 - 245
மத்திய பிரதேசம் - 8,762 - 377
மேற்கு வங்கம் - 6,876-355
பீஹார் - 4.493 -29
கர்நாடகா- 4,320 - 57
ஆந்திரா - 4,223 - 71
ஹரியானா - 3,281 - 24
தெலுங்கானா - 3,147 - 105
காஷ்மீர் - 3,142 -105
ஒடிசா- 2.478-07
பஞ்சாப்- 2,415-47
அசாம் - 1,988-04
கேரளா - 1,588 - 14
உத்தரகாண்ட் - 1,153-10
ஜார்க்கண்ட்-783 -06
சத்தீஸ்கர்-756 -02
திரிபுரா-644-0
ஹிமாச்சல பிரதேசம் -383 - 05
சண்டிகர் -301-05
கோவா-106-0
மணிப்பூர்-124-0
\லடாக்-90-01
புதுச்சேரி- 82 - 0
நாகலாந்து-80-0
அருணாச்சல பிரதேசம்-42-0
அந்தமான-33-0
மேகாலயா-33-1
மிசோரம்-17-0
தாதர் மற்றும்நாகர் ஹவேலி-12-0

சிக்கிம்-02-0

ராணுவவீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை:காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் தியாக உணர்வோடு செயல்பட்டு வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.





தந்தையின் இறுதி சடங்கில் 3 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பெண்!






இம்பால்: சென்னையிலிருந்து மணிப்பூர் திரும்பி தனிமை முகாமிலிருந்த பெண்ணுக்கு, அவரது இறந்த தந்தையின் உடலுக்கு இறுதி விடை கொடுக்க மூன்று நிமிடங்கள் மட்டுமே கிடைத்தது.

மணிப்பூரை சேர்ந்தவர் 22 வயதான அஞ்சலி ஹமங்தே. சென்னையில் வேலைப்பார்த்து வந்த இவர், மே 25 அன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் மூலம் தனது குடும்பத்தினரை காண மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு வந்தார். அவருடன் பயணித்த மற்றொரு பயணிக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அஞ்சலி ஹமங்தே தனிமை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவரது தந்தை கடந்த புதனன்று காலமானார். இதனை கேட்டு தனிமை முகாமிலிருந்த அஞ்சலி உடைந்துபோனார். உயிருடன் இருக்கும் போது அவரை காண முடியவில்லை என்ற சோகத்தில் இருந்த அவருக்கு, தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க அதிகாரிகள் அனுமதி தந்தனர்.






முழு கவச உடைகளுடன் இம்பாலில் இருந்து காங்போக்பி நகருக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு சவப்பெட்டியில் கிடத்தப்பட்ட தந்தையை கண்டு கதறி அழுதார் அஞ்சலி. அவரை தட்டிக்கொடுத்து தேற்ற முடியாத நிலையில் அவரது தாயாரும், நண்பர்களும் இருந்தனர். சரியாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்ததும், மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் அவரை மீண்டும் தனிமை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மணிப்பூரில் வியாழன் நிலவரப்படி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.


திருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.




  கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் சில தளர்வுகள் காரணமாக வரும் 8 முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர அரசு நிபந்தனைகளின்படி திருமலையில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் தரிசன வரிசைகள் தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் முகக் கவசம் சானிடைசர் பயன்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.




வரும் 10 ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வரும் 11ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் 3,000 தரிசன டிக்கெட்டுகளும், திருப்பாதி கவுண்டர்களில் 3,000 டிக்கெட்டுகளும் வழங்கப்படும். காலை 6.30 முதல் இரவு 7.30 வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.


கேரளாவில் ஆன்லைன் வகுப்புக்கு தடை ; ஐகோர்ட் மறுப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க முடியாது என அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.




கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டமாக நடவடிக்கையை எடுத்து வருகிறது. நோய் அச்சுறுத்தலால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கேரளாவில் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க மாநில அரசு திட்டமிட்டு அதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டது. ஆனால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன் அவசியம். இந்நிலையில் மொபைல் இல்லாததால் பாடத்தை கவனிக்க முடியவில்லை என மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துள்ளார். இதனால் பல மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் அவதியடைந்துள்ளனர்.

தொடர்ந்து, மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி கிரிஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியதாவது : கேரளாவின் உள்ளடங்கிய பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள், மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு தேவையான சாதனங்கள் வழங்கப்படவில்லை. ஏழை எளியவர்களால் மொபைல் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என்பது கடினம். எனவே கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசு மற்றும் கேரள கல்விசார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆலோசனை வழங்குமாறு கோரியிருந்தார்.





இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.


பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா

இஸ்லாமாபாத்: பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89,249 ஆக அதிகரித்துள்ளது.







கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கொரோனாவுக்கு 68 பேர் பலியானதையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்தது. அதே நேரம் கொரோனாவிலிருந்து இது வரை 31,198 பேர் குணமைடைந்தனர்





ஊரடங்கு தளர்வுக்கு பின் பாக்.கில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சிந்து மாகாணத்தில் 33,536 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 33,144 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 11,890 பேரும், பலூசிஸ்தானில் 5,582 பேரும் கில்கிட்-பால்டிஸ்தானில் 852 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்


     மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
                 
                          https://nmsfriendsassociation.blogspot.com





No comments

Thanks