Breaking News - கந்த சஷ்டி கவசம் விவகாரம் - கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது
கந்த சஷ்டி கவசம் விவகாரம் - கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது
16.07.2020
இதனையடுத்து கந்த சஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை நீக்கியது. இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ராஜஸ்தான் அரசியலில் தொடரும் குழப்பம் : 19 எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர், 'நோட்டீஸ்':
துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டுக்கும்,அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருக்கும், தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு, ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர், சி.பி.ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டுள்ளார்.இதையடுத்து, ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம், முதல்வர், கெலாட், காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, ஜெய்ப்பூரில் உள்ள தன் வீட்டில் கூட்டினார்.இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, கட்சியின் கொறடா, மகேஷ் ஜோஷி உத்தரவிட்டார். ஆனால், சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும், இரண்டு அமைச்சர்கள் உட்பட, 18 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும், சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகர், சி.பி.ஜோஷிக்கு, காங்., கட்சியின் கொறடா, மகேஷ் ஜோஷி எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும், 18 எம்.எல்.ஏ.,க்களும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசை கவிழ்க்கும் சதிச் செயலில், திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர்.எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிட்டும், பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ராஜஸ்தான் அரசை கவிழ்க்க, பா.ஜ., பல வழிகளில் முயற்சித்து வருகிறது. இதற்கு, உறுதுணையாக பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனால், 19 பேரையும், அரசியல் சட்டத்தின், 10வது பிரிவின் கீழ், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருக்கும், தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு, சபாநாயகர், சி.பி.ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.மேலும், நோட்டீசுக்கு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே கூறியதாவது: சச்சின் பைலட்டுக்கு, காங்கிரஸ் இன்னும், கதவை மூடவில்லை. அவர், தன் தவறை உணர வேண்டும். பா.ஜ.,வின் வலையில் விழாமல், அவர், மீண்டும் காங்கிரசில் சேர, ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக, கோவிந்த் சிங் தோத்சாரா நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கட்சியின் மாவட்ட மற்றும் வட்டார கமிட்டிகள், நேற்று கலைக்கப்பட்டன. 'புதிய கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும்' என, கட்சியின் பொதுச் செயலர், அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.
தகுதி நீக்கம்செய்ய முடியுமா?
சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பது, தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.'கட்சியிலிருந்து தானாகவே விலகும் எம்.எல்,ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்.'சபையில், கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஓட்டளித்தாலோ, அல்லது ஓட்டளிப்பை புறக்கணித்தாலோ, அவரை தகுதி நீக்கம் செய்யலாம்' என, தகுதி நீக்கம் தொடர்பாக, அரசியல் சட்டத்தின், 10வது பிரிவு கூறுகிறது.'சபையில் கட்சி உத்தரவை மீறாததால், தங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது' என, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்கூறுகின்றனர்.'கொறடா பிறப்பித்த உத்தரவை மதிக்காமல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். 'மேலும், கெலாட் அரசு பெரும்பான்மையிழந்து விட்டது.'சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பைலட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்கள், பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். அதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.'தகுதி நீக்கும் விவகாரத்திலிருந்து, சபாநாயகரை விடுவிக்க வேண்டும். இந்த விவகாரத்தால், சபாநாயகர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருகிறது' என, ராஜஸ்தான் சபாநாயகர், சி.பி ஜோஷி, முன்பு நடந்த சபாநாயகர் மாநாட்டில் கூறியுள்ளார். இப்போது, அவரிடமே, தகுதி நீக்க விவகாரம் வந்துள்ளது.
பா.ஜ.,வில் இணைய மாட்டேன்'
பா,ஜ.,வில் இணையும் எந்தவொரு திட்டமும், என்னிடம் இல்லை,'' என, சச்சின் பைலட் கூறியுள்ளார். தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான், பா.ஜ.,வில் இணைய மாட்டேன். என்னை இழிவுப்படுத்தவே, பா.ஜ.,வுடன் தொடர்பு படுத்துகின்றனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக உழைத்த நான், சொந்த கட்சிக்கு எதிராகவா செயல்பட போகிறேன். நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். என் எதிர்கால நடவடிக்கை குறித்து, முடிவு செய்ய வேண்டும். ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்றுவதையே முக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு, சச்சின் பைலட் கூறினார்
கெலாட்டுக்கு நுாலிழை பெரும்பான்மை
ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் அரசுக்கு, நுாலிழை பெரும்பான்மை உள்ளது தெரிய வந்துள்ளது.ராஜஸ்தான் சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 200. இதில், காங்கிரசுக்கு, சபாநாயகர் உட்பட, 107 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்துக்கு, 101 உறுப்பினர்கள் தேவை. முதல்வர் கெலாட், நேற்று முன்தினம் கூட்டிய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், காங்கிரசை சேர்ந்த, 88 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். 10 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், பாரதிய பழங்குடியின கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலா, இரண்டு எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால், கெலாட் அரசுக்கு, 104 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பது உறுதியானது. எனினும், பாரதிய பழங்குடியின கட்சியின் இரண்டு எம்.எம்.ஏ.,க்களும், 'அரசுக்கு ஆதரவு தருவது பற்றி, சரியான நேரத்தில் முடிவு செய்வோம்' என, பின்னர் தெரிவித்தனர். அதனால், சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், கெலாட் அரசு, நுாலிழை வித்தியாசத்தில் வெற்றி பெற, அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒரு வேளை, பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தால், சட்டசபையின் பலம், 181 ஆக குறைந்து விடும். அப்போது பெரும்பான்மை பலம் பெற, 91 எம்.எல்.ஏ.,க்கள் போதும்.எதிர்கட்சியான பா.ஜ.,வுக்கு, 75 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலம் பெற, 16 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவது, பா.ஜ.,வுக்கு எளிதல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பா.ஜ.,வை ஆதரித்தால் மட்டுமே, பெரும்பான்மை பலம் பெற முடியும். அதனால், 19 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், கெலாட் அரசு தப்பித்து விடும் என, தெரிகிறது. ஆனால், கெலாட் ஆதரவு காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பைலட் பக்கம் தாவினால், நிலைமை மாறிவிடும்.
ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
ஜூலை 20 முதல் 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் நாடு முழுவதும் செயல்பட துவங்கும்' என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் தற்போது படிப்படியாக இயங்க துவங்கி உள்ளன.விமான சேவை நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்து செயல்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏர் - இந்தியா அலுவலகங்கள் ஜூலை 20 முதல் முழுவீச்சில் செயல்பட துவங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலகங்களுக்கு வராதவர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ஏர் -- இந்தியாவின் நிரந்தர ஊழியர்களுக்கு செயல் திறன், உடல் நலன் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஊதியமில்லா கட்டாய விடுப்பு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
No comments
Thanks