Advertisement

Breaking News

Health Tips... சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள்…! Health Tips....


சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள்…! Health Tips....





தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் கூடும்.

உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

அரை டீ ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியை க்லந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யுங்கள். பின் முகத்தை கழுவிவிடுங்கள். இப்படி செய்தால் முகத்தின் நிறம் மாறும்.

பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

காய்ச்சாத பாலை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும். தினமும் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகம் கழுவி விடுங்கள். எல்லா சருமத்திற்கும் இது பொருத்தமாக இருக்கும்.



                                https://nmsfriendsassociation.blogspot.com

















No comments

Thanks