Advertisement

Breaking News

Breaking News - இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருந்து: மத்திய அரசு



இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருந்து: மத்திய அரசு


10.07.2020


    இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக மேலும் ஒரு மருந்து சோதனை அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்துடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.





முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும், ஆக., 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தில், இந்த தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்யும் வகையில், பரிசோதனைகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இதே போல், மேலும் ஒரு தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.





இதுகுறித்து சுகாதார துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் தவிர மேலும் ஒரு மருந்து ஆய்வில் உள்ளது. ஐ.சி.எம்.ஆர்., உடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட, காடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் முயற்சித்து வருகிறது.

இரு மருந்துகளும், முறையான ஆய்வுக்கு உட்படுத்தி, விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்ய உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை




    இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டது, இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது, நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது காரணம் இந்தியா தான் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது போன்வற்றால் இந்திய நேபாள நாட்டிற்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் இருந்து வருகிறது.






இந்நிலையில் நேபாளம் அரசுக்கு எதிராக இந்திய டி.வி. சானல்கள்தவறான பிரச்சாரம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.








சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி - ராஜ்நாத் சிங்






புதுடெல்லி,

இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சாலைப்போக்குவரத்தை மேம்படுத்த எல்லை சாலை கட்டமைப்பு நிறுவனம் மூலம், காஷ்மீர் உத்தரகண்ட், லடாக், பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் காஷ்மீரில் உள்ள அக்னூர் துறையில் நான்கு பாலங்களும், ஜம்மு - ராஜ்புரா பகுதியில் இரண்டு பாலங்களும் எல்லை சாலை கட்டமைப்பு நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய 6 பாலங்களையும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.


பின் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கூறியதாவது:-

இந்தியாவில் எல்லைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் ராணுவ வீரர்களின் தேவைகளை மனதில் கொண்டு, பல மேம்பாட்டு பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. ஜம்மு பிராந்தியத்தில் தற்போது சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் கட்டுமானத்தில் உள்ளது.

சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி எனவும் தொலைதூர பிராந்தியங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.



                                             சுபம்


               https://nmsfriendsassociation.blogspot.com







No comments

Thanks