கபடி - தமிழர்களின் வீர விளையாட்டு - Kabaddi
கபடி - தமிழர்களின் வீர விளையாட்டு - Kabaddi
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.
இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே. மீதி ஐவரும் ரிசர்வ் .(மாற்று விளையாட்டு வீரர்கள்)
'டாஸ்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இரண்டாம்பகுதியில் மாற்றி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.
பாடி வருபவரின் கை,கால், இடுப்புப்பகுதிகளை மட்டும்தான் பிடிக்கவேண்டும். அவர் வாயை பொத்தக்கூடாது. மீறிச் செய்தால் அது ஃபவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும்.
ஒருவர் ,பல முறை ரைடு போகலாம். ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட். எதிரணியில் உள்ள அனைவரையும் 'அவுட்' செய்தால், இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள்
விதிமுறை
கபாடி ஆட்டம் “குடுகுடு டுடு சடுகுடு” என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற கபடி ஆட்டம், கீழ்க்கண்ட விதிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு ஆடப்படுகிறது. - -
1. ஆடுகளத்தின் அமைப்பு (1) கபாடி ஆடுகளமானது, சமதரையாகவு ம், இயன்றவரை மென்தரையாகவும், உரப்பொருளாலும் மரத்துளாலும் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். -
ஆண்கள் விளையாடுவதற்குரிய ஆடுகளமானது 1250 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்கும். சரியாக நீளப்பகுதியின் இடையில்குறிக்கப்பட்டு, இரண்டாகப்பிரிக்கப்படும் ஆடுகளத்தின் ஒவ்வொரு பகுதியும் (Half) 6.25 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாக விளங்கும்.
பெண்களுக்கும், 57 கிலோகிராம் எடைக்கும் குறைந்த ஆண்கள்
ஆடும் ஆடுகளத்தின் அளவானது, 11 மீட்டர் நீளமும், 8 மீட்டர்
அகலமும் கொண்டதாக இருக்கும். இரண்டாகப் பிரிக்கப்படும் ஆடுகளத்தின் ஒரு பகுதியின் அளவு 5.50 மீட்டர் நீளம் x8 மீட்டர் அகலம் கொண்டதாக விளங்கும்.
(2) ஆடுகளத்தின் இரு புறங்களிலும் 1 மீட்டர் அகலத்தில் துண்டாகக் காணப்படும் பகுதிகள் தொடரிடம் (Lobby) என்று அழைக்கப்படும். . . .
(3) பாடித் தொடும் கோடு என்பது (Baulk Line) அந்த நடுக்கோட்டிலிருந்து ஆடுகளத்தின் இருபுறமும் நடுக்கோட்டிற்கு இணையாகக் கிழிக்கப்பட்டு இருக்கும்.
ஆண்களுக்கான ஆடுகளத்தில் நடுக்கோட்டிலிருந்து 3.25 - மீட்டர் தூரமும், பெண்கள் அல்லது 57 கிலோ கிராம் எடைக்குக் குறைந்த ஆண்களுக்கான ஆடுகளத்தில் 2.25 மீட்டர் தூரத்திலும், தொடர்ப் பகுதியைத் தவிர, கோடுகள் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(4) ஆடுகளத்தின் எல்லைகளையும், பிற பகுதிகளையும் குறித்துக் காட்டுகின்ற கோடுகள் அனைத்தும் தெளிவாகவும் 2 அங்குலத்திற்கு (5 செ.மீ) மிகாமலும் இருக்க வேண்டும்.
மைதானம் :
கபாடியின் விளையாட்டு மைதானம் மரத்தூள் மண் ஆகியவற்றால் ஆனது மட்டமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
தரை 13 மீட்டர் x 10 மீட்டர் இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் ஜூனியர்ஸுக்கு அளவீட்டு 11 மீட்டர் x 8 மீட்டர் இருக்க வேண்டும். வரையப்பட்ட நடுப்பகுதி விளையாட்டு மைதானத்தை இரண்டு பகுதிகளாகபிரிக்கிறது.
விளையாட்டு மைதானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மீட்டர் அகலமுள்ள துண்டு இருக்கும், இது லாபி என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு பாதியிலும், நடுப்பகுதியில் இருந்து சுமார் 3 மீட்டர் தூரத்திலும் அதற்கு இணையாகவும் தரையின் முழு அகலத்தின் கோடுகள் வரையப்படும். இவை பால்க்( Baulk)கோடுகள்.
பயன்பாடு
விளையாட்டு என்பது ஒருவனுக்கு அவனது ஓய்வு நேரங்களை நல்வழியில் செலவிடவே அமைகிறது. அனைத்து இனத்தவர்களுக்கும் அவர்களது பாரம்பரிய விளையாட்டு இருப்பதுபோல் நமக்கும் பாரம்பரிய விளையாட்டுகள் இருக்கின்றன.
நமது பாரம்பரிய விளையாட்டுகளில் எப்பொழுதும் மக்கள் மனத்தில் முதலிடம் வசிக்கும் ஒரே விளையாட்டு ‘கபடி’. இந்தக்காலத்தில் கபடி விளையாட்டை விளையாடும் விளையாட்டாளர்கள் யாரும் கபடியின் சிறப்பைத் தெரிந்து கொண்டு விளையாடுவதில்லை. அனைவரும் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரிலே கபடி பயிற்சிக்குச் செல்கின்றனர். ஆனால், இதன் மூலம் கிட்டும் பயன் ஒருவருக்குச் சுவாசிப்பதிலும் நீந்துவதிலும் உதவும். அதுமட்டுமின்றி, குழு ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் இது உருவாக்கும்.
அடுத்ததாக, பல்லாங்குலி. பல்லாங்குலியை ஒரு முறைக்கு இருவரே விளையாட முடியும். பண்டையக் காலத்தில் வீட்டில் வேலை செய்து முடித்த பின் பெரும்பாலான பெண்கள் இவ்விளையாட்டில் அதிக நாட்டம் கொள்வார்கள். இவ்விளையாட்டை விளையாடும் போது நாம் தெளிவாக ஒரு வேலையைச் செய்யக்கூடிய ஆற்றல் பெருக்குகிறோம். ஆனால், இவை அனைத்தையும் அறியாத இன்றைய கால பெண்கள் வீட்டில் வெறுமனே அமர்ந்து நாடகம் பார்க்கிறார்கள்.
இறுதியாக, சிலம்பக் கலை. இது முந்தையக் காலத்தில் ஆண்களால் விளையாடப் பட்ட ஒரு வீர விளையாட்டாகும். இதில் ஒரு கம்பை வைத்துப் பல திசைகளில் அதி வேகமாகச் சுழற்றுவர். இதன் மூலம், அவர்களின் கைப்பகுதியில் இருக்கக்கூடிய நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். அதுமட்டுமின்றி, அவர்கள் இவ்விளையாட்டைத் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
இவற்றைப் போல, நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதை அறியாத மக்கள், திறன்பேசியில் உள்ள விளையாடிக் கொண்டு தங்களுக்கான வினையைத் தானே தேடிக் கொள்கின்றனர். எனவே, நம் பாரம்பரிய விளையாட்டைப் பேணி காக்க வேண்டும்.
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks